சொந்த வீடு அமைய ஆடி செவ்வாயில் இதை செய்திடுங்கள்..!

Advertisement

ஆடி செவ்வாய் வழிபாடு

ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளி ஆனது மிகவும் சிறப்பு பெற்ற நாளாக ஆன்மீகத்தில் கருதப்படுகிறது. அதேபோல் இத்தகைய கிழமைகளில் வீட்டில் உள்ள பெண்கள் மனதில் நினைத்த காரியம் மற்றும் செல்வம் பெருக வேண்டும் என்றும் எண்ணி ஒவ்வொரு மாதிரியான பரிகாரத்தை செய்து வருகிறார்கள். அந்த வகையில் நாளை ஆடி செவ்வாய். இந்த ஆடி செவ்வாயில் சொந்த வீடு அமைய ஜோதிடத்தின் படி என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை தான் பார்க்கப்போகிறோம். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் சொந்த வீடு வாங்குதல் அல்லது கட்ட வேண்டும் என்பது பலருக்கும் உள்ள ஆசையாக இருக்கிறது. ஆகையால் இன்றைய பதிவினை படித்து செய்ய வேண்டிய பரிகாரம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

ஆடிப்பெருக்கு தேதி, நேரம் மற்றும் வழிபாட்டு முறை பற்றி தெரியுமா 

சொந்த வீடு அமைய பரிகாரம்:

ஆடி செவ்வாய் அன்று அதிகாலையில் முதலில் தலைக் குளித்து விடுங்கள். அதன் பிறகு உங்களுடைய பூஜை அறையினை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்பு பூஜை அறையில் உள்ள சாமி படத்திற்கு முன்பாக கோலம் போட்டு கொள்ளுங்கள்.

  1. அகல் விளக்கு- 6
  2. திரிநூல்
  3. வாழைப்பழம்- 5
  4. செங்கல்- 1
  5. வெற்றிலை- 6
  6. காய்ச்சிய பால்- 1 டம்ளர் 

இப்போது மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை எடுத்து வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த கோலத்தினை சுற்றி ஒவ்வொரு வெற்றிலையாக 6– யும் வைத்து விடுங்கள்.

இதனை தொடர்ந்து 2 குத்து விளக்கினை 5 முகம் இருக்குமாறு ஏற்றி கொள்ளுங்கள்.

கடன் பிரச்சனை தீர எளிய பரிகாரம்

அடுத்து அந்த வெற்றிலையின் மீது மஞ்சள் மற்றும் குங்கும பொட்டு சிவப்பு நிற பூக்கள் வைத்து அகல் விளக்கு வைத்து திரிநூல் போட்டு கிழக்கு முகம் பார்த்து விளக்கேற்றி கொள்ளுங்கள். பின்பு ஒரு செங்கலினை எடுத்துக்கொண்டு அதன் மேலே மஞ்சளை தடவி குங்கும பொட்டு வைய்யுங்கள்.

இவ்வாறு செய்த முடித்த பிறகு மஞ்சள் தடவிய செங்கல் மீது ஒரு வெற்றிலை வைத்து அதில் ஒரு அகல் விளக்கினை ஏற்றி விடுங்கள். மேலும் இந்த பரிகாரத்தை விடியற்காலை 04:30 முதல் 06:00 வரை அல்லது இரவு 07:00 முதல் 09:00 மணிக்குள் செய்ய வேண்டும்.

 aadi sevvai 2023 in tamil

அதன் பிறகு காய்ச்சிய பால் மற்றும் வாழைப்பழத்தினை வைத்து மனதார சொந்த வீடு அமைய வேண்டும் என்று முருகப் பெருமானை வேண்டி கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து உங்களுடைய குலதெய்வத்தினையும் வேண்டி கொள்ளுங்கள்.

மேலும் இந்த பரிகாரத்தை செய்து முடித்த பிறகு சொந்த வீடு அமைய வழக்கம் போல் முயற்சியினையும் செய்தால் சொந்த வீடு அமையும்.

ஆடி 18 அன்று பெண்கள் கட்டாயம் இதனை தவிர்க்க வேண்டும்

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement