சூரசம்ஹாரம் நாளில் செய்ய கூடாதவை.!

Advertisement

சூரசம்ஹாரம் நாளில் செய்யக்கூடாதவை | Don’ts of Soorasamharam in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சூரசம்ஹாரம் நாளில் செய்யக்கூடாத செயல்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். முருக பெருமான் சூபத்மன் என்னும் அசுரனை வதம் செய்த நாள் தான் சூரசம்ஹாரம். எனவே, முருகனின் வெற்றி விழாவாக சூரசம்ஹாரம் இருக்கிறது. கந்த சஷ்டி காலத்தின் கடைசி நாளாகவும் முக்கியமான நாளாகவும் இருப்பது தான் சூரசம்ஹாரம். இந்நாளில், முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து விதமான துன்பங்களும் நீங்கி, நன்மை உண்டாகும்.

முக்கியமாக பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும் பெண்கள் விரதம் இருந்து வழிபட்டால், முருகப்பெருமான் குழந்தை வரம் அளிப்பார். எனவே, கந்த சஷ்டியின் 7 நாட்களும் முருகப்பெருமானை நினைத்து வழிபட வேண்டும். அதேபோல், சூரசம்ஹாரம் நாளில் நாள் சில செயல்களை செய்வதை தவிர்க்க வேண்டும். ஆனால், இது பற்றி கந்தசஷ்டி விரதம் இருக்கும் பலருக்கும் தெரிவதில்லை.  சூரசம்ஹாரம் நாளில் நாம் செய்யும் சில தவறுகளால் நாம் இருக்கும் விரதத்திற்கே பலன் இல்லாமல் போகிறது. ஆகையால், சூரசம்ஹாரம் நாளில் என்னென்ன செய்ய கூடாது என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

சூரசம்ஹாரம் என்றால் என்ன.? அது தோன்றிய வரலாற்று கதை என்ன.?

சூரசம்ஹாரம் அன்று தவிர்க்க வேண்டியவை | Soorasamharam Naalil Seiya Koodathavai:

சூரசம்ஹாரம் அன்று தவிர்க்க வேண்டியவை

  • சூரசம்ஹாரம் நாளில் நாம் யாரிடமும் கோபபடக் கூடாது.
  • அனாவசியமான பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். முக்கியமாக தீய சொற்களை சொல்லுதல் என்பது கூடாது.
  • கெட்ட செயல்களை/கெட்ட எண்ணங்களை நினைப்பதும் செய்வதும் கூடாது.
  • ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி பிறரை திட்டுதல்/பேசுதல் கூடாது.
  • சூரசம்ஹாரம் நாளில், அசைவ உணவுகளை சாப்பிடுதை தவிர்க்க வேண்டும்.
  • பெண்கள், வெறும் நெற்றியுடன் இருக்க கூடாது. வெறும் நெற்றியுடன் இருந்தால் அது அமங்கலத்தை குறிக்கும்.
  • அன்றைய தினம், ஆண்கல பெண்கள் என இருவரும், நகம் வெட்டுவது, முடி வெட்டுவது போன்ற செயல்களை செய்ய கூடாது. முக்கியமாக, கர்ப்பிணி பெண்கள் இதுபோன்ற செயல்களை செய்தல் கூடாது.
  • சூரசம்ஹாரம் நாளில் பகலில் தூங்குதல் கூடாது.
  • கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள்/இல்லாதவர்கள் என அனைவரும் இந்த விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.

விரதம் இருப்பவர்கள், இல்லாதவர்கள் என அனைவரும் மேலே சொல்லப்பட்டுள்ள செயல்களை தவிர்த்துக்கொள்வது அவசியம். இதுபோன்ற செயல்கள் உங்களிடம் இருந்தால், அந்த கந்தனின் அருள் உங்களுக்கு கிடைக்காது. நீங்கள் விரதம் இருப்பதற்கு பலனே இருக்காது. ஆகையால், கந்த சஷ்டி நாள் மட்டும் சூரசம்ஹாரம் நாளில் முழுவதுமாக முருகப்பெருமானை நினைத்து வழிபட்டு நல்லதையே எண்ணுங்கள், நல்லதையே செய்யுங்கள்.!

சூரசம்ஹாரம் நடக்காத முருகனின் படை வீடு எது.? ஏன் அங்கு மட்டும் சூரசம்ஹாரம் நடக்கவில்லை.?

சூரசம்ஹாரம் அன்று திருமணம் செய்யலாமா.?

  • சூரசம்ஹாரம் நாளில் திருமணம் செய்யலாம் என்று சிலர் கூறுகிறார்கள். இன்னும் சிலர் சூரசம்ஹாரம் முடிந்த பிறகு திருமணம் போன்ற சுப காரியங்களை செய்யலாம் என்று கூறபடுகிறது.
  • ஏனென்றால், சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) தான் முருகன், தெய்வானை திருமணம் செய்தார். ஆகையால், சூரசம்ஹாரம் முடிந்த பிறகே திருமணம் செய்யலாம் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement