சூரசம்ஹாரம் வழிபடும் முறை, நேரம், விரத முறை,சொல்ல வேண்டிய மந்திரம்.!

Advertisement

சூரசம்ஹாரம் வழிபடும் முறை | Soorasamharam Viratham in Tamil 

ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சூரசம்ஹாரம் அன்று வழிபடும் முறை, நேரம், விரத முறை,சொல்ல வேண்டிய மந்திரம் ஆகியவை பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். சூரனை வதம் செய்வதற்காக நடத்திய போரே கந்த சஷ்டி விரதமாக நாம் கடைபிடித்து வருகிறோம். கந்த சஷ்டி விரதத்தின் நிறைவு நாளாக வருவதே சூரசம்ஹாரம். கந்த சஷ்டி எல்லா நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள், நிறைவு நாளான சூரசம்ஹார நாளிலாவது விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட வேண்டியது அவசியம்.

சூரசம்ஹார நாளில் விரதம் இருந்து வழிபட்டால் முருகனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அத்தனை நன்மைகளையும் அளிக்கும் சூரசம்ஹார நாளில், எப்படி விரதம் இருக்க வேண்டும்.? எப்படி முருகனை வழிபட வேண்டும். எந்த நேரத்தில் வழிபட வேண்டும்.? எந்த மந்திரத்தை கூற வேண்டும்.? என்று தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். ஆகையால், உங்களுக்கு பயனுள்ள வகையில், சூரசம்ஹாரம் வழிபடும் முறை, நேரம், விரத முறை,சொல்ல வேண்டிய மந்திரம் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

சூரசம்ஹாரம் எப்போது 2024.? நேரம் மற்றும் தேதி இதோ.!

கந்த சஷ்டி 6 ஆம் நாள் வழிபாடு | சூரசம்ஹாரம் வழிபாடு:

விரதம் இருக்கும் முறை:

  • கந்த சஷ்டி விரதத்தின் ஆறாவது நாள், முழு நேரமும் உணவு சாப்பிடாமல் உபவாசமாக இருக்க வேண்டும். அப்படி முடியாதவர்கள் பால் பலம் மட்டும் சாப்பிட்டாவது விரதம் இருக்க வேண்டும். காலையில் எழுந்து ஷட்கோண கோலம் இட்டு ஆறு தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும்.
  • ச,ர,வ,ண,ப,வ என்ற ஆறு எழுத்திலும், தீபம் ஏற்ற வேண்டும்.  காலையில் நைவேத்தியம் படைக்காமல் மாலையில் மட்டுமே படைத்து வழிபட வேண்டும்.
  • மாலையில் சூரசம்ஹாரம் முடிந்த பிறகே, முருகனுக்கு சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், கற்கண்டு சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றில் உங்களால் முடிந்ததை செய்து நைவேத்தியம் படைத்து விரதத்தை நிறைவு செய்யலாம்.
  • சூரசம்ஹாரம் முடிந்த பிறகு, குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்றி, முருகன் மந்திரங்களை சொல்லி, நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்து விரதத்தினை நிறைவு செய்ய வேண்டும்.

வழிபடும் முறை மற்றும் நேரம்:

  • காலையில் 06 மணி முதல் 7 மணி வரையில் வழிபாடு செய்யலாம். மாலையில், 4.30 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்த பிறகு வழிபாட்டு பூஜைகளை தொடங்கலாம்.
  • திருச்செந்தூரில், இந்த ஆண்டு 4.30 மணிக்கு பிறகே  சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. ஆகையால், சூரசம்ஹாரம் முடிந்த பிறகு, குளித்து விட்டு மீண்டும் 6 தீபங்களை ஏற்றி பூஜை செய்த்து நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். பால், பழம் அல்லது 6 வகையான சாதம் செய்து நெய்வேத்தியமாக படைக்கலாம். நெய்வேத்தியமாக படைத்த உணவுகளை மற்றவர்களுக்கு தானமாக வழங்க வேண்டும். அதிலும், முக்கியமாக சூரசம்ஹாரம் விரதம் இருப்பவர்களுக்கு சுவாமிக்கு படைத்த உணவுகளை அளித்தால் மிகவும் நல்லது.

சூரசம்ஹாரம் நாளில் செய்ய கூடாதவை.!

சொல்ல வேண்டிய மந்திரம்:

கந்த சஷ்டியின் ஆறாவது நாள் முழுவதும், கந்த சஷ்டியை படிக்க வேண்டும். முடிந்தால், முருகனின் அறுபடை வீடுகளுக்கும் உரிய கந்த சஷ்டி கவசத்தை படிக்கலாம். முடியாதவர்கள் அனைவருக்கும் தெரிந்த திருச்செந்தூர் தலத்திற்குரிய கந்த சஷ்டி கவசத்தை மட்டும் படிக்கலாம். மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள முருகன் துதி பாடலையும் உச்சரிக்க வேண்டும்.

முருகன் துதி:

சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.

இதனை துதித்தால் எப்படிப்பட்ட மோசமான தலையெழுத்தும் மாறும்.

பொருள்:

  • சேல் என்னும் மீன்கள் குதித்துத் திரிவதனால் திருச்செந்தூரில் உள்ள
    வயல்கள் அழிந்துபோயின
  • மலர்க்கொடி போன்ற பெண்களின் மனமானது
    சோலையிலுள்ள இனிமையான கடப்ப மலர்மாலையை விரும்பியதால்
    அழிந்துபோயிற்று
  • பெருமைதங்கிய மயில்வாகனத்தையுடைய திருமுருகப்பெருமானது வேலாயுதம் பட்டதால் கடலும் சூரபன்மனும்
    கிரௌஞ்சமலையும் அழிந்துபோயின.
  • இவ்வுலகில் கந்தவேளின் திருவடிகள் அடியேனின் தலைமீது பட்டதால் பிரம்மதேவனால் மோசமாக எழுதபட்டிருக்கும் விதி என்னும் கையெழுத்தும் அழிந்துபோயிற்று.
  • என் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் நீங்கி, வளமான வாழ்வை பெற எனக்கு அருள் புரிவாய் என வேண்டி இப்பாடலை பாடுங்கள்.

சூரசம்ஹாரம் என்றால் என்ன.? அது தோன்றிய வரலாற்று கதை என்ன.?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement