இன்றைக்கு நிகழும் சூரிய கிரகணத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு எல்லாம் லக் அடிக்க போகிறதாம்..!

Advertisement

Solar Eclipses Bring Luck to These Zodiac Signs in Tamil 

2023 ஆம் ஆண்டில் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. சூரிய கிரகணம் ஒரு கெட்ட நிகழ்வாக கருதப்பட்டாலும் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களையே தருகிறது என்று ஜோதிட ரீதியாக சொல்லப்படுகிறது. சூரிய கிரகணத்தின் போது சூரியன் வலுவிழந்து இருப்பார். அதுமட்டுமில்லாமல் சூரியன் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் இருக்கும் போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாவிட்டாலும் சூரியகிரகணத்தின் தாக்கம்  அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் இந்த 4 ராசிகளுக்கு மட்டும் சிறப்பான பலன்களை அளிக்கிறது. ஓகே வாருங்கள் சூரிய கிரகணத்தால் அதிர்ஷ்டம் பெரும் அந்த ராசிக்காரர்கள் யாரென்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

புதனின் வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்ளுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறது…இதுல உங்க ராசி இருக்கா.!

தனுசு ராசி:

தனுசு ராசி

தனுசு ராசியின் 5 -ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்வதால், தனுசு ராசிக்காரர்களுக்கு இக்கிரகணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெரும். மேலும் இக்காலத்தில் கையில் பணவரவு அதிகரிக்கும். கணவன் மனைவி இருவரிடமும் அன்பு அதிகரித்து வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.

மீன ராசி:

மீனம் ராசி

மீன ராசியின் 2 -வது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் மீன ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களை பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. மீன ராசிக்காரர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்பும் கிட்டும். மேலும் பணிபுரிபவர்களின் வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்கள் இக்காலத்தில் அதிக லாபத்தை பெறவும் வாய்ப்பு உள்ளது. மேலும் வாழ்க்கை துணையுடன் அன்பாக இருப்பீர்கள்.

ரிஷப ராசி:

ரிஷப ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021

ரிஷப ராசியின் 12 -வது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்வதால், ரிஷப ராசிக்காரர்கள் இக்காலத்தில் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். பணிபுரிபவர்கள் வேலையிலும் வருமானத்திலும் நல்ல முன்னேற்றத்தை பார்க்கலாம். மேலும் பணியிடத்தில் சக ஊழியர்களிடம் நல்ல ஆதரவு கிடைக்கும். அதுமட்டுமில்லாமல், சில காலமாக தடையில் இருந்த வேலைகள் முடிவுக்கு வரலாம். வேலை செய்பவர்களுக்கு பணியிடத்தில் நல்ல பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே ரிஷப ராசிக்காரர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தை பெறலாம்.

சூரிய கிரகணம் அன்று குழந்தை பிறப்பது நல்லதா? கெட்டதா?

மிதுன ராசி:

மிதுன ராசி

மிதுன ராசியின் 11 -வது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. எனவே மிதுன ராசிக்காரர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் தங்களின் வருமானத்தில் நல்ல லாபத்தை பெறலாம். மேலும் திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் எல்லாம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை தொடங்கும். பணிபுரிபவர்களின் வருமானம் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது என்று ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement