சூரிய கிரகணத்தின் போது இந்த மந்திரத்தை உச்சரியுங்கள்..! தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும்..!

Advertisement

Sooriya Grahana Anushtanam in Tamil

ஆன்மீக அன்பர்களுக்கு அனைவருக்கும் வணக்கம்..! இன்று நம் ஆன்மிகம் பதிவின் வாயிலாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். அதாவது இந்த 2024 ஆண்டு சூரிய கிரகணமானது ஏப்ரல் 8 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று வருகிறது. அதுவும் இந்த ஆண்டில் வரப்போகும் முதல் சூரிய கிரகணமே இது தான். பொதுவாக சூரிய கிரகணம் என்றாலே கர்ப்பிணி பெண்கள் மிகவும் பயப்படுவார்கள்.

அதுபோல சூரிய கிரகணம் மிகவும் சிறப்பு பெற்றதாக இருக்கிறது. இருந்தாலும், சூரிய கிரகணமானது மங்களகரமானதாக பார்க்கப்படுவதில்லை. காரணம், ஜோதிட சாஸ்திரப்படி கிரகணத்தின் போது சூரியன் ராகுவால் பாதிக்கப்படுகிறது. இதனால் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கிறது. எனவே இதன் காரணம் தோஷம் ஏதும் வந்துவிடுமோ என்று நம்மில் பலரும் பயம்கொள்வார்கள். அதனால் சூரிய கிரகணத்தின் போது நாம் உச்சரிக்க வேண்டிய மந்திரம் என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

சூரிய கிரகணம் 2024 எப்போது நிகழும்.. தமிழ்நாட்டில் தெரியுமா.. 

சூரிய கிரகணம் பரிகார ஸ்லோகம்:

சூரிய கிரகணம் பரிகார ஸ்லோகம்

பொதுவாக சூரிய கிரகணத்தின் போது நாம் செய்யும் தானங்கள் நமக்கு பல நன்மைகளை தேடித்தருகிறது. அதனால் சூரிய கிரகணம் அன்று, ஸ்வர்ணம், தானியங்கள், தேங்காய், பழங்கள் மற்றும் தட்சணைகள் போன்றவற்றை மற்றவர்களுக்கு தானமாக கொடுக்கலாம்.

மேலும் நாம் இந்த சூரிய கிரகணத்தின் போது, நாம் சொல்லும் மந்திரங்களுக்கு அதிக சக்திகள் இருக்குமாம் அதனால், கிரகணம் முடியும் வரை காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கலாம்.

சரி கிரகணத்தின் போது நாம் சொல்ல வேண்டிய சூரிய கிரகணம் பரிகார ஸ்லோகம் பற்றி கீழ் காண்போம்.

யோஸெள வஜ்ரதரோ தேவ:
ஆதித்யானாம் ப்ரபுர்மத – (1)
ஸஹஸ்ரநயன: ஸூர்ய 
க்ரஹபீடாம் வ்யபோஹது – (2)

முகம் யஸ்ஸர்வபூதாநாம்
ஸப்தார்சி ரமிதத்யுதி: (1)
ஸூர்யோபராகஸம்பூதா –
பீடாமக்னிர் வ்யபோஹது

ய : கர்மஸாக்ஷி பூதானாம்
யமோ மஹிஷவாஹந: (1)
யமஸ்ஸூர்யோ பராகோத்தாம்-
தத்ர பீடாம் வ்யபோஹது (2)

ரக்ஷோகணாதிபஸ் ஸாக்ஷாத்
ப்ரளயாநிலஸந்நிப: (1)
கட்கவ்யக்ரோதிபீதிச்ச –
ரக்ஷ்: பீடாம் வ்யபோஹது – (2)

சோமாவதி அமாவாசையில் சூரிய கிரகணம்.. இந்த ராசிகள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

நாகபாசதரோ தேவ:
நித்யம் மகரவாஹந: (1)
ஸஜாலாதிபதிஸ் : ஸூர்ய –
க்ரஹபீடாம் வ்யபோஹது (2)

ப்ராணரூபீ த்ரிலோகாநாம்
வாத : க்ருஷ்ணம்ருகாதிப : (1)
வாயூஸ்ஸூர்யோபராகோத்தாம்
தத்ரபீடாம் வ்யபோஹது (2)

யோஸெள நிதிபதிர் தேவ:
கட்கசூலகதாதர : (1)
ஸூர்யோபராககலுஷம் 
தனதஸ்தத் வ்யபோஹது – (2)

யோஸெள பிந்துதரோ தேவ :
பீனாகி வ்ருஷ வாஹந: (1)
ஸூர்யோபராகபாபானி –
விநாசயது சங்கர: (1)

மேலும் இந்த மந்திரத்தை கூற கஷ்டமாக உணருபவர்கள் உங்களுக்கு தெரிந்த மற்றும் உங்களுக்கு பிடித்த கடவுள்களின் மந்திரத்தை உச்சரிக்கலாம். மேலும் நீங்கள் சூரிய கிரகணத்தின் போது சொல்லவேண்டிய எளிய மந்திரித்து கீழ் காண்போம்.

சொல்ல வேண்டிய எளிய மந்திரங்கள்:

ஓம் சிவாய நமஹ

ஓம் கணபதியே நமஹா

ஓம் சரவண பவ

ஸ்ரீ ராம ஜெயம் 

ஓம் நமசிவாய 

இதை தவிர உங்களுக்கு நன்கு தெரிந்து மந்திரங்களை நீங்கள் கூறலாம்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement