ரிஷபத்திற்கு பெயர்ச்சி செய்த சூரியனால் இந்த 5 ராசிக்காரர்கள் டாப் லெவலுக்கு செல்வார்களாம்..! இதில் உங்க ராசி இருக்கா..?

Advertisement

Sooriyan Peyarchi Palangal 2023 

பொதுவாக நவகிரங்களின் நிலையை பொறுத்தே 12 ராசிகளின் பலன்கள் கூறப்படுகிறது. அந்தவகையில் ரிஷபத்திற்கு சென்ற சூரியனால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இப்பதிவில் பார்க்கலாம். நவகிரங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் தனது ராசியை ஒவ்வொரு மாதமும் மாற்றிக்கொண்டே இருப்பார். இப்போது சூரியன் தனது கிரக நிலையை மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மாற்றியுள்ளார். சூரியன் மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி செய்யும் போது 12 ராசிகளிலும் அதன் தாக்கம் இருக்கும். எனவே சூரியன் சுக்கிரன் ஆளும் ரிஷபத்திற்கு நுழைந்ததால் இந்த 12 ராசிகளில் உயர்ந்த பலன்களை பெறப்போகும் அதிர்ஷ்ட ராசிகள் எதுவென்று இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ரிஷபத்தில் பெயர்ச்சி செய்யும் சூரியனால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்:

சிம்ம ராசி:

சிம்ம ராசி

சிம்ம ராசியின் 10 -வது வீட்டிற்கு சூரியன் நுழைகிறார். இதனால் சிம்ம ராசிக்காரர்கள் பயனுள்ள பலன்களை பெறுவார்கள். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களின் கனவு இக்காலத்தில் நிறைவேறும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் சமூகத்தில் பெயரும் புகழும் பெறுவார்கள்.

சனியில் உருவாகும்..  இந்த யோகம்..  யாருக்கு நல்ல மாற்றம்..  யாருக்கு அதிர்ஷ்டம்..

ரிஷப ராசி:

ரிஷப ராசி

சூரியன் ரிஷபத்தில் பெயர்ச்சி அடைந்ததால் ரிஷப ராசிக்காரர்களின் கவனம் அதிகரிக்கும். மேலும் பணவரவு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் மீது அதிக அக்கறை செலுத்துவீர்கள். குடும்ப நபர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் நல்ல பலன்களை பெறுவார்கள்.

மீன ராசி:

மீன ராசி

மீன ராசியின் 3 -வது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் மீன ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் தைரியமும் அதிகரிக்கும். அனைத்து வேலைகளையும் ஆர்வத்துடனும் நேர்மையுடனும் செய்து முடிப்பீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

கடக ராசி:

கடக ராசி

சூரியன் கடக ராசியின் 11-வது வீட்டிற்கு செல்கிறார். இதனால் கடக ராசிக்காரர்கள் நினைத்த காரியத்தை இக்காலத்தில் வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். சமூகத்தில் செல்வாக்கு உடையவர்களிடம் பழக்கம் ஆவீர்கள். திருமணமானவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். பணிபுரிவோர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மேலும் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ராகு கேது பெயர்ச்சியினால் இவர்களுக்குகெல்லாம் கஷ்ட காலம்..

மகர ராசி:

மகர ராசி

சூரியன், மகர ராசியின் 5-வது வீட்டிற்கு செல்கிறார். இதனால் மகர ராசிக்காரர்கள் தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் உள்ள ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் இக்காலத்தில் சாதகமான பலன்களை பெறுவார்கள். வாழ்க்கை துணையுடன் அன்பாக இருப்பார்கள். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இக்காலத்தில் நிதிநிலைமை நன்றாக இருக்கும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement