தெற்கு பார்த்த வீடு நல்லதா கெட்டதா? தெற்கு பார்த்த வீடு எந்த ராசிக்கு நல்லது.?

Advertisement

தெற்கு பார்த்த வீடு நல்லதா கெட்டதா? | தெற்கு பார்த்த வீடு எந்த ராசிக்கு நல்லது.? 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தெற்கு பார்த்த வீடு எந்த ராசிக்கு நல்லது என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். நம்மில் பலருக்கும் இந்த குழப்பம் இருக்கும். தெற்கு பார்த்த வீடு நல்லதா இல்லை கெட்டதா என்று. முக்கியமாக, எந்த ராசிக்கு தெற்கு பார்த்த வீடு நல்லதாக இருக்கும் என்று. எனவே, உங்கள்  குழப்பத்தினை தெற்கும் வகையில் இப்பதிவு அமையும்.

பொதுவாக வீட்டை கட்டுவதற்கு முன்பே அல்லது வாங்குவதற்கு முன்பே வீட்டை எப்படி கட்டவேண்டும். எப்படி காட்டினால் அவர்களுக்கு நல்லது எந்த திசையை பார்த்து வீடு கட்டவேண்டும் என நிறைய வாஸ்து சாஸ்திரம் பார்க்கிறார்கள். அந்த வகையில் ஒரு சிலர் தெற்கு பார்த்த வீட்டை கட்டுவதற்கு அதிகம் பயம் கொள்கிறார்கள். அந்த வீட்டின் திசையே வேண்டாம் என்றும் சொல்வார்கள் சரி வாங்க அதற்கு மட்டும் ஏன் குடியும் செல்லமாட்டார்கள் மற்றும் வாங்கவும் மாட்டார்கள் என்று தெரிந்துகொள்வோம்.

South Facing House Good or Bad in Tamil:

தெற்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்:

தெற்கு பார்த்த வீட்டிற்கு போகாமலும் வாங்காமலும் தடுப்பதற்கு முக்கியகாரணமாக விளங்குவது தெற்கு திசை என்பது எமதர்மனுக்கு உரிய திசையாகும். அதனால் அந்த திசைகொண்ட வீட்டிற்கு செல்ல மறுக்கிறார்கள். அதேபோல் அந்த வீட்டில் அதிர்ஷ்டம் இல்லை என்றும் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறான கூற்று ஆகும். ஒரு வீட்டிற்கு வாஸ்து படி அனைத்து அறைகளும் இருந்தால் போதும் அந்த வீட்டில் வாழ்பவர்களுக்கு நன்மை அளிக்கும்.

யாரும் அறியாத தகவல்கள்:

பல தொழிலதிபர் வீடுகள், தொழில்நடத்தும் இடங்கள் அனைத்தும் தெற்கு திசையை நோக்கி தான் இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் வீடு அனைத்துமே வாஸ்து படிதான் கட்டி வைத்திருப்பார்கள். நீங்கள் தெற்கு பார்த்த விட்டில் வசித்தீர்கள் என்றால் உங்கள் வீட்டில் செல்வமும், ஆரோக்கியமும் நிலைப்பட வீட்டை கீழ் கொடுக்கப்பட்டுள்ள வாஸ்து  சாஸ்திரங்களை பயப்படுத்திக்கொள்ளவும்.

தெற்கு பார்த்த வீடு சமையலறை:

தெற்கு பார்த்த வீட்டில் சமையல் அறையானது தெற்கு திசையை நோக்கி அமைந்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் வடமேற்கு திசையிலாவது அமைந்திருக்க வேண்டும். இதனால் நமக்கு நம்மை கிடைக்கும்.

படுக்கையறை வாஸ்து:

படுக்கை அறையானது தெற்கு பார்த்த விட்டில் தென் மேற்கு திசையில் தான் இருக்க வேண்டும். இப்படி அமைந்தால் உங்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இப்படி இருந்தால் மனதில் அமைதி நிலைக்கும்.

தெற்கு பார்த்த வீடு சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் இருக்கும் தெற்குப்பக்கம் உள்ள சுவர் வடக்கு பக்கம் உள்ள சுவற்றை விட சற்று பெரிதாக இருக்க வேண்டும். இப்படி இருந்தால் மட்டுமே தெற்கு திசை வீட்டின் பலன்களை பெற முடியும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

தெற்கு திசையில் உள்ள வீட்டில் உள்ள கார் செட், தோட்டம், செப்டிக் டேன்க் போன்றவைகள் அனைத்துமே தெற்கு  திசையில் அமைத்திருக்க வேண்டும்.

தென்பக்கம் வாசல் கொண்டவர்கள் வீட்டில் மரம் வளர்த்தால் அதனை வடகிழக்கு பகுதியில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

தெற்கு பார்த்த வீடு மாடிப்படி:

தெற்கு திசையை நோக்கி உள்ள வாசல் மாடி படிக்கட்டுகளை வடகிழக்கு பகுதியில் அமைக்கக்கூடாது. அதனால் கவனமாக இருங்கள்.

தெற்கு பார்த்த வீடு எந்த ராசிக்கு நல்லது:

 தெற்கு பார்த்த வீடு அனைத்து ராசிக்கும் நல்லதா என்றால் நிச்சயம் கிடையாது. தெற்கு திசையில் அமைந்திருந்த வீடு ரிஷபம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், தனுசு மற்றும் சிம்மம் போன்ற ராசிகளுக்கு மட்டுமே நல்லது என்கிறார்கள். இந்த ராசிகாரர்களுக்கு யோகாம் அந்த திசையில் வீடு இருப்பது. 
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement