Spiritual Benefits of Vetiver in Tamil
கணவன், மனைவி இருவரும் ஓடி சம்பாதிக்கிறார்கள். ஆனால் அவர்கள் சம்பாதிக்கும் பணமானது எங்கே போகிறது என்றே தெரியவில்லை. சில பேர் கடன் அதிகமாக வாங்கியிருப்பார்கள். அதனால் சம்பாதிக்கும் பணமானது கடனை அடைப்பதற்கே சரியாகிவிடுகிறது. பணத்தை ஈர்க்க கூடிய சக்தி வெட்டிவேருக்கு இருக்கிறது. இந்த வெட்டி வேரில் உள்ள நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
இறைவன் அருள்:
வெட்டி வேரை வீட்டின் பூஜை அறையில் வைத்திருப்பது லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும். மேலும் வீட்டில் செல்வ செழிப்பை அதிகப்படுத்தும் என ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.
மன அமைதி:
வெட்டி வேர் குளிர்ச்சி தன்மை உடையது, அதனால் இதனை வீட்டில் வைத்திருப்பதன் மூலம் மன அமைதியை ஏற்படுத்தும். மேலும் நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் கூட அதிலிருந்து விடுபடுவதற்கு உதவுகிறது, பதற்ற நிலையை குறைக்க உதவுகிறது.
தீய சக்தி:
வெட்டி வேரை வீட்டில் கட்டி வைத்திருப்பார்கள், இதனால் வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை அழிப்பதற்கு உதவுகிறது.
உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெட்டி வேர் பயன்கள்
வெட்டி வேர் பரிகாரம்:
வெட்டி வேரை வெயில் நன்றாக காய வைத்து கொள்ளுங்கள், இதனை பொடியாக அரைத்து கொள்ளுங்கள். இதனை விபூதியில் கலந்து திருநீறாக பூசி கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் எந்த செயல் செய்தாலும் அதனால் வெற்றி மட்டுமே கிடைக்கும்.
ஒரு கண்ணாடி பாத்திரம் எடுத்து கொள்ள வேண்டும், அதில் எலுமிச்சை பழத்தை சேர்த்து கொள்ள வேண்டும், அதனுடன் வெட்டி வேரையும் சேர்த்து கொள்ள வேண்டும், இந்த கிண்ணத்தை பூஜை அறையில் வைத்து விட வேண்டும். இந்த தண்ணீரை வாரத்திற்கு ஒரு முறை மாற்றுவது அவசியமானது, ஆனால் வெட்டி வேரை மாதத்திற்கு ஒரு மாற்றினால் போதுமானது. இதனை வைப்பதன் மூலம் வெட்டி வேரின் வாசனையானது பூஜை அறை மூலம் நிரம்பியிருக்கும். இதனால் உங்கள் வீட்டில் மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள்.
வீட்டில் மகிழ்ச்சி மற்றும் மகாலட்சுமி வாசம் செய்வதற்கு வெட்டி வேரை தோரணம் கட்டி தொங்க விட வேண்டும். இந்த தோரணத்தை நீங்கள் மாதத்திற்கு ஒரு மாற்ற வேண்டியிருக்கும். ஏனென்றால் வெட்டி வேரின் வாசமானது ஒரு மாதத்திற்கு தான் இருக்கும்.
மேல் கூறப்பட்டுள்ள பரிகாரங்களை செய்து பாருங்கள், இதனால் வீட்டில் மாற்றம் ஏற்படும். அதோடு மட்டுமில்லாமல் பரிகாரத்தை செய்வதோடு மட்டுமில்லாமல் அதற்கான முயற்சியையும் எடுக்க வேண்டும்.
வெட்டி வேரின் மருத்துவ பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா…?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |