Sri Chakra Raja Simhasaneshwari Lyrics in Tamil
நம்முடைய வீடுகளில் எப்போது நமக்கு தெரியாத மற்றும் புரியாத விஷயங்களை நிறைய கூறுவார்கள். ஆனால் அவை அனைத்திலும் நிறைய அர்த்தங்கள் மற்றும் பொருள்கள் என்பது இருக்கும் நமக்கு தான் அவை எல்லாம் தெரியாமல் இருக்கும். அந்த வகையில் நமது வீடுகளில் நிறைய பழமொழிகள் மற்றும் ஆன்மீக பாடல், கதைகள் என இவற்றை தான் கூறுவார்கள். ஆனால் இத்தகைய விஷயங்களில் பாதி நமக்கு தெரியவில்லை என்பது தான் உண்மை. அதேபோல் ஒவ்வொரு தெய்வத்தினை வழங்கும் போதும் அதற்கு என்று உள்ள பாடல் மற்றும் மந்திரங்களையும் கூறுவார்கள். எனவே இன்று ஸ்ரீ சக்ரா ராஜா சிம்ஹசனேஸ்வரி பாடல் வரிகளை தான் இன்று பார்க்கப்போகிறோம்.
மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகள்
ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி பாடல் வரிகள்:
செஞ்சுருட்டி ராகம்:
ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸ னேஸ்வரி
ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஸ்வரி
ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸ னேஸ்வரி
ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஸ்வரி
ஆகம வேத கலாமய ரூபிணி
ஆகம வேத கலாமய ரூபிணி
அகில சராசர ஜனனி நாராயணி
அகில சராசர ஜனனி நாராயணி
நாக கங்கண நடராஜ மனோகரி
நாக கங்கண நடராஜ மனோகரி
ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி
ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி
ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸ னேஸ்வரி
ஸ்ரீ லலிதாம்பிகையே
புன்னாகவராளி ராகம்:
பலவிதமாய் உன்னைப் பாடவும் ஆடவும்
பலவிதமாய் உன்னைப் பாடவும் ஆ..டவும்
பாடிக் கொண்டாடும் .அன்பர் பதமலர் சூடவும்
பலவிதமாய் உன்னைப் பாடவும் ஆ..டவும்
பாடிக் கொண்டா-டும் .அன்பர் பதமலர் சூடவும்
உலகம் முழுதும் எனது அகமுறக் காணவும்
உலகம் முழுதும் எனது அகமுறக் காணவும்
ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி
ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி
ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி
ஸ்ரீலலிதாம்பிகையே
நாதநாமக்ரியை ராகம்:
உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்
உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்
நிழல் எனத் தொடர்ந்த முன்ஊழ் கொடுமையை நீங்கச் செய்தாய்
நிழல் எனத் தொடர்ந்த முன்ஊழ் கொடுமையை நீங்கச் செய்தாய்
நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி
நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி
ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி
ஸ்ரீலலிதாம்பிகையே
சிந்து பைரவி ராகம்:
துன்பப் புடத்தில் இட்டுத் தூயவன் ஆக்கி வைத்தாய்
துன்பப் புடத்தில் இட்டுத் தூயவன் ஆக்கி வைத்தாய்
தொடர்ந்த முன் மாயம் நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்
தொடர்ந்த முன் மாயம் நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்
அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய்
அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய்
அடைக்கலம் நீயே அம்மா…. அம்மா
அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி
அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி
ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி
ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி
ஆகம வே…த கலாமய ரூ…பிணி
அகில சராசர ஜனனி நாராயணி
நாக கங்கண நடராஜ மனோகரி
ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி
ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி
ஸ்ரீலலிதாம்பிகையே
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |