Sukra Bhagavan Peyargal Palangal in Tamil
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் உள்ள சுக்கிர பகவான் தான் நமது வாழ்க்கைக்கு தேவையான பணம், பொருள் வசதிகள், அன்பு மற்றும் காதல் ஆகியவற்றின் காரணியாக இருக்கின்றாரா. இவரது ஒவ்வொரு நிகழ்வும் நமது வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. இந்நிலையில் சுக்கிர பாகவன் துலாம் ராசியில் நுழைகிறார். இதனின் தாக்கம் பன்னிரண்டு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். அதாவது ஒரு சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இந்த பெயர்ச்சி அவ்வளவு நல்ல பலனை அளிக்காது. ஆனால் ஒரு சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிக மிக நல்ல பலனை அளிக்கும். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்க போகின்றது என்பதை இன்றைய பதிவில் காணலாம் வாங்க.
தீராத கடனும் உடனடியாக தீர வெறும் 6 கிராம்பு மட்டும் போதும்
சுக்கிர பெயர்ச்சியால் அதிர்ஷ்டக்காரர்களாக மாற போகும் 3 ராசிக்காரர்கள்:
துலாமில் நுழையும் சுக்கிரனால் பலவகையான நன்மைகள் மற்றும் அதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிக்காரர்கள் யார் அவர்களுக்கு எந்த மாதிரியான நல்ல பலன்கள் கிடைக்க போகின்றது என்பதை எல்லாம் இங்கு விரிவாக காணலாம் வாங்க..
மேஷ ராசி:
சுக்கிர பகவானின் இந்த இடமாற்றத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு பலவகையான நன்மைகள் கிடைக்க போகின்றது. அதாவது உங்களது தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்க போகின்றது.
இந்த காலகட்டத்தில் நீங்கள் புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்புள்ளது. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரித்து குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அதேபோல் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நடக்கும்.
தப்பித்தவறி கூட இந்த திசையில் காலண்டரை மாட்டிவிடாதீர்கள் அது எந்த திசை தெரியுமா
கடக ராசி:
கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவானின் இந்த இடமாற்றம் பல நல்ல பலன்களை அளிக்க போகின்றது. இந்த காலகட்டத்தில் பல அதிர்ஷ்டகரமான பலன்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அதாவது நீங்கள் புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்புள்ளது. உங்களுக்கு இருந்த அனைத்து சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். இந்த காலகட்டத்தில் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மகர ராசி:
இந்த இடமாற்றம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டகரமான பலன்களை அள்ளித்தர போகின்றது. இந்த காலகட்டத்தில் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வேலை செய்யும் நபர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலை நன்கு காணப்படும்.
கனவில் வெள்ளம் வந்தால் இதுதான் பலனா
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |