சுக்கிரன் பரிகாரம்:
Sukran dosham tamil/ சுக்கிரன் பரிகாரங்கள் – சுக்கிரன் நீச்சமடைந்தால் அந்த தோஷத்திற்கு சம்மந்தப்பட்டவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர்கள் கீழ்கண்ட பரிகாரங்களை செய்துக்கொள்ளலாம். ஒருவர் வாழ்க்கையில் அனைத்து சுக சௌக்கியங்களும் பெற்று, மகிழ்ச்சியாக வாழவேண்டும் எனில், அவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் வலிமை பெற்றிருப்பது அவசியம். குறிப்பாக ஒருவரின் திருமண வாழ்க்கை இனிமையாக அமைய சுக்கிரன் வலிமைப் பெற்றிருக்க வேண்டும். சுக்கிரன் கன்னியில் நீசம் பெற்றிருந்தாலும் செவ்வாயுடன் கன்னியில் சேர்ந்திருந்தாலும் சுக்கிரனின் வலிமை குன்றிவிடும். மேலும், சுக்கிரன் லக்னத்துக்கு 8-ம் வீட்டில் இருப்பதும் சுக்கிர தோஷமாகும். அந்த 8-ம் வீடு சுக்கிரனின் ஆட்சி வீடுகளாகிய ரிஷபம், துலாம் ஆகிய ராசிகளாகவோ, உச்ச வீடான மீன ராசியாகவோ இருந்தால், சுக்கிரனால் தோஷம் ஏற்படாது. சுக்கிரன் 7-ம் வீட்டில் இருப்பதும் 3, 6, 12 ஆகிய இடங்கள் ஒன்றில் மறைவு பெற்றிருப்பதும் தோஷத்தை ஏற்படுத்தும்.
ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனால் தோஷம் ஏற்பட்டிருந்தால், வாழ்க்கையில் பல சுகங்களை அனுபவிப்பதில் தடைகள் ஏற்படும். திருமணம் நடைபெறுவது தாமதமாவதுடன், இல்லற வாழ்க்கையிலும் பல பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஜாதகத்தில் சுக்கிர தோஷம் இருப்பவர்கள், கீழ்க்காணும் எளிய சுக்கிரன் பரிகாரம் செய்து பலன் பெறலாம்.
முன்னோர்களின் சாபம் நீங்க பரிகாரம்..! |
ஆன்மிக தகவல்கள் – சுக்கிர தோஷம் நீங்க பரிகாரம்:
சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமைகளில் வெண்ணிற வஸ்திரம் அணிவித்து, வெண் தாமரை மலரால் அர்ச்சித்து வழிபடவேண்டும்.
மொச்சைப் பயறு சுண்டல் நைவேத்தியம் செய்து, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்க வேண்டும்.
ஆன்மிக தகவல்கள் – சுக்கிர தோஷம் நீங்க பரிகாரம்:
சுக்கிரன் பரிகாரம் – வெள்ளிக்கிழமைகளில் வீட்டுப் பூஜையறையில் மகாலட்சுமி திருவுருவப் படத்தை அலங்கரித்து வைத்து, நெய் தீபம் ஏற்றி, மகாலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் ஆகியவற்றைப் பாராயணம் செய்து, பால் பாயசம் நைவேத்தியம் செய்யலாம்.
பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளில், கஞ்சனூர் சென்று சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வரலாம்.
ஆன்மிக தகவல்கள் – சுக்கிர தோஷம் நீங்க பரிகாரம்:
சுக்கிரன் பரிகாரங்கள் – வசதி வாய்ப்பு இருப்பவர்கள், வீட்டில் அத்தி மரம் வளர்க்கலாம்.
தினமும் இரவு மொச்சைப் பயறை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் மொச்சை ஊறிய தண்ணீரை அத்தி மரத்துக்கு ஊற்றிவிட்டு, மொச்சைப் பயறை பசுவுக்கு உண்ணக் கொடுக்கவேண்டும்.
வீட்டில் மரம் வளர்க்க வசதியில்லாதவர்கள், அருகிலுள்ள கோயிலில் வளர்க்கச் செய்யலாம்.
இதன் மூலம் மிகக் கடுமையான சுக்கிர தோஷங்களிலிருந்தும் விடுபட லாம்.
ஆன்மிக தகவல்கள் – சுபகாரியங்களில் அட்சதை இடுவது ஏன் தெரியுமா??? |
இது போன்ற ஆன்மிக தகவலக்கை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |