சுக்கிர பெயர்ச்சி
பொதுவாக ஆன்மிகத்தில் கிரக பெயர்ச்சி என்பது இயல்பானது. இந்த பெயர்ச்சியானது ஒரே ராசியில் இருப்பதில்லை. அடிக்கடி தங்களின் ராசிகளை மாற்றி கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் சுக்கிர பெயர்ச்சி ஆனது நன்மையை மட்டுமே வழங்க கூடியது. தற்போது சுக்கிரன் கும்ப ராசியில் இருக்கிறார். இவர் மார்ச் 31-ம் தேதி மீன ராசிக்கு மாற போகிறார்.
சுக்கிரனின் பெயர்ச்சி ஆனது எல்லா ராசிகளுக்கும் நன்மையை கொடுத்தாலும் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி தர போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி ஆனது சிறப்பானதாக இருக்க போகிறது. பணியில் உங்களின் ஆளுமை திறனை வெளிப்படுத்துவீர்கள். இதனால் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். இதனால் அனைவரின் கவனமும் உங்கள் மீது இருக்கும். நீங்கள் வேலை பார்த்து கொண்டிருப்பவராக இருந்தால் அதில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். அதுவே வேலை இல்லாதவராக இருந்தால் புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். அதுவும் நீங்கள் ஆசைப்பட்ட வேலை கிடைக்கும்.
இதனால் குடும்பத்தில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மேலும் நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். இதன்மேல் உங்களின் சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். வரன் கிடைக்கவில்லை என்று இதுவரை திருமணம் தள்ளி போனவர்களுக்கு திருமணம் கைக்கூடி வரும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி ஆனது மிகவும் சாதகமாக இருக்க போகிறது. இந்த பெயர்ச்சியால் நீங்கள் எந்த செயல் செய்தாலும் அதிர்ஷ்டம் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த நேரம் உகந்ததாக இருக்கும். உங்களுடைய லாபம் ஆனது இதுவரை இருந்ததை விட இப்போது அதிகரிக்கும். பணவரவு அதிகமாக காணப்படும். இதனால் எதிர்கால பயன்பாட்டிற்காக பணத்தை முதலீடு செய்வீர்கள்.
பணியில் உங்களின் செயலுக்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் காலமாக இருக்கிறது. வேலை சம்மந்தமாக வெளியூர் செல்வீர்கள். துணையிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பாமரிப்பீர்கள்.
மிதுனம்:
சுக்கிரனின் பெயர்ச்சியானது மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பானதாக இருக்க போகிறது. வேலை பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு விற்பனை அதிகமாக இருக்கும். மேலும் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். இதனால் லாபமும் இதுவரை இருந்ததை விட அதிகமாக இருக்கும்.
வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு ஆசைப்பட்ட வேலை கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை வெளியிடங்களுக்கு அழைத்து செல்வீர்கள். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.
கஜகேசரி யோகத்தால் திடீர் பலன்களை பெரும் ராசிகள் யார்..?
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |