சுக்கிர நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்வில் மாற்றங்களை சந்திக்க போகும் 4 ராசிக்காரர்கள்..!

Advertisement

Sukra Natchathira Peyarchi In Tamil

இயல்பாகவே கிரகங்கள், ராசிகள் மற்றும் நட்சத்திரங்கள் இடையே பெயர்ச்சி அடைவதனால் 12 ராசிக்காரர்களும் நேரடி தாக்கம் ஏற்படும். அந்த வகையில் சுக்கிர பகவான் நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார். உக்கிர பிகாவான் செல்வம், கலை, அழகு, காதல் ஆகியவற்றை அளிக்க வல்லவர். தற்போது இவரது நட்சத்திர பெயர்ச்சி இந்த விஷயங்களில் சில ராசிகளுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும்.

சுக்கிர நட்சத்திர பெயர்ச்சி ஏப்ரல் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. 2025 ஆம் ஆண்டு சுக்கிர நட்சத்திர பெயர்ச்சியால் செல்வமலையில் நினைய போகும் 4 ராசிக்காரர்கள் யாரு என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

சனி பகவானால் சில ராசிக்காரர்களுக்கு 2025 படாத பாடா இருக்க போகுது

சுக்கிர நட்சத்திர பெயர்ச்சி:

சுக்கிர பகவான் தற்போது உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணிக்கிறார். ஏப்ரல் 1 ஆம் தேதி அதிகாலை 04:25 மணிக்கு பூரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். ஏப்ரல் 26 ஆம் தேதி வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணிக்க இருக்கிறார். இதனால் செல்வ யோகத்தை பெற போகும் ராசிக்காரர்கள் பற்றி பார்க்கலாம்.

ரிஷபம்:

மீன ராசியில் சனி  அஸ்தமனம் 

ரிஷப ராசிக்காரர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துகொண்டிருந்த காரியங்கள் நடைபெறும். புதிய வேலைவாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழிலில் பெரிய முன்னேற்றம் அடைவீர்கள். நிதிநிலைமையை பொறுத்த வரை எதிர்ப்பாராத பண வரவுகள் கிடைக்கும். பணத்தை சேமிப்பீர்கள். இதனால் நிதி பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மேலும் காதல் வாழ்வில் மகிழ்ச்சி அடைவீர்கள். திருமண வாழ்விலும் பிரச்சனைகள் தீரும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். புதிய நிலம் அல்லது வீடு அல்லது வாகனங்களை நீங்கள் வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்வில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு புதிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். இந்த காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். பணியில் பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்வதற்கான பணம் உங்கள் கைக்கு வரும். மாணவர்களுக்கு நல்ல காலம் பிறக்கிறது. மாணவர்கள் தேர்விலும், போட்டிகளிலும் சிறப்பாக செயலாற்றுவார்கள். திருமணம் நடக்காதவர்களுக்கு நல்ல செய்தி வரும். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மேலும் வாழ்வில் சுப காரியங்கள் நடக்கும். தொழிலிலும், பணியிலும் தொடர்ச்சியான வெற்றிகள் கிடைக்கும்.  வாழ்வில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு அதிலும் வெற்றி பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் துணையுடனான உறவு வலுப்படும். வீட்டில் செல்வ மழை பொழியும்.

சனி பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களை வச்சி செய்ய போகிறது.! இதுல உங்க ராசி இருக்கானு பார்த்துட்டு அலார்ட்டா இருந்துக்கோங்க.!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement