Sukra Peyarchi Palan 2023
பொதுவாக ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் தினமும் அன்றைய நாள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக காலை எழுந்ததும் காலண்டர் பார்ப்பார்கள், இல்லையென்றால் செய்தி தாள், தொலைக்காட்சி போன்றவற்றை பார்த்து தங்களின் ராசிகளுக்கான பலன்களை பார்த்து கொள்வார்கள். அதில் உள்ள பலன்களில் கூறியது போல நடந்து கொளவர்கள். அது போல கிரக பெயர்ச்சி என்பது நடக்க கூடியது தான். ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தங்களில் ராசிகளை மாற்றி கொண்டே இருப்பார்கள். சூரியனுடன் முக்கியமான கிரகங்களான சுக்கிரன், சனி, புதன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கப் போகின்றன. குறிப்பாக மிகவும் சிறப்பு வாய்ந்த சுக்கிரன் கிரகமும் இந்த மாதத்தில் தான் இடம் பெயர்ந்துள்ளது. கடந்த நவம்பர் 3 ஆம் தேதி அதிகாலை 4:58 மணிக்கு கன்னி ராசியில் கிரகம் மாறியது.இதனால் எந்தெந்த ராசிகள் பலன்களை பெற போகிறார்கள் என்று அறிந்து கொள்வோம்.
சுக்கிர பெயர்ச்சி பலன்கள்:
சிம்மம்:
சுக்கிர பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மைகளை அள்ளி தர போகிறது. இந்த நேரத்தில் உங்களின் வருமானம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். நீங்கள் ஆசைப்பட்டதை வாங்கி மகிழ்வீர்கள். புதிய வேலைகள் தொடங்குவதற்கான நேரமாக இருக்கும். உங்களின் துணையிடம் நல்லுறவை பராமரிப்பீர்கள். மேலும் குடும்பத்தில் உள்ளவர்களுடன் நேரத்தை கழிப்பீர்கள். நீங்கள் செய்த முதலீடுகளால் நன்மை கிடைக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிர பெயர்ச்சியால் வாழ்க்கை அமோகமாக இருக்க போகிறது. வியாபாரம் சம்மந்தமாக வெளியூர் செல்வீர்கள். இதனால் ஆதாயம் கிடைக்கும். அலுவலங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். திடீரென்று பணவரவு அதிகரிக்கும். உங்களின் துணையிடம் விட்டு கொடுத்து செல்ல வேண்டும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் உள்ளவர்கள் முதலீடு செய்வதற்கு இந்த காலம் மிக உகந்ததாக இருக்கும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்.
ரிஷபம்:
சுக்கிர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக உள்ளது. நீங்கள் ஏதும் திட்டம் தீட்டி வைத்திருந்தால் அவற்றை செயல்படுத்துவதற்கு இந்த காலம் உகந்ததாக இருக்கும். இதுவரை வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சற்று விட்டு கொடுத்து செல்ல வேண்டும்.
மேஷம்:
சுக்கிர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல காலமாக இருக்கிறது. உங்கள் கைக்கு வராமல் இருந்த தொகை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. உங்களின் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. பணவரவு அதிகமாக காணப்படும். இதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |