Sukra Peyarchi Palangal in Tamil
பொதுவாக புதுவருடம் பிறந்து விட்டது என்றால் ராசிகள் மற்றும் கிரங்கங்களின் மாற்றத்தால் சில ராசிக்கு நல்ல காலம் பிறக்கும். சில ராசிக்கு கொஞ்சம் கஷ்ட காலமாக மாறும். கிரகங்கள் ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும். நவகிரகங்களில் ஆடம்பரம், காதல், செல்வம், புகழ் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன்.
இந்த சுக்கிரன் தற்போது சனி ஆளும் கும்ப ராசியில் இருந்து கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் உச்சம் பெறும் ராசியான மீன ராசிக்கு சென்றார். இதனால் ராசிகளுக்கு மாற்றம் ஏற்படும். அதில் இந்த 3 ராசிக்கு என்ன மாற்றம் வரப்போகிறது அது எந்த ராசி என்று தெரிந்து கொள்ளலாம்.
மீனம் ராசி:
மீன ராசியில் பிரவேசித்து, வியாழன் – சுக்கிரன் சேர்க்கை உருவாகி வருகிறது. எனவே சுக்கிரனின் மாற்றம் மீன ராசிக்காரர்களுக்கு மிக அதிகமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருக்கும். பணவரவு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். காதல் திருமண வாழ்க்கை உருவாகும். குழந்தை பாக்கியமும் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
குருவின் பார்வையினால் குழந்தை பாக்கியம் பெறும் இந்த 7 ராசிகள் மட்டும் தான்..!
கன்னி ராசி:
கன்னி ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் அதிக நன்மை தரும். இவர்களின் வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனைவி வழியில் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஏனென்றால் வாழ்க்கை துணைக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். அதேபோல் பணவரவு தேவைக்கு அதிகமாக இருக்கும்.
மிதுன ராசி:
சுக்கிரனின் மாற்றம் மிதுன ராசிக்கு சாதகமாக அமையும். மார்ச் 15 ஆம் தேதிக்கும் நல்ல லாபமான நிதியை பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சுக்கிரனின் மாற்றம் ஜாதகத்தில் மாளவ்ய யோகம் ராஜ யோகம் கிடைக்கும். எடுத்த ஒவ்வொரு காரியத்திலும் ராஜ யோகம் கிடைக்காது. பதவி உயர்வு கிடைக்கும் அதேபோல் வியாபார லாபம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
பிப்ரவரி 18 முதல் இந்த 3 ராசிக்கு அதிஷ்டம் தான்..! இதில் உங்கள் ராசி இருக்கா..?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |