Sukran Asthangam Palan 2023
ஆன்மீகத்தை பொறுத்தவரை ஒரு வருடத்திற்கு நிறைய பெயர்ச்சிகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அத்தகைய பெயர்ச்சிகள் அனைத்தும் சிலருக்கு அதிர்ஷ்டமான பலன்களையும் மற்ற சிலருக்கு கஷ்டமான பலன்களையும் அவர் அவருடைய ராசி, நட்சத்திரம் மற்றும் கிரக நிலை மாற்றம் என இவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்து அமைகிறது. அந்த வகையில் நாம் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி மற்றும் சுக்கிரன் பெயர்ச்சி என பல வகையான பெயர்ச்சிகளை கேள்வி பட்டிருப்போம். வேத ஜோதிடத்தில், சுக்கிரன் வக்ரம் மற்றும் அஸ்தங்கம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஜாதகத்தில் சுக்கிரனின் பலவீனமான நிலை காரணமாக, ஜாதகக்காரர் திருமண வாழ்க்கை, காதல் விவகாரம் மற்றும் நிதி வாழ்க்கையில் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது சுக்கிரனின் அதிபதியான காரணிகளைப் பொறுத்தது. இருப்பினும், ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனின் அஸ்தங்கம் மற்றும் வக்ர நிலை எவ்வாறு பலன்களைத் தரும் என்பது அந்த நபரின் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையைப் பொறுத்தது. ரிஷபம், கடகம், சிம்மம் ஆகிய 3 ராசிகளுக்கும் சுக்கிரன் அமைவதால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்..
ஆகஸ்ட் 19 வரை இந்த 3 ராசிகளுக்கு சுகபோகங்கள் அதிகரிக்கும்..!
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஒரு வாரம் மகிழ்ச்சியும் வசதியும் நிறைந்த நாளாக காணப்படும். உங்கள் பணி மற்றும் வியாபாரத்தில் புதிய உச்சத்தை அடையும் வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 19க்குள் விலையுயர்த்த பொருட்கள் வாங்கலாம். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை இனிமையாக அமையும்.
இந்த ராசிக்காரவங்க எப்போதும் புதுமையான குணத்தினை உடையவர்களாம்..! உங்க ராசியும் இதில இருக்கா..!
சுக்கிரன் அஸ்தங்கத்தால் சுகபோகங்கள் அதிகரிக்கும் ராசிக்கார்கள் நீங்க தானா…
கடகம்:
ஆகஸ்ட் 19 வரை சுக்கிரன் உங்கள் ராசியில் அஸ்தமாகிறார். இதனால் இனிமையான ஒரு மாற்றம் உங்கள் வாழ்வில் ஏற்படும். உங்கள் நிதி நிலைமை ஏற்றத்துடன் காணப்படும். நீங்கள் வியாபாரத்தில் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெரும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை பரபரப்பாக இருக்கும், இதன் விளைவாக நீங்கள் நிறைய பயணம் செய்ய வேண்டியிருக்கும். சுக்கிரன் வக்ர மற்றும் அஸ்தங்கம் உங்கள் ராசியில் இருப்பதால் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும் அல்லது தொழில் வளர்ச்சி மூலம் நிதி நிலைமை மேம்படும்.
இந்த ராசிக்காரர்கள் மாதிரி யாரும் தைரியமாக இருக்க மாட்டார்கள்..! உங்க ராசி இருக்கா.!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |