சுக்கிரன் திருவாதிரை நட்சத்திரத்திற்கு செல்வதால் 3 ராசிகளுக்கு பண மழை
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசிகளில் குறிப்பிட்ட நாளுக்கு ஒருமுறை மாற்றி கொண்டே இருப்பார். அந்த வகையில் சுக்கிர பகவான் ஒரு ராசியில் 1 மாதம் பெயர்ச்சி அடைவார். அதே போல குறிப்பிட்ட நாளுக்கு ஒரு முறை நட்சத்திரத்தையும் மாற்றுவார். சுக்கிரன் பெயர்ச்சி ஆனது எல்லா ராசிகளிலும் அதனுடைய தாக்கம் இருந்தாலும் சில ராசிகளில் மட்டும் அதிர்ஷ்டத்தையும், கஷ்டத்தையும் கொடுக்கிறது. இவை கிரகங்களை பொறுத்து மாறுபடும். அந்த வகையில் சுக்கிரன் ஜூலை 26-ம் தேதி மிதுன ராசிக்குள் நுழைந்தார். இந்த நிலையில் ஆகஸ்ட் 01-ம் தேதி சுக்கிரன் திருவாதிரை நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த ராசியின் அதிபதியாக இருப்பது ராகு. இதனால் சில ராசிகளுக்கு மட்டும் பலனை அள்ளி தர போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று தெரிந்து கொள்வோம்.
மிதுனம்:
சுக்கிர பெயர்ச்சி ஆனது மிதுன ராசிக்காரர்களுக்கு எல்லா விதத்திலும் சாதகமான பலனை கொடுக்கும். திருமண வாழ்க்கை ஆனது மகிழ்ச்சிகரமாக இருக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு இந்த நேரத்தில் லாபம் ஆனது அதிகமாக கிடைக்கும். திருமண வரன் கிடைக்கவில்லை என்று இத்தனை நாள் இருந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். பணவரவு ஆனது அதிகமாக கிடைக்கும். இதன் மூலம் பணத்தை எதிர்கால பயன்பாட்டிற்காக பணத்தை சேமிப்பீர்கள். வாழ்க்கையில் பெரிய சாதனைகளை செய்வீர்கள். சட்ட வழக்குகள் ஏதும் இருந்தால் அவை முடிவுக்கு வரும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பானது அதிகரிக்கும்.
சிம்மம்:
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி ஆனது சிம்ம ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் பெரிய மாற்றம் ஏற்படும். பல வழிகளில் வருமானம் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். இதன் மூலம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அலுவலகத்தில் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். இதன் மூலம் மகிழ்ச்சியாக பணிகளை செய்வீர்கள். திருமணம் ஆனவர்களின் வாழ்க்கை ஆனது மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் ஏதேனும் முதலீடு செய்திருந்தால் அவற்றிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது அதிர்ஷ்ட கதவை திறக்க போகிறது. நீண்ட நாட்களாக ஏதேனும் வேலை முடியாமல் இருந்தால் அவை இந்த நேரத்தில் முடிவுக்கு வரக்கூடும். அலுவலககத்தில் நீங்கள் செய்யக்கூடிய வேலையை பார்த்து மேல் அதிகாரிகள் உங்களை பாராட்டுவதோடு மட்டுமில்லாமல், பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். நீண்ட தூர பயணம் ஏற்படும். இதன் மூலம் உங்களுக்கு ஆதாயமானதாக இருக்கும். உங்களுடைய எல்லா செயல்களுக்கும் தந்தை பக்க பலமாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் உங்களுடைய ஆர்வமானது அதிகரிக்கும். படிக்கும் மாணவர்களாக இருந்தால் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |












