Sukran Peyarchi Palan 2023
ஆன்மீகத்தை பொறுத்தவரை ஒரு வருடத்திற்கு நிறைய பெயர்ச்சிகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அத்தகைய பெயர்ச்சிகள் அனைத்தும் சிலருக்கு அதிர்ஷ்டமான பலன்களையும் மற்ற சிலருக்கு கஷ்டமான பலன்களையும் அவர் அவருடைய ராசி, நட்சத்திரம் மற்றும் கிரக நிலை மாற்றம் என இவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்து அமைகிறது. அந்த வகையில் நாம் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி மற்றும் சுக்கிரன் பெயர்ச்சி என பல வகையான பெயர்ச்சிகளை கேள்வி பட்டிருப்போம். அதோடு மட்டும் இல்லாமல் அத்தகைய பெயர்ச்சிகள் அனைத்திற்கும் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்றும் தெரிந்துகொள்வோம். ஆகவே இன்றைய பதிவில் சுக்கிரன் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு அமோகமான அதிர்ஷ்டம் கிடைத்து வாழ்க்கையில் பண மழை மற்றும் அதிர்ஷ்டம் பெருகப்போகிறது என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
சுக்கிரன் பெயர்ச்சி பலன் 2023:
சுக்கிரன் கடக ராசியில் மே மாதம் 30-ஆம் தேதி அன்று பெயர்ச்சி அடைகிறார். இத்தகைய பெயர்ச்சி காரணமாக 12 ராசிகளில் சில ராசிகளுக்கு மட்டும் அதிர்ஷ்டமான பலன்களை அளிக்கிறார். அத்தகைய அதிர்ஷ்டமான பலன்களை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
உங்க ராசிக்கு ஏழரை சனி எப்போது முடிவடையும்
கன்னி ராசி:
12 ராசிகளில் 2 பெண்களை அமைப்பாக கொண்ட ராசி தான் கன்னி ராசி. இந்த கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக மகிழ்ச்சியான பலன்கள் கிடைக்கப்போகிறது. அதனால் குடும்பத்தில் அளவு கடந்த மகிழ்ச்சி நிலவும். மேலும் எதிர்பார்த்த மாதிரியான பண வரவும் கிடைக்கும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
ரிஷப ராசி:
ரிஷப ராசிக்காரர்களின் அதிபதியாக சுக்கிரன் இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இப்போது நிகழ்ந்து இருக்கின்றன சுக்கிரன் பெயர்ச்சியினாலும் ரிஷப ராசிக்காரர்களுக்கு வெற்றிகரமான பலன்களை அளிக்கும் வகையில் உள்ளார்.
இதனால் எடுத்து காரியம் அனைத்தும் வெற்றி பெரும். குடும்பத்தில் ஆனந்தம் அதிகரிக்கும். மேலும் தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் மற்றும் லாபம் என இரண்டும் கலந்த ஒன்றாக காணப்படும் என்று ஜோதிடத்தின் படி கூறப்படுகிறது.
மீன ராசி:
காலச்சக்கரத்தில் 12 ராசிகளில் கடைசி ராசியாக இருப்பது மீன ராசி தான். இந்த மீன ராசிக்கார்களின் வாழ்க்கையில் இதுநாள் வரையிலும் காணப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி சுமுகமான பலன்கள் கிடைக்கும்.
மேலும் உயர் பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கும் அதிர்ஷ்டமும் இருப்பதாக ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
கடக ராசி:
சுக்கிரன் கடக ராசியில் பெயர்ச்சி அடைந்து ஜூன் மாதம் 6-ஆம் தேதி வரையிலும் அங்கேயே இருப்பதால் ராசியில் 4-வது ராசியான கடக ராசிகர்களுக்கு நல்ல பலன்களை வாரி வழங்குகிறார்கள்.
சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும் காலமாக மாறும். அதேபோல் நிதிநிலையில் எதிர்பாராத நிலையில் பலன்கள் கிடைக்கும். இதனால் மகிழ்ச்சி காணப்படும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
இந்த ராசிக்காரர்கள் மே 30 வரை காத்திருக்கவும்..ஏனென்றால் பணமழை பொழிய போகிறது..
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |