சுக்கிரன் பூசம் நட்சத்திரம் பெயர்ச்சி
ஆன்மீகத்தில் ஒவ்வொரு கிரகமும் பெயர்ச்சி அடையும் போது ஒவ்வொரு பலனை ஏற்படுத்தும். இந்த பலன் ஆனது பெயர்ச்சி அடையும் கிரகத்தை ஒறுத்து அமைகிறது. அதுமட்டுமில்லாமல் அவை எந்த நிலையை அடைகிறது என்பதை பொறுத்து அமைகிறது. ஒவ்வொரு பெயர்ச்சியின் போதும் நமக்கு என்ன பலன் என்பதை தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் ஆனது அதிகமாக இருக்கும்.
அந்த வகையில் சுக்கிரன் ஆகஸ்ட் 23ம் தேதி சுக்கிரன் சனி பகவானின் நட்சத்திரமான பூச நட்சத்திரத்திற்கு செல்லவிருக்கிறார். இந்த பெயர்ச்சி ஆனது 50 ஆண்டுகளுக்கு பிறகு நிகழவிருக்கிறது. இதனுடைய தாக்கமானது மேஷம் முதல் மீன ராசி வரை காணப்பட்டாலுமே 3ராசிகளுக்கு மட்டும் பலனை அள்ளி தர போகிறது. அவை எந்தெந்த ராசிகள் அறிந்து கொள்வோம்.
கன்னி:
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி ஆனது கன்னி ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலனை தரப்போகிறது. உங்களுடைய எல்லா செயல்களுக்கும் நண்பர்கள் மற்றும் பணியில் கூட வேலை பார்ப்பவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். நீங்கள் யாரிடமாவது பணம் கொடுத்திருந்தது அவை வராமல் இருந்தால் இந்த நேரத்தில் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் ஏதேனும் முதலீடு செய்திருந்தால் அவற்றிலிருந்து லாப தொகை கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகமாக கிடைப்பார்கள். இதன் மூலம் உங்களின் தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.
சனி மற்றும் சந்திரன் சேர்க்கையால் வாழ்க்கையில் பிரச்சனையை சந்திக்க போகும் ராசிகள்
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது சிறப்பான பலனை தர போகிறது. பணியிடத்தில் பணி சம்மந்தமாக வெளியூர் செல்வீர்கள். இதன் மூலம் உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். பணவரவு ஆனது அதிகமாக கிடைக்கும். இதன் மூலம் உங்களின் சேமிப்பு தொகையினை அதிகப்படுத்துவீர்கள். உங்களின் தந்தையுடன் ஏதேனும் பிரச்சனையிருந்தால் அவை இந்த நேரத்தில் முடிவுக்கு வரக்கூடும். உங்களின் எல்லா செயல்களுக்கும் தந்தை பக்க பலமாக இருப்பார்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி ஆனது எதிர்ப்பாராத லாபத்தை கொடுக்க போகிறது. உங்களுக்கு கடன் பிரச்சனை இருந்தால் அவற்றை அடைப்பதற்கான காலம் வந்து விட்டது. உங்களின் பேச்சு திறமை பலப்படும். இதன் மூலம் மற்றவர்களின் கவனம் உங்கள் பக்கம் திரும்பும். உங்களுக்கு பல பிரச்சனை வரும். ஆனால் இதனை உங்களின் தைரியத்துடன் போராடுவீர்கள். இதன் மூலம் பிரச்சனை அனைத்தும் முடிவுக்கு வரும். பணவரவு ஆனது அதிகமாக காணப்படும். இதன் மூலம் உங்களின் சேமிப்பினை அதிகப்படுத்துவீர்கள்.
| இது போன்ற ஆன்மீக தகவல்களை அறிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளுங்கள் | ஆன்மீக தகவல்கள் |












