Sukran Sevvai Serkkai Palan
மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஏதோ ஒரு ராசி மற்றும் நட்சத்திரம் என்பது இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் ஒவ்வொரு ராசிகளுக்கும் பலன்கள் வெவ்வேறு மாதிரியாக தான் அமைகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நாம் அனைவரும் நம்முடைய ராசிக்கான மாதம் மற்றும் வார பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம். அந்த வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சுக்கிரன், செவ்வாய் மற்றும் புதன் பெயர்ச்சி என்பது நடந்து கொண்டு இருக்கிறது. இத்தகைய வரிசையில் செவ்வாய் பகவான் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அதே ராசியில் சுக்கிரன் பகவானும் ஒன்றாக சேர்ந்து பெயர்ச்சி அடைவதால். இந்த இரண்டு கிரங்களின் சேர்க்கையினால் சிலருக்கு மட்டும் அதிர்ஷ்ட காற்று அடிக்கும் விதமாக உள்ளது. ஆகையால் இன்றைய பதிவில் சுக்கிரன், செவ்வாய் சேர்க்கையினால் எந்தந்த ராசிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம் வாங்க..!
சனி பெயர்ச்சி 2023 to 2026 வரை சுருக்கமான பலன்கள்
செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை பலன்:
செவ்வாய் சுக்கிரன் சேர்க்கையினால் 12 ராசிகளில் வெறும் 3 ராசிகளுக்கு மட்டும் அமோகமான பலன்களை அளிக்கும் விதமாக காணப்படுகிறது. மேலும் விரிவான பலன்களை கீழே படித்து தெரிந்துக்கோள்ளுங்கள்.
கடக ராசி:
ராசியில் 4-வது ராசியாக காணப்படுகின்ற கடக ராசிக்காரர்ளுக்கு செவ்வாய், சுக்கிரன் பலன் ஆனது சிறப்பாக இருக்கிறது. மேலும் உங்களின் பொருளாதார நிலை என்பது சிறப்பானதாக காணப்படும். இதுநாள் வரையிலும் காணப்படாத நல்ல லாபம் மற்றும் வருமானம் தொழில் மற்றும் வியாபாரத்தில் காணப்படும்.
மேலும் குடும்பத்தில் இருந்த சிறு சிறு பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். அதேபோல் வீட்டில் நீண்ட நாட்களாக தள்ளிப்போன சுபநிகழ்ச்சிகள் அனைத்தும் ஒன்று கூடிவரும் நிலை ஏற்படும்.
தனுசு ராசி:
தனசு ராசிக்காரர்களுக்கு இனிவரும் காலமானது மிகவும் அதிர்ஷ்டமான காலமாக காணப்படுகிறது. அதனால் நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் கைக்கூடும் வகையில் பலன்கள் இருக்கும்.
அலுவகத்தில் உங்களுக்கு வழக்கத்திற்கு மாறான பணிகளை விட அதிகமான பொறுப்புகள் வரும். ஆகையால் இதனை சிறப்பான முறையில் செய்து முடிக்க திட்டமிட்டு செயல்படுத்தினால் வெற்றி பெற முடியும். பண வரவு இனி வரும் காலங்களில் நீங்கள் எதிர்பார்த்தை விட மகிழ்ச்சியானதாக அமையும்.
மேஷம் ராசி:
சுக்கிரன் செவ்வாய் சேர்க்கையினால் மேஷ ராசிக்காரர்களுக்கு வெற்றி அளிக்கும் விதமாக அனைத்து விதமான செயல்களும் இருக்கும் என்று கூறப்படுகிறது. நிதிநிலையில் எந்த விதமான குறைபாடும் இல்லாமல் சிறப்பாக இருக்கும்.
மேலும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும் மற்றும் உங்களுக்கான முழு ஆதரவும் கிடைக்கும். அதேபோல் புதிய வீடு மற்றும் நிலம், வாகனம் என இவற்றை வாங்குவதற்கான வாய்ப்புகளும் கைக்கூடி வரும். எதிர்பாராத பண வரவு இருப்பதனால் கஷ்டங்கள் எதுவும் இருக்காது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2023 ஆம் ஆண்டு அடுத்த சனி பெயர்ச்சி யாருக்கு. சனி பெயர்ச்சி இருந்து விடுபடுபவர் ராசி எது
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |