Sukran Vakra Peyarchi 2025 | சுக்கிர வக்ர பெயர்ச்சி 2025
மார்ச் முதல் வாரம் முதல் கிரகங்களின் நிலையில் பெரிய மாற்றங்கள் நிகழ இருக்கிறது. செல்வம், அழகு, காதல் மற்றும் ஆடம்பரத்தின் காரணியான சுக்கிரன், மார்ச் 2 ஆம் தேதி பின்னோக்கி நகரத் தொடங்கியது. 90 நாட்களுக்கு சுக்கிரன் மீன ராசியில் வக்ர நிலையில் இருக்க போகிறார். மார்ச் 2ஆம் தேதி காலை 6:04 மணிக்கு சுக்கிரன் வக்ர பெயர்ச்சி தொடங்கியது. ஏப்ரல் 13 ஆம் தேதி மீன ராசியிலேயே வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரன், மே 31 ஆம் தேதி வரை அதே ராசியில் சஞ்சரித்து, பின்னர் மே 31 ஆம் தேதி காலை 11:42 மணிக்கு மேஷ ராசிக்குள் பெயர்ச்சி அடைய போகிறார். இந்த 90 நாட்கள் 5 ராசிகள் மட்டும் கோடியில் புரள ராசிக்காரர்கள் யார் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
கும்பம்:

கும்ப ராசிக்கார்களுக்கு சுக்கிரன் வக்ர பெயர்ச்சியானது மிகுந்த சாதகமான பலன்களை கொடுக்கும். இதுவரை உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அவை தீர்விற்கு வரும். நீங்கள் இதுவரை மாடு மாதிரி கடினமாக உழைத்திருப்பீர்கள். அதற்கான பலன்கள் கிடைக்கவில்லை என்று கவலை அடைந்திருப்பீர்கள். நீங்க இனிமேல் இதனை நினைத்து கவலை அடைய மாட்டீர்கள். ஏனெனென்றல் இந்த நேரம் உங்களின் கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும். புதிதாக வாகனம்வாங்குவீர்கள். இதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வேலை இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு உங்களுக்கு பிடித்த வேலை கிடைக்கும். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
உங்க வீட்டு கதவை திறந்து வைங்க அதிர்ஷ்டம் வர போகிறது.. யார் யாருக்கு தெரியுமா.?
தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் வக்ர பெயர்ச்சியானது மகிழ்ச்சியை அள்ளி கொடுக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் உங்களுக்கும் மகிழ்ச்சியானது அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். இதனால் வீடு மற்றும் வாகனம் வாங்குவீர்கள். சில பேர் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் இருக்கிறது. இதனால் ஆதாயமும் கிடைக்கும்.
மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் எல்லா செயல்களுக்கும் நண்பர்கள் பக்க பலமாக இருப்பார்கள். உங்களின் வாழ்க்கையில் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியை காண்பீர்கள். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும்.
துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் வக்ர பெயர்ச்சியானது வெற்றியை கொடுக்கும் வகையில் இருக்கும். உங்களின் வாழ்க்கையில் பணவரவு ஆனது ஏற்ற தாழ்வுடன் காணப்படும். சில நாட்கள் பணவரவு அதிகமாக காணப்பட்டாலும் கடன் வாங்க நேரிடும். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகுவீர்கள் இருந்தாலும் திடிரென்று பணவரவு அதிகரிக்கும். இதனை பயனுள்ள வகையில் பணத்தை சேமிப்பீர்கள். வேலையில் சில மாற்றங்களை சந்திப்பீர்கள். திருமணம் ஆனவர்களின் வாழ்க்கையானது மகிழ்ச்சியாக இருக்கும்.
ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் வக்ர பெயர்ச்சியானது எல்லா விதத்திலும் நன்மையை கொடுக்கும் வகையில் இருக்கிறது. இந்த ராசிக்காரர்கள் எந்த துறையில் இருந்தாலும் வெற்றியை அடைவார்கள். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஏதேனும் வேலைகள் இதுவரை முடியாமல் இருந்தால் முடிவுக்கு வரும். வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் நேரத்தை கழிப்பீர்கள். நிதிநிலமை இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரிக்கும். இதனால் எதிர்கால பயன்பாட்டிற்காக பணத்தை சேமிப்பீர்கள்.
164 வருடங்களுக்கு பிறகு 2025-யில் ராஜ வாழ்க்கை வாழ போகும் ராசிகள்.!
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |













