வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

12 ஆண்டுகளுக்கு பிறகு 3 ராசிகளுக்கு வெற்றி மேல் வெற்றி வரப்போகிறது

Updated On: June 27, 2025 1:13 PM
Follow Us:
Sun, Moon and Guru combination will give you success
---Advertisement---
Advertisement

சூரியன், சந்திரன், குரு சேர்க்கை 2025

பொதுவாக ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு குறிப்பிட்ட நாளுக்கு ஒரு முறை தங்களின் ராசிகளை மாற்றி கொண்டே இருப்பார்கள். அதில் சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை மாற்றக்கூடியவர், சந்திர பகவான் 2 1/2 நாட்களுக்கு ஒரு முறை ராசியை மாற்ற கூடியவர், குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை மாற்ற கூடியவர். இந்த 3 கிரகங்களும் ஜூன் 27-ம் தேதி மிதுன ராசியில் சேரவுள்ளார்கள். இந்த சேர்க்கையானது 12 ஆண்டுகளுக்கு பிறகு சேரவுள்ளது. இந்த தாக்கமானது எல்லா ராசிகளிலும் இருந்தாலும் சில ராசிகளுக்கு மட்டும் பலனை அள்ளி தரப்போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவை முழுமையாக படித்து அறிந்து கொள்ளுங்கள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு 11-வது வீட்டில் 3 கிரகங்களின் சேர்க்கையானது நிகழவிருக்கிறது. இதனால் வருமானம் எப்போதும் உள்ளதை விட அதிகமாக காணப்படும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவருக்கு இந்த காலகட்டத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. இதுவரை முடிவுக்கு வராமல் இருந்த வேலை ஆனது முடிவுக்கு வரக்கூடும். பணியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் ஏதேனும் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த காலம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஏனென்றால் இந்த நேரத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகையிலுருந்து லாபம் ஆனது அதிகமாக கிடைக்கும்.

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் பிரச்சனையால் அவதிப்பட போகும் ராசிக்காரர்கள்

கன்னி:

3 கிரங்களின் சேர்க்கையானது கன்னி ராசியில் 10-வது வீட்டில் நிகழவுள்ளது. இந்த பெயர்ச்சியினால் இந்த ராசிக்காரர்களுக்கு எந்த காரியம் எடுத்தாலும் அதில் வெற்றியை அடையாலாம். அலுவலங்களில் உங்களின் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். வேலை இல்லாமல் வெளி தேடி கொண்டிருப்பவர்களுக்கு இந்த நேரத்தில் பிடித்த வேலை கிடைக்கும். உங்களுக்கு பல வழிகளில் இருந்து பணம் கிடைக்கும். இதனை வைத்து உங்களின் முதலீட்டை அதிகப்படுத்துவீர்கள். நீங்க செய்ய கூடிய செயல்கள் அனைத்திலும் தந்தை பக்க பலமாக இருப்பார்கள்.

ரிஷபம்:

குரு, சூரியன், சந்திரன் ஆகிய 3கிரகங்களின் சேர்க்கையானது ரிஷப ராசியில் 2-வது வீட்டில் நிகழவிருக்கிறது. இந்த ராசியில் உள்ளவர்கள் படித்து கொண்டிருந்தால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மன வலிமை அதிகமாக காணப்படும். உங்களுடைய பேச்சு ஆனது தெளிவாக இருக்கும். எந்த ஒரு முடிவெடுப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். உதவி செய்யும் குணமானது அதிகரிக்கும். புதிய வருமானங்கள் கிடைக்கும். அரசு தேர்வுக்கு யாரேனும் தயார் ஆகி கொண்டிருந்தால் அவர்களுக்கு சாதகமான பலனை தரக்கூடும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now