Sun Transit in Aries Which Rashi is Lucky in Tamil
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் மாற்றத்தினால் மனிதனின் வாழ்க்கையில் நன்மைகள் மற்றும் தீமைகள் மாறி மாறி நடக்கின்றன. அதே போல் நவகிரகங்களின் தலைவனான சூரியன் ஒரு ராசியை விட்டு மற்றொரு ராசிக்கு மாறும் பொழுது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் 12 மாதங்கள் கழித்து சூரியன் மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். சூரியன் மேஷ ராசியில் நுழையும் போது தான் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது.
இந்த சூரியனின் ராசி மாற்றமானது 12 ராசிகளுக்கும் நல்ல பலனை அளிக்கும் என்றாலும் குறிப்பிட்ட இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் அதிக அளவு பண வரவும் அதிர்ஷ்டமும் கிடைக்க போகின்றன. அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இன்றைய பதிவில் பார்க்க இருக்கின்றோம். இவற்றில் உங்களின் ராசி உள்ளதா..? என்று இந்த பதிவை முழுதாக படித்து அறிந்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2023
சூரியனின் அருளை முழுமையாக பெற போகும் 3 ராசிகள்:
மேஷம்:
சூரியனின் அருளை முழுமையாக பெற போகும் முதலாவது ராசிக்காரர்கள் மேஷ ராசிக்காரர்கள் தான். மேஷ ராசியில் முதலாவது வீட்டிற்குள் சூரியன் செல்ல உள்ளதால் மேஷ ராசிக்காரர்களின் வேலை மற்றும் சுயதொழிலில் மிக மிக நல்ல பலன் கிடைக்க போகின்றது.
அதாவது அலுவலகத்தில் உங்களின் திறமை மற்றும் செயல் திறனால் பதவி உயர்வை பெறும் வாய்ப்புள்ளது. மேலும் வியாபாரத்தில் அதிக அளவு லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மேலும் உங்களின் வாழ்க்கை துணையுடன் உறவு பலப்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த காலகட்டத்தில் திருமணம் ஆக வாய்ப்புள்ளது.
மிதுனம்:
சூரியனின் அருளை முழுமையாக பெற போகும் இரண்டாவது ராசிக்காரர்கள் மிதுன ராசிக்காரர்கள் தான். மிதுன ராசியின் பதினோராவது வீட்டிற்குள் உள்ளதால் மிதுன ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
அலுவலகத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் முழுமையாக முடித்து வெற்றி பெறுவார்கள். மேலும் உங்களின் குடும்ப உறவில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. பணவரவில் முன்னேற்றகரமான பலன் கிடைக்கும்.
புதிதாக ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்றால் இந்த காலகட்டத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> அட்சய திருதியை அன்று மறந்தும் இதை மட்டும் செய்துவிடாதீர்கள்
மீனம்:
மீன ராசியின் இரண்டாவது வீட்டிற்குள் சூரியன் செல்ல உள்ளதால் மீன ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு கிடைக்க போகின்றது. அதனால் நீங்கள் ஏதாவது வியாபாரம் அல்லது வணிகத்தில் முதலீடு செய்தீர்கள் என்றால் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
மேலும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. உங்களுக்கு ஏழரை சனி நடப்பதால் எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னால் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து எடுங்கள். ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து மறைவதற்கு வாய்ப்புள்ளது.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 100 வருடத்திற்கு பிறகு மீன ராசியில் உருவாகும் ராஜயோகத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகின்றது
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |