சுண்டு விரல் ஜோதிடம் | Sundu Viral Jothidam

Little Finger Secret in Tamil..!

Sundu Viral Jothidam:- ஜோதிட சாஸ்த்திரங்களில் பலவகையான ஜோதிடங்கள் இருக்கின்றன. ஆனால் ஒருவருடைய சுண்டு விரல்களை வைத்து அவர்களுடைய குணாதிசயங்களை கண்டு பிடிக்க முடியும். இவ்வாறு சுண்டு விரல்கள் மூலம் கணிக்கப்படும் போது பலன்கள் பொதுவான பலன்களாகவே இருக்கும். தங்களுடைய முழுமையான ஜோதிட பலன்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால். தங்களுடைய பிறந்த நேரம் மிகவும் அவசியமான ஒன்றாகும். சரி இந்த பதிவில் சுண்டு விரல் ஜோதிடம் மூலம் பொதுவான பலன்களை பற்றி படித்தறியலாம் வாங்க.

சுண்டு விரல் ஜோதிடம்

Little Finger Secret in Tamil:- இந்த சுண்டு விரல் ஜோதிடம் தென்கொரியாவில் பிரபலமாக காணப்படுகிறது. இருப்பினும் நமது நாட்டிற்கும் இந்த சுண்டு விரல் ஜோதிடம் பொருந்துகிறது. ஆண்களுக்கு வலது கையின் சுண்டுவிரல், பெண்களாக இருந்தால் இடது கையின் சுண்டுவிரல் அளவை வைத்து இந்த ஜோசியம் பார்க்கப்படுகிறது.

சமமான சுண்டு விரல்:

ஒருவருக்கு மோதிர விரலின் முதல் கோட்டிற்கு, சமமானதாக சுண்டுவிரல் இருந்தால், அவர்கள் எப்படிப்பட்ட குணம் உடையவர்கள் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

little finger secret

 • இவர்கள் மற்றவர்களிடம் பழகும்போது ஜாக்கிரதையாக பழகுவார்கள்.
 • ஒருவரை பற்றி நன்கு தெரிந்துகொண்ட பிறகுதான் அவர்களிடம் நெருங்கி பழக ஆரம்பிப்பார்கள்.
 • இவர்கள் அதிக கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
 • மிகவும் நேர்மையானவர்களாக இருப்பார்கள்.
 • நேர்மையற்ற குணங்களை கொண்டவர்களை கண்டாலே அதிகம் கோபம் அடைவார்கள்.
 • மிகவும் அமைதியாகவும், பொறுமைசாலியாகவும் இவர்கள் இருப்பார்கள்.
 • குறிப்பாக நண்பர்களிடமும், குடும்பத்தினரிடமும் உண்மையானவர்களாகவும், வெளிப்படையாகவும் பழகும் குணம் உடையவர்கள்.
 • அதேபோல் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமும் அதே குணங்களை எதிர்பார்ப்பார்கள்.
 • வெளியிலிருந்து பார்ப்பவர்கள் இவர்களை தலைகனம் கொண்டவர்கள் என்று கூறுவார்கள். ஆனால் இவர்களிடம் நெருக்கமாக பழகுபவர்களுக்கு தான் இவரின் உண்மையான, நேர்மையான குணாதிசயங்கள் நன்கு புரிந்திருக்கும்.

நீளமான சுண்டு விரல்:

little finger secret 1

மோதிர விரலின் முதல் கோட்டிற்கு, சுண்டு விரல் சற்று மேலே இருக்கும். இவர்களுடைய குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

 • இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களிடம் சிரித்த முகத்துடன் பழகுவார்கள்.
 • கடினமான உழைப்பாளி.
 • இவர்களுக்கு விசுவாசமான நண்பர்கள் இருப்பார்கள்.
 • இவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள்.
 • இவர்கள் அதிகமான கவனத்துடனும், முழுமையான மனதுடனும் தான் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுவார்கள்.
 • இந்த குணத்தினால் இவர்கள் மேற்கொள்ளும் எந்த காரியத்திலும் அவர்களது குறிக்கோளை எளிதில் அடைந்து வெற்றி பெறுவார்கள்.
 • இவர்கள் யாரிடமும் வீண் சண்டைக்கு செல்ல மாட்டார்கள்.
 • எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும் அமைதியாகவும், நிதானமாகவும் இருந்து கஷ்டத்தை சமாளித்து விடுவார்கள்.
இதையும் படியுங்கள்–> கால் விரல் ஜோதிடம்

சிறிய சுண்டு விரல்:

little finger secret 2

மோதிர விரலின் முதல் உள்ள கோட்டிற்கு, சுண்டு விரல் கீழே இருந்தால் அவர்களுக்கு என்ன பலன் என்பதை காண்போம்.

 • இவர்கள் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பர்.
 • இவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் இருக்காது.
 • மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கையை கொண்டவர்களாக இருப்பார்கள்.
 • இவர்கள் தங்கள் பக்கம் நியாயம் இருந்தால் விட்டுக்கொடுக்காமல் விவாதம் செய்வார்கள். அதே சமயம் தங்கள் பக்கம் தவறு இருந்தால் முதலில் வந்து மன்னிப்பு கேட்பவரும் இவர்கள் தான்.
 • இவர்களுக்கு கஷ்டம் ஏற்பட்டாலும், சந்தோஷம் ஏற்பட்டாலும் அதனை வெளிக்காட்டாமல் தன் மனதுக்குள்ளேயே வைத்து இருப்பார்கள்.
 • நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இவர்கள் மீது எப்போதும் நல்ல மதிப்பு வைத்திருப்பர்.
 • தெரிந்த விஷயத்தில் துணிச்சலுடன் ஈடுபடுவார்கள். தெரியாத புதிய விஷயத்தில் தலையிட மாட்டார்கள்.

அரிய வகை சுண்டு விரல்:

அரிய வகையான சுண்டுவிரல் இது. அனைவருக்கும் இருக்காது. மோதிர விரலும், சுண்டு விரலும் ஒரே அளவில் அமைந்திருக்கும்.

 • இவர்கள் தனித் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
 • அதிகாரமும், ஆளுமை சக்தியும் கொண்டவர்கள் இவர்கள்.
 • இவர்கள் பிரபலமானவர்களாக வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
இதையும் படியுங்கள் —> திருமண ரேகை பலன்

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்