வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சூரசம்ஹாரம் எப்போது 2024.? நேரம் மற்றும் தேதி இதோ.!

Updated On: November 6, 2024 5:07 PM
Follow Us:
Surasamharam Date 2024 Tamil
---Advertisement---
Advertisement

சூரசம்ஹாரம் தேதி 2024 | Surasamharam Date 2024 Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் 2024 ஆம் ஆண்டிற்கான சூரசம்ஹாரம்விழா எப்போது வருகிறது என்பதை இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். சூரசம்ஹாரம் விழா என்பது, முருகப்பெருமான் சூரபத்மன் என்னும் அரக்கனை 5 நாட்கள் போர் செய்து கடைசி நாளான 6 ஆம் நாள் அன்று வதம் செய்தார். இதனையே சூரசம்ஹாரம் விழாவாக கொண்டாடி வருகிறோம். அதாவது, முருக பெருமான் சூரனை அளித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் விழா ஆகும்.

சஷ்டி என்றால் ஆறு என்று பொருள். ஐப்பசி மாதம் வரக்கூடிய சுக்ல பட்சம் பிரதமை திதி முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலம் ஆகும். இந்நாட்களில், முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டு வந்தால் முருகப்பெருமான் வேண்டிய வரத்தினை அளிப்பார். முக்கியமாக, குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரத்தினை அளிப்பார். எனவே, இந்த சூரசம்ஹாரம் விழாவினை முருகன் கோவில்களில் காண்பது மிகவும் நல்லது.

சூரசம்ஹாரம் தேதி 2024:

இந்த ஆண்டு சூரசம்ஹாரம் விழா ஆனது, நவம்பர் 07 ஆம் தேதி (ஐப்பசி 21 ஆம் தேதி) வியாழக்கிழமை அன்று வருகிறது. கந்த சஷ்டி விரதத்தின் கடைசி நாளே சூரசம்ஹாரம் ஆகும். அன்றைய தினம் அணைத்து முருகன் கோவில்களிலும், கந்தசஷ்டி சூரசம்ஹாரம் விழா நடைபெறும்.

கந்த சஷ்டி விரதம் எப்போது 2024 தெரியுமா.?

Tiruchendur Soorasamharam 2024 in Tamil:

சூரசம்ஹாரம் தேதி 2024

  • சூரசம்ஹாரம் விழா ஆனது, குறிப்பாக திருச்செந்தூரில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். ஏனென்றால், முருகப்பெருமான் சூரபத்மன் என்னும் அரக்கனை திருச்செந்தூரில் போர் செய்து வைத்தான் செய்தார். அதன் பிறகு, முருகர் சிவ பூஜை செய்வதற்காக கட்டப்பட்ட கோவில்/இடம் தான் திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவில்.
  • கந்த சஷ்டி இறுதி நாளான சூரசம்ஹாரம் விழாவானது, திருச்செந்துரில், நவம்பர் 07 ஆம் தேதி வியாழன்கிழமை அன்று நடைபெறும். அன்றைய தினம் மாலை, 04.15 PM மணிக்கு தொடங்கி 06.00 PM வரை நடைபெறும்.
  • சஷ்டி திதி ஆனது, நவம்பர் 6 ஆம் தேதி இரவு 10.03 PM மணிக்கு தொடங்கி நவம்பர் 7 ஆம் தேதி இரவு 9.20 PM மணிக்கு முடிவடைகிறது.
  • அதன்பிறகு, அடுத்த நாளான நவம்பர் 08 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று திருக்கல்யாணம் நடைபெறும். திருக்கல்யாணத்திற்கு பிறகு பட்டணபிரவேசம், ஊஞ்சல் உற்சவம் போன்ற நிகழ்வுகளும் நடைபெறும்.

சூரசம்ஹாரம் என்றால் என்ன.? அது தோன்றிய வரலாற்று கதை என்ன.?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now