Suriya Kiraganam 2024 Date and Time in Tamil Nadu
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இந்த ஆண்டு சூரிய கிரகணம் 2024 எப்போது நிகழும் என்பதை இப்பதிவில் விவரமாக பார்க்கலாம் வாங்க. சூரிய கிரகணம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது ஏற்படுகிறது. இது ஏற்படும் போது சூரியனின் முகத்தை முற்றிலுமாக மறைக்கும். முழு சூரிய கிரகண நாளில், வானம் விடியற்காலை அல்லது அந்தி சாயும் நேரம் போல இருண்டு விடும்.
சூரிய கிரகணத்தை பார்க்க அனைவரும் ஆவலாக இருப்போம். எனவே, இந்த ஆண்டு நிகழும் தேதி மற்றும் நேரம் பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க. அதுமட்டுமில்லாமல், இந்தியாவில் எங்கெல்லாம் சூரிய கிரகணம் தெரியும்.? என்பதையும் தெரிந்துகொள்ளலாம் வாங்க.
சூரிய கிரகணம் 2024 எப்போது.?
2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 08 ஆம் தேதி நிகழ இருக்கிறது. ஆனால், இந்த ஆண்டில் நிகழும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. நாசாவின் கூற்றுப்படி, முழு சூரிய கிரகணம் வட அமெரிக்காவைக் கடந்து, மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடாவைக் கடந்து செல்லும் என்று கூறப்படுகிறது. இந்த சூரிய கிரகணம் 4 மணி நேரம், 25 நிமிடங்கள் வரை நீடிக்கும் என கணிக்கப்படுகிறது. இதுவரை தோன்றிய சூரிய கிரகணத்தில் இப்போது தோன்றும் சூரிய கிரகணம் தான் நீண்ட கால அளவுள்ள சூரிய கிரகணம் ஆகும்.
சூரிய கிரகணம் அன்று குழந்தை பிறப்பது நல்லதா? கெட்டதா?
இந்தியாவில் தெரியுமா.?
ஏப்ரல் 08 ஆம் தேதி நிகழ உள்ள சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. அதாவது, இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவு நேரத்தில் நிகழ்வதால், பார்க்க முடியாது.
இந்திய நேரத்தின் படி, சூரிய கிரகணம் ஏப்ரல் 08 ஆம் தேதி, இரவு 10:08 மணிக்கு தொடங்கி, ஏப்ரல் 09 ஆம் தேதி, நள்ளிரவு 2:22 மணிக்கு நிறைவடைகிறது.
சூரிய கிரகணம் எங்கு பார்க்கலாம்.?
சூரிய கிரகணம் மெக்சிகோவில் சினாலோவா முதல் கோஹுயிலா வரையிலும், அமெரிக்காவின் டெக்ஸாஸ் முதல் மைனே வரை, கனடாவில் ஒண்டாரியோ முதல் நியுபவுண்ட்லாண்ட் வரை தெரியும் என கூறப்படுகிறது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |