சூரிய கிரகணம் 2025 தேதி மற்றும் நேரம்.! | Surya Grahan 2025 in India Date and Time in Tamil

Advertisement

Suriya Kiraganam 2025 Date and Time in Tamil | சூரிய கிரகணம் எப்போது தோன்றும் 2025

ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இந்த ஆண்டிற்கான 2025 சூரிய கிரகணம் எப்போது நிகழ்கிறது.? (Surya Grahan 2025 in India Date and Time) என்பதை இந்த வீடியோவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. அதாவது, சூரியனின் ஒளியை பூமிக்கு முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கும் ஒரு வானியல் நிகழ்வு என்று கருதப்படுகிறது.

இன்னும் தெளிவாக சொல்லப்போனால், சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. 2025ம் ஆண்டில் மொத்தமாக 2 சூரிய கிரகணம் நிகழ இருக்கிறது என்று நாசா கணித்துள்ளது. அவை எப்போது தோன்றுகிறது என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

சூரிய கிரகணம் 2025 தேதி மற்றும் நேரம் | Surya Grahan 2025 Date and Time in India:

சூரிய கிரகணம் எப்போது தோன்றும் 2025

2025 ஆம் ஆண்டில் இரண்டு சூரிய கிரகணம் தோன்றும் என்று கூறப்படுகிறது. முதலாவது சூரிய கிரகணம் மார்ச் 29 ஆம் தேதியும், இரண்டாவது சூரிய கிரகணம் செப்டம்பர் 21 ஆம் தேதியும் நிகழும் என்று கூறப்படுகிறது.

முதல் சூரிய கிரகணம் 2025:

 2025 ஆம் ஆண்டில் முதல் சூரிய கிரகணம் மார்ச் 29 ஆம் தேதியன்று, இந்திய நேரப்படி பிற்பகல் 2:20 PM  மணிக்கு தொடங்கி மாலை 6:13 PM மணிக்கு முடிவடையும். இது பகுதி நேர சூரிய கிரகணமாக நிகழ உள்ளது. இந்த கிரகணம் சுமார் நான்கு மணி நேரம் வரை  நீடிக்கும் என்று கூறப்படுகிறது.  மேலும், கிரகணம் மாலை 04:17 PM மணிக்கு உச்சத்தை அடையும் என்றும் நாசா கூறியுள்ளது.

 சூரிய கிரகணம் 2025 தேதி மற்றும் நேரம்

இந்தியாவில் சூரிய கிரகணம் தெரியுமா.?

இந்த ஆண்டு நடக்கும் முதல் சூரிய கிரகணம் (மார்ச் 29, 2025) இந்தியாவில் சூரிய கிரகணம் தெரியாது.

எங்கெல்லாம் சூரிய கிரகணம் தெரியும்.?

  • ஆசியா
  • ஆப்பிரிக்கா
  • ஐரோப்பா
  • அட்லாண்டிக் பெருங்கடல்
  • ஆர்க்டிக் பெருங்கடல்
  • வட அமெரிக்கா
  • தென் அமெரிக்கா

இரண்டாவது சூரிய கிரகணம் 2025:

 surya grahan 2025 date and time in india

 இரண்டாவது சூரிய கிரகணம் செப்டம்பர் 21 ஆம் தேதி அன்று நிகழும் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டாவது சூரிய கிரகணமும் பகுதி நேரமாக உருவாக உள்ளது. செப்டம்பர் 21 ஆம் தேதி அன்று இரவு 10.59 PM மணிக்கு தொடக்கி, செப்டம்பர் 22 ஆம் தேதி அதிகாலை 03.23 AM மணி வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.  

இந்த சூரிய கிரகணமும் இந்தியாவில் தெரியாது, நியூசிலாந்தில்  மட்டுமே தெரியும் என்று கணிக்கப்படுகிறது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement