இன்றிலிருந்து சூரிய பெயர்ச்சி ஆரம்பம், இதனால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல காலமா.! கெட்ட காலமா.!

Advertisement

சூரிய பெயர்ச்சி 2023

கிரகங்களுக்கு ராஜாவாக இருப்பது சூரியன் தான். சூரிய பகவான் இன்று காலை மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்திருக்கிறார். இவர் மிதுன ராசியிலேயே ஒரு மாதம் இருக்கிறார். அதன் பிறகு கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ஒன்பது கிரகங்களில் சூரிய கிரகம் தான் மிகபெரிய கிரகமாக கருதப்படுகிறது. ராசியில் சூரியன் நன்றாக இருந்தால் தான் செல்வ செழிப்போடு இருக்க முடியும். ஆன்மிக படி சூரிய பெயர்ச்சி 12 ராசிகளையும் பாதித்தாலும் கூட சில ராசிகளுக்கு அபரிமிதமான பலன்களை அள்ளி தர போகிறது. அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

சூரிய பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகிறது:

சனி செவ்வாய் கிரகத்தால் இந்த ராசிக்காரவங்க படாத பாடு படப்போறாங்களாம்..! கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்கப்பா..!

கும்பம்:

கும்பம் ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் வீட்டில் சூரிய பெயர்ச்சி நடக்கிறது. சூரியனின் பெயர்ச்சி உங்களுக்கு எல்லா விதத்திலும் சாதகமாக இருக்கும். கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகமாக கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புதிதாக தொழில் அல்லது வியாபாரம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த காலம் உகந்ததாக இருக்கும். உங்களின் வாழ்க்கை துணையுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். இதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள்.

சிம்மம்:

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு பதினோறாம் வீட்டில் சூரியனின் பெயர்ச்சி நடக்கிறது. இதனால் நீங்கள் எந்த செயலை செய்தாலும் அதில் வெற்றியை காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்களின் செயல்கள் அனைத்திற்கும் பக்க பலமாக இருப்பார்கள். புதிதாக சொத்து அல்லது வாகனம் போன்றவை வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. பணவரவு அதிகமாக காணப்படும். இதனால் எதிர்காலத்திற்கு உதவும் படி பணத்தை சேமித்து வைப்பீர்கள்.

ஆண்டியையும் அரசனாக்கும் புத-ஆதித்ய யோகத்தால் அரசனாக போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்

கடகம்:

கடகம் ராசிக்காரர்கள்

சூரிய பெயர்ச்சி மிதுன ராசியில் பெயர்ச்சி அடைவதால் கடக ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை தரும். நிறுவனம் அல்லது வேறு ஏதும் துறையில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயலுக்கான அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். நீங்கள் ஏதும் முதலீடு செய்திருந்தால் அதில் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

மேஷம்:

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சூரிய பெயர்ச்சி செல்வ செழிப்போடும், புகழோடும் இருப்பீர்கள். இதுவரை வேலையில்லாதவர்களுக்கு பிடித்த வேலை கிடைக்கும். வேலை சம்மந்தமாக வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. உங்களிடம் தைரியமும், நம்பிக்கையும் அதிகரிக்கும். எந்த செயலை தொடங்கினாலும் அதில் வெற்றியை அடைவதற்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கிறது.

ஒரு வருடத்திற்கு பிறகு மிதுனத்திற்கு செல்லும் புதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட யோகம் அடிக்கப்போகுது 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement