Suriya Peyarchi Sathayam Natchathiram 2025
கிரகங்களுக்கு ராஜாவாக இருப்பது சூரிய பகவான் தான். இவர் சதய நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைய இருக்கிறார். பிப்ரவரி 19 அன்று கிரகங்களின் ராஜாவான சூரியன், தனது நட்சத்திர மண்டலத்தை மாற்றியதன் மூலம் தனது பெயர்ச்சியை மாற்றியுள்ளார். தற்போது, அவர் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். சதயம் ஒரு சிறப்பு நட்சத்திரமாகும். இதன் அதிபதி ராகு கிரகம் ஆகும். ஆனால் சனியும் இந்த நட்சத்திரத்தில் பெரும் செல்வாக்கைக் கொண்டுள்ளது. இதற்குக் காரணம், இந்த நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் கும்ப ராசியில் வருகின்றன.
ஆன்மிகத்தில் சதயம் நட்சத்திரத்தில் சூரியனின் பெயர்ச்சி ஒரு சிறப்பு வாய்ந்தததாக இருக்கும் என்று கூறுகிறார்கள். ராகு மற்றும் சனி இருவரும் சூரியனுக்கு எதிரிகளாகக் கருதப்படுகிறார்கள். பெரும்பாலான ராசிக்காரர்களுக்கு இது எதிர்மறையான விளைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது, ஆனாலும் சூரிய பகவானின் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். அவை எந்தெந்த ராசிகள் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு சூரிய பகவான் பெயர்ச்சி ஆனது மிகவும் நல்லதாக இருக்கும். நீங்கள் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களாக இருந்தால் உங்களின் அங்கீகாரம் அதிகரிக்கும். அதுவே சொந்தமாக தொழில் செய்பவராக இருந்தால் நீங்கள் முதலீடு செய்யும் அனைத்திலும் வெற்றியை அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மேலும் பிள்ளைகள் ஆசைப்பட்டதை வாங்கி தருவீர்கள். நீங்கள் எந்த செயலை செய்தாலும் அதிர்ஷ்டம் கிடைத்து கொண்டே இருக்கும். நீங்கள் எதிர்பார்க்காத விஷயங்கள் எல்லாம் நடக்கும். வேலை இல்லாதவர்களுக்கு அவர்கள் ஆசைப்பட்ட வேலை கிடைக்கும்.
சனி பகவானால் சில ராசிக்காரர்களுக்கு 2025 படாத பாடா இருக்க போகுது
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியனின் பெயர்ச்சி ஆனது விசேஷமான ஒன்றாக இருக்கிறது. பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மேலும் பணியிடத்தில் உங்களின் செயல்களை கண்டு உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள். வியாபாரம் செய்பவர்களாக இருந்தால் நீங்கள் முதலீடு செய்வது அனைத்துமே உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும். உங்களின் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி முழு ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு சூரிய பெயர்ச்சியானது சாதகமான பலன்களை கொடுக்கும். இதனால் நீங்கள் எந்த செயல் செய்தாலும் அதில் வெற்றியை அடைவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். உங்களின் அறிவு திறனை மேம்படுத்தி கொள்வீர்கள். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். பணியிடத்தில் சக பணியாளர்கள் பக்க பலமாக இருப்பார்கள். பணவரவு சிறப்பானதாக இருக்கும். இதனால் உங்களின் சேமிப்பை அதிகப்படுத்தி கொள்வீர்கள். மேலும் குடும்பத்தில் உள்ளவர்களுடன் நேரத்தை கழிப்பீர்கள். பிள்ளைகள் ஆசைப்பட்டதை வாங்கி தருவீர்கள். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியை பராமரிப்பீர்கள். இதுவரை ஏதும் சொத்து சம்மந்தப்ட்ட பிரச்சனை இருந்தால் அவை முடிவுக்கு வரும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |