சூரியன், புதன், குரு, ராகு மேஷ ராசியில் இணைவதால் இந்த ராசிகளுக்கு திடீர் பணவரவு கிடைக்கும் 

Advertisement

சூரியன் புதன் குரு சேர்க்கை

ஜோதிடத்தின் படி கிரகங்களின் சேர்க்கை 12 ராசிகாரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஒரே ராசியில் நான்கு கிரங்களின் சேர்க்கை உள்ளது. இதனால் 12 ராசிகளுக்கும் பலன்களை கொடுத்தாலும் சில ராசிகளுக்கு மட்டும் தான் பலன்களை அல்லி தர போகின்றது. அது என்னென்ன ராசிகள் என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

தனுசு:

தனுசு ராசி

ஜோதிட சாஸ்திரத்தின் படி நான்கு கிரகங்களின் சேர்க்கையால் தனுசு ராசிகளுக்கு வாழ்க்கையில் ஏராளமான நன்மைகளை அள்ளி தர போகிறது. இந்த நேரத்தில் படிக்கும் மாணவர்களாக இருந்தால் கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களின் தொப்புள் கொடி உறவுகள் அனைத்து விதத்திலும் பக்க பலமாக இருப்பார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுவயதிலே பெரிய பதவிக்கு செல்லும் அதிர்ஷ்டம் இருக்குமாம்..! இதுல உங்க நட்சத்திரம் இருக்கா..!

மிதுனம்:

மிதுனம்

 நான்கு கிரங்களின் சேர்க்கையால் மிதுன ராசிக்காரர்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் செய்யும் எல்லா செயல்களையும் தன்னபிக்கையுடன் செய்வீர்கள். நீங்கள் செய்யும் பணியிலுருந்து மாற நினைத்தால் இந்த அநேரம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். உங்களின் நண்பர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  

ரிஷபம்:

ரிஷபம்

 

நான்கு கிரங்களின் சேர்க்கையால் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். படிக்கும் மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் உடன் பிறந்தவர்கள் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் பக்க பலமாக இருப்பார்கள்.

மேஷம்:

மேஷம்

மேஷ ராசியில் நான்கு கிரகங்கள் இணைந்துள்ளது. இதனால் மன அமைதியோடு இருப்பீர்கள். நண்பர்களிடம் பண உதவியை பெறுவீர்கள். தொழிலில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும், இதனால் எதிர்கால பயன்பாட்டிற்காக பணத்தை சேமிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும்.

உலகின் மிகப்பெரிய பணக்காரர் ராசி எது தெரியுமா..?

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement