சூரியன் புதன் சேர்க்கை பலன் – Suriyan budhan Serkai in Tamil
பொதுவாக கிரங்கள் என்பது நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது. அதாவது ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு ராசிக்கு மாற்றம் அடையும் போது அது சில ராசிக்கு நன்மை அளிக்கும். சில ராசிக்கு தீமை அளிக்கும். இது அனைத்துமே ராசிகளின் கிரகங்களை பொறுத்தது. அந்த வகையில் தான் நாளை அதாவது 07.06.2023 புதன் பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி செய்கிறார். இதனால், சுக்கிரனின் ராசியில் புதன் சஞ்சாரத்தால் கஜகேசரி யோகம் உருவாகிறது. ஆகவே நாளை முதல் எந்த ராசிக்கு நல்ல பலன்களை கொடுக்க போகிறார் என்று பார்க்கலாம் வாங்க..!
Suriyan budhan Serkai in Tamil:
மீன ராசி:
மீன ராசிக்கு நாளை முதல் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதன் பகவான் மீன ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி செய்வதால் கஜகேசரி யோகம் உருவாகிறது. ஆகவே தொழில் சிறப்பாக இருக்கும். நல்ல முன்னேற்றம் இருக்கும். முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் மனபாரம் குறையும். ஆகவே இதுவரை இருந்துவந்த மன வருத்தங்கள் குறையும்.
வாழ்க்கையில் செல்வ செழிப்பை அதிகரிக்க உதவும் குபேரர் மந்திரங்கள்..!
மகர ராசி:
புதன் பகவான் ரிஷப ராசிக்கு செல்வதால் மகர ராசிகாரர்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்க போகிறது. உங்களுக்கு பொருளாதார மேம்பாடு இருக்கும். நிதி நிலை ஏற்ற வகையில் அமையும். நீங்கள் வேலை செய்யும் இடங்களில் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். அரசு வேலையை தேடி வரும். குடும்பத்தில் இருந்த மன கசப்புகள் நீங்கும்.
துலாம் ராசி:
துலாம் ராசிக்கு நாளை முதல் அனுகூலமாக இருக்கும். புதன் பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி செய்வதால் இதுவரை இருந்த கஷ்டங்கள் நீங்கி நல்ல பலன்களை அடைவார்கள். வியாபரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். பிள்ளைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். அதனை பார்த்து நீங்களும் மகிழ்ச்சி காண்ப்பீர்கள். சமூகத்தில் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்.
கன்னி ராசி:
கன்னி ராசிக்காரர்களே, உங்களுக்கு பொருளாதாரம் சாதகமாக இருக்கும். புத்தம் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எதிர்காலத்தில் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தொழில் புதிய இணைப்புகள் கிடைக்கும். அதேபோல் நல்ல வருமானம் பார்க்க முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது.
ஜூன் 7 முதல் தலைகீழாக மாறப்போகும் ராசிகள் எது தெரியுமா
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |