சூரியன் செவ்வாய் சேர்க்கையால் 2024 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்..!

Advertisement

Suriyan Sevvai Serkai Palangal 2024

ஜோதிடத்தின்படி, நவ கிரங்களின் பெயர்ச்சி நிலையில் தான் நம் வாழ்க்கையின் பாதையே இருக்கிறது. அதாவது, நவ கிரகங்கள் எனப்படும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது ஆகிய கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைந்துகொண்டே இருக்கும். அவ்வாறு பெயர்ச்சி அடையும்போது ஒவ்வொரு ராசிக்கான பலன்களும் மாறுபடும். ஒவ்வொரு கிரகத்தின் பெயர்ச்சியும் ஒவ்வொரு விதமான பலன்களை அளிக்கும். அதாவது, 12 ராசிகளில் ஒரு சில ராசிகளுக்கு சுப பலன்களும் ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கிடைக்கும்.

அதேபோல், சில நேரங்களில் ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட ராசிகளின் சேர்க்கை இருக்கும்போது அது அதிர்ஷ்ட பலன்களை அளிக்கும். அந்த வகையில், பிப்ரவரியில் சூரியன் செவ்வாயுடன் இணைய போகிறார். அதாவது, சூரியன் செவ்வாய் சேர்க்கை மகர ராசியில் உருவாகிறது. இதனால் குறிப்பாக மூன்று ராசிகள் மட்டும் அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள். அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

ரிஷப ராசி:

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மற்றும் சூரியனின் சேர்க்கை சாதகமானதாக இருக்கும். இக்காலத்தில் நீங்கள் நிலம் வாங்கலாம். மேலும், தொழில் செய்பவர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தை பெறுவார்கள். வியாபாரம் செய்பவர்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது. அரசு வேலை தேடும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் நல்ல செய்தி வரும். மாணவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும்.

டிசம்பர் 16 முதல் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் 2024 இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிஷ்ட கதவு திறக்கவுள்ளது..

மேஷ ராசி:

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மற்றும் சூரியனின் சேர்க்கை அதிர்ஷ்டம் தருவதாக இருக்கும். இக்காலத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் செய்பவர்கள் இக்காலத்தில் நல்ல வருமானத்தை பெறலாம். எனவே, அந்த வகையிலும் செவ்வாய் மற்றும் சூரியனின் சேர்க்கை அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும்.

தனுசு ராசி:

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மற்றும் சூரியனின் சேர்க்கை சாதகமானதாக இருக்கும். தனுசு ராசிக்காரர்களின் செல்வம் அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல், இக்காலத்தில் எதிர்பாராத பண வரவும் கிடைக்கும். முக்கியமாக வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement