Surya Peyarchi in Mesham 2025
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் 2025 ஆம் ஆண்டில் சூரிய பகவான் மேஷ ராசியில் சஞ்சரிப்பதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் பற்றி கொடுத்துள்ளோம். நவகிரகங்களில் முதன்மையாக கருதப்படுபவர் சூரிய பகவான். சூரியனை ஆத்மகாரகன், பித்ரு (தந்தை) காரகன் என்று கூறுவார்கள். ஜோதிடட்டத்தின்படி, சூரியனின் பெயர்ச்சி முக்கியமானதாக கருதப்படுகிறது. சூரியனின் நிலை என்பது அனைத்து ராசிக்கும் முக்கியமானது.
சூரியனின் நிலை மாறினால் அதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு 2025 சூரிய பகவான் ஏப்ரல் 14 ஆம் தேதி, திங்கட்கிழமை அன்று மேஷ ராசியில் பெயர்ச்சி ஆக உள்ளார். இதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருந்தாலும் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கும் மட்டும் அதிர்ஷ்டத்தை அளிக்க போகிறது. அந்த ராசிகள் யார் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். இதுல உங்க ராசி இருக்கான்னு படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
சூரியன் மேஷ ராசியில் பெயர்ச்சி ஆவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்:
சிம்ம ராசி:
சூரியன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். சூரியன் சிம்ம ராசியை ஆளும் கிரகம் என்பதால், இது உங்களுக்கு மங்களகரமான பலன்களை அளிக்கும். இந்த காலத்தில் அனைத்தும் சாதகமாக அமையும். சமூகத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். முக்கியாக பணவரவு உண்டாகும். லாபம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் சம்மந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சுமூகமான முடியும். உங்களின் நீண்ட நாள் கனவுகள்/இலட்சியங்கள் நிறைவேறும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு வரும். வேலை செய்பவர்களுக்கு பணியிடத்தில் வளர்ச்சி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
மேஷ ராசி:
மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியனின் பெயர்ச்சி லாபத்தை அளிக்கும். இக்காலத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்களின் ஆளுமை திறம் மேம்ப்படும். பதவி உயர்வு, ஊக்கத்தொகை அல்லது சலுகை போன்றவை கிடைக்கும். பணவரவு அதிர்ஷ்டம் அளிக்கும் வகையில் இருக்கும். அனைத்து பக்கங்களில் இருந்து பணவரவு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும்.
மகர ராசி:
சூரியன் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். அனைத்து வகையிலும் நன்மை அளிக்கும். ஒரு சிலருக்கு வீடு, நிலம் போன்ற சொத்துக்கள் வாங்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். ஊக்கத்தொகை, சலுகை மற்றும் பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். இதுவரை இருந்த வந்த பிரச்சனைகள் சாதகமாக முடியும். வியாபாரம் செய்பவர்களுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை புரிந்துகொள்வீர்கள். இதனால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |