சூர்ய பெயர்ச்சி
நவக்கிரகணங்களின் தலைவனான சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்கிறது. இந்த நகர்வு ஒவ்வொரு ராசியிலும் 30 நாட்கள் நடக்கிறது. இந்த சுழற்சி முடிய 1 வருடம் எடுத்துக்கொள்கிறது. இப்போது சூரியன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குள் நுழைகிறார். இது மற்ற ராசிகளையும் பாதிக்கும். சூரியனின் பெயர்ச்சியானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்து சூரியபெயர்ச்சி துலாம் ராசிக்கு நகர்வது மற்ற ராசிகளுக்கும் மிக பெரிய தக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு மிக மகத்தான வாய்ப்புகளை வழங்க கூடியதாக உள்ளது இந்த சூரிய பெயர்ச்சி. வாருங்கள் அந்த 4 ராசிக்காரர்கள் யார் என்று இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
சூர்ய பெயர்ச்சியால் பயனடையும் ராசிகள்:
மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி, நிதி ஆதாயம் உண்டாக்க கூடியதாக இருக்கும். குடும்பத்தில் சுப காரிகங்கள் நடப்பதற்கான வழி தோன்றும். துணையுடன் புரிந்துணர்வு ஏற்படும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தொல்லை சீராகும். கலைஞர்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும்.
ரிஷிபம்:

ரிஷிப ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானால் அனைத்து விதமான மங்கள நன்மைகளும் கிடைக்க கூடிய நாட்களாக வரும் நாட்கள் இருக்கும். நிதிநிலைமை சீராகும். சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பும் பதவியும் உயரும். பணியிடத்தில் பனி உயர்வு மற்றும் சம்பள உயர்வு இருக்கும். மாணவர்கள் அவர்களின் கனவுகளை நோக்கிய உங்கள் பயணம் சீராக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும்
மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி சகல பாக்கியங்களையும் தரக்கூடியதாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பூர்விக சொத்துக்கள் உங்கள் கைவசம் வந்து சேரும். சமூகத்தில் உங்களின் நிலையும் மதிப்பும் உயரும். தொழில் போட்டி குறைந்து வளர்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்த ஆரோக்கிய பிரச்சனை நீங்கும்.
தனுசு:

சூரியனின் பெயர்வு தனுஷ ராசிக்காரர்களுக்கு பல்வேறு விதமான அதிர்ஷ்டங்களை வழங்க போகிறது. வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பணி உயர்வுக்கு வாய்ப்புள்ளது. உங்கள் தொழில் அடுத்த நிலையை அடைய நீங்கள் புதிய முயற்சிகளை எடுக்க சிறந்த நாளாக இருக்கும்.பண வரவில் குறைவிருக்காது. சேமிப்பு அதிகரிக்கும்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |













