Swarna Akarshana Bhairava Ashtakam
கடவுளுக்கு பூஜை செய்யும் அவருக்கு உகந்த பலகாரம், பூ, மாலை போன்றவை வைத்து வழிபடுவோம். கடவுளுக்கு உகந்தவற்றை வைத்து வழிபடுவதால் அவரின் அருள் முழுமையாக கிடைக்கிறது என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது. அது போல கடவுளுக்கு உரிய ஸ்லோகங்கள். மந்திரங்கள் போன்றவற்றை கூறுவதாலும் கடவுளின் அருள் முழுமையாக கிடைக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் சுவர்ண ஆகர்ஷண பைரவர் அஷ்டகம் பாடல் வரிகளை அறிந்து கொள்வோம். இந்த பாடல்களை பாடுவதால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும்.
சுவர்ண ஆகர்ஷண பைரவர் அஷ்டகம்:
தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின்
தளர்வுகள் தீர்ந்துவிடும்
மனந் திறந்தவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின்
மகிழ்வுகள் வந்து விடும்
சினந்தவிர்த் தன்னையின் சின்மயப்புன்னகை
சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான் – ( தனக்கிலை யீடு )
வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான்
வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான்
காவலாய் வந்திடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான் – ( தனக்கிலை யீடு )
முழு நில வதனில் முறையொடு பூஜைகள்
முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடைமைகள் காப்பன்
உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து
முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான் – ( தனக்கிலை யீடு )
நான்மறை ஒதுவார் நடுவினில் இருப்பான்
நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான்
தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான்
வாழ்த்திட வாழ்த்திடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான் – ( தனக்கிலை யீடு )
பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான்
பூரணன் நான் என்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை
நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம்
யாவையும் போக்கிடுவான்
தனக்கிலை யீடு யாருமே
என்பான் தனமழை பெய்திடுவான் – ( தனக்கிலை யீடு )
முருகனின் புகழ் கூறும் அருணகிரிநாதரின் சேவல் விருத்தம்.
பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான்
பொன் குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணி
கனகனாய் இருந்திடுவான்
நிழல் தரும் கற்பகம் நினைத்திட பொழிந்திடும்
நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே
என்பான் தனமழை பெய்திடுவான் – ( தனக்கிலை யீடு )
சதுர்முகன் ஆணவத் தலையினைக் கொய்தான்
சத்தொடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான்
புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான்
பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான் – ( தனக்கிலை யீடு )
ஜெய ஜெய வடுக நாதனே சரணம்
வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய க்ஷத்திர பாலனே சரணம்
ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா
செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்
மஞ்சளிலே நீராடி அம்மன் பாடல் வரிகள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |