ஸ்வஸ்திக் சின்னம் பலன்கள் | Swastik Symbol Benefits in Tamil

Swastik Symbol Benefits in Tamil

ஸ்வஸ்திக் சொல்லும் ரகசியம் | Swastik Chinnam Nanmaigal

வணக்கம் ஆன்மீக அன்பர்களே இன்றைய ஆன்மீக பதிவில் ஸ்வஸ்திக் சின்னத்தின் நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். விநாயக கடவுளின் கையில் மங்கள சின்னமாக இந்த ஸ்வஸ்திக் சின்னம் அமைந்துள்ளது. எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்கும் முன்னும் நாம் அனைவருமே விநாயகரை வழிபாடு செய்வது வழக்கம். வாங்க ஸ்வஸ்திக் பற்றிய பல தகவலை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

கடன் பிரச்சனை முழூவதும் விலக

ஸ்வஸ்திக் வடிவமைப்பு:

இந்த ஸ்வஸ்திக் வடிவமைப்பானது மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்கே செல்லும் கோடுகளே ஸ்வஸ்திக் சின்னம்.

ஸ்வஸ்திக் சின்னத்தின் சிறப்பு:

வீட்டு நிலைகளில் இதனை மஞ்சள், குங்குமம் கொண்டு வரைவார்கள். “ஸ்வஸ்திக்” என்றால் தடையற்ற நல்வாழ்வு என்பது பொருள். வெற்றியைத் தேடி தருவது ஸ்வஸ்திக் சின்னமாகும்.

ஸ்வஸ்திக் என்பதற்கு பொருள்:

ஸ்வஸ்திக் அடையாளம் என்பது நாசி ஜெர்மனியின் அதிர்ஷ்ட அடையாளமாக இருந்து வருகிறது. இது நலனின் சின்னமாக இருக்கிறது. இதனுடைய பெயர் சமஸ்கிருத மொழியிலிருந்து சூட்டப்பட்டுள்ளது. இதில் ஸூ என்பதற்கு நல்லது என்றும் அஸ்தி என்பதற்கு நல்வாழ்வு என்பதும் பொருளாக உள்ளது.

ஸ்வஸ்திக் கோலம் எதனால் போடப்படுகிறது:

ஸ்வஸ்திக் சின்னத்தில் இருக்கக்கூடிய எட்டு கோடுகள் எட்டு சின்னத்தினை குறிக்கிறது. ஸ்வஸ்திக் சின்னத்தில் நடுவில் இருக்கக்கூடிய புள்ளி நம் ஆத்மாவினை குறிக்கிறது.

வீட்டில் உள்ளவரின் ஆத்மா அனைத்து திசைகளிலும் உள்ள தெய்வங்களை நோக்கி பிராத்தனை செய்து கொண்டே இருக்கட்டும் என்பதற்காகவே ஸ்வஸ்திக் கோலம் போடப்படுகிறது.

வீட்டில் செல்வம் செழிக்க லட்சுமி மந்திரம்

வீட்டில் செல்வம் அதிகரிக்க:

நம் அனைவரும் மனதார வேண்டும் விநாயகரின் கையில் சின்னமாக பொறிக்கப்பட்டு இருப்பது தான் இந்த ஸ்வஸ்திக் சின்னம்.

ஸ்வஸ்திகா சின்னம் தெய்வங்கள் குடியிருக்கும் சின்னமாகும். இந்த சின்னம் வரையப்பட்ட இடங்களிலோ அல்லது வீடுகளிலோ செல்வ செழிப்பானது அதிகமாக இருக்கும்.

இந்த சின்னத்தை வீட்டின் கதவுகளில், பணப்புழக்கம் உள்ள பெட்டிகளில், பூஜை அறை போன்ற இடங்களில் சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறத்திலான வண்ணங்களில் வரைந்தோ அல்லது ஒட்டிக்கொண்டாலோ வீட்டில் பல நன்மைகள் உண்டாகும்.

குறிப்பாக இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை காலில் மிதிப்படாத அளவிற்கு போடுதல் நல்லது. ஒவ்வொருவரின் வாழ்விலும் தடையற்ற வாழ்வு அமைவதற்கு வீட்டில் இந்த சின்னத்தை வரைந்து வைத்து வழிப்படுவது நல்லது.

எதிர்மறை ஆற்றலை அழிக்க:

சமஸ்கிருதத்தில் ஸ்வஸ்திகா என்பதற்கு “அதிர்ஷ்டம்”, “நன்மை” என்ற பொருள் கொண்டதாகும். இந்த சின்னத்தை அதிகமாக பயன்படுத்துவதால் தங்களிடம் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் விலகி நேர்மறை சக்தி அதிகமாக கிடைக்கும். தீய சக்திகள் அனைத்தும் விலகிவிடும். வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்து நிம்மதியான வாழ்க்கையினை கொடுக்கும்.

ஸ்வஸ்திக் சின்னங்கள் உணர்த்துபவை:

நான்கு வேதமங்கள்ரிக், யஜுர், சாம, அதர்வண
நான்கு திசைகள்கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு
நான்கு யுகங்கள்சத்ய, த்ரேதா, துலாபார, கலியுகம்
நான்கு ஜாதிகள்பிராமண, ஷத்ரிய, வைஷ்ய, சூத்திர
நான்கு யோகம்ஞான, பக்தி, கர்ம, ராஜ
நான்கு மூலங்கள்ஆகாயம், வாயு, நீர், நிலம்
நான்கு வாழ்க்கை பருவங்கள்குழந்தை, பிரம்மச்சரியம், கிரஹஸ்தர், சந்நியாசி

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்