சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்..!

Advertisement

Swathi Natchathiram

நாம் நிறைய நபர்களிடம் நெருங்கி பழகி இருப்போம். அதிலும் ஒரு சிலர் நமக்கு அதிகமாக நெருக்கம் உடைய நபராக இருப்பார்கள். அந்த வகையில் பார்த்தால் என்ன தான் நாம் நெருங்கி பழகி இருந்தாலும் கூட ஒவ்வொருவரின் குணம் என்பது ஏதோ ஒரு இடத்திலாவது வேறுபட்டு தான் காணப்படுகிறது. இத்தகைய முறையினை ஒப்பிட்டு பார்க்கும் போது நாம் அனைவருக்கும் தனித்தனியாக ராசி மற்றும் நட்சத்திரம் என்பது இருக்கும். இதற்கு ஏற்றவாறு தான் நம்முடைய குணம் மற்றும் மற்ற அனைத்தும் மாறுபடும். அதனால் இன்று துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணம் முதல் வாழ்க்கை வரை என அனைத்தும் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க ஆன்மீக நண்பர்களே..!

கும்ப ராசி சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் பற்றி தெரியுமா 

சுவாதி நட்சத்திரம் குணங்கள்:

ஜோதிடத்தில் உள்ள 27 நட்சத்திரங்களில் சுவாதி நட்சத்திரம் 15-வது இடத்தில் இருக்கிறது. மேலும் சுவாதி நட்சத்திரத்திற்கு விளக்கு என்ற வேறு ஒரு பெயரும் இடம் பெற்று இருக்கிறது.

 சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

  • இந்த நட்சத்திரக்காரர்கள் எப்போதும் அதிக தன்னம்பிக்கை உடையவராகவும், அதிகமாக இரக்க குணம் உள்ளவராகவும் மற்றும் உதவி மனப்பான்மை உடையவராகவும் காணப்படுவார்கள்.
  • அதேபோல் செய்யும் செயல் எதுவாக இருந்தாலும் அதை திறம்பட செய்து முடிப்பார்கள். மேலும் எடுத்த செயலை செய்து முடித்தே ஆக வேண்டும் என்று ஆற்றல் உடையவர்கள்.
  • கலைகளில் அதிக ஆற்றலும், சுறு சுறுப்பான குணத்தினையும் கொண்டவர்கள். அதேபோல் நட்பு வட்டாரங்கள் என்பது மிகவும் அதிகமாக உள்ளது.
  • சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதுவாக இருந்தாலும் சிந்தித்து செயல்படுபவராகவும், நேர்மை குணத்தினை இயற்கையிலேயே பெற்று செயல்படும் திறமை உடையவராகவும் திகழ்வார்கள்.
  • இந்த நட்சத்திரக்காரர்களுக்கு விளையாட்டு தன்மை என்பது அதிகமாக இருந்தாலும் கூட அதிகமாக முன்கோபம் உடையவராகவும் இருப்பார்கள்.
  • மேலும் குடும்பத்தில் உள்ளவர்கள் மீது அதீத பாசம் உடையவராகவும் இருப்பார்கள்.

சுவாதி நட்சத்திரம் திருமண வாழ்க்கை:

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருமண வாழ்க்கை என்பது நீண்ட நாட்கள் கழித்து அமையும் ஒரு காலமாக உள்ளது. ஆனால் திருமணத்திற்க்கு பிறகு குடும்பத்தில் உள்ளவர்கள் மீது அதிகப்படியான பாசத்துடன் நடந்து கொள்வீர்கள்.

மேலும் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு திருமணம் என்பது காதல் திருமணமாக அமையும் வாய்ப்பு என்பது மிகவும் குறைவு.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணம் இப்படி தான் இருக்குமா 

சுவாதி நட்சத்திர தொழில் மற்றும் கல்வி:

கல்வி என்பது இவர்களுக்கு எளிமையான ஒன்றாக இருக்கும். பிடிக்கும் படத்தினை சிறந்த முறையில் கற்கும் வல்லமை உடையவராக திகழ்வார்கள்.

மேலும் தொழில் என்பது மார்க்கெட்டிங் ரீதியான, கலைத்துறை மற்றும் ஆசிரியர் பணிகளில் வேலை செய்யும் நிலைமை தான் அமையும்.

அதிர்ஷ்டமான எண், மந்திரம் மற்றும் நிறம்:

  1. அதிர்ஷ்டமான எண்: 1,4,7
  2. அதிர்ஷ்ட நிறம்: கருப்பு
  3. வணங்க வேண்டிய தெய்வம்: துர்க்கை அம்மன் 
  4. அதிர்ஷ்ட கல்: கோமேதக கல்
  5. அதிபதி: ராகு பகவான் 

மந்திரம்:

ஓம் வாயவே நம

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் தெரியுமா

சுவாதி நட்சத்திரம் பொருந்தும் நட்சத்திரம்:

பெண் நட்சத்திரம்:

பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3 மற்றும் 4-ஆம் பாதம், பூரம், புனர்பூசம், அவிட்டம் 1 மற்றும் 2 ஆம் பாதம் ஆகியவை பெண் நட்சத்திரதிற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரம்.

ஆண் நட்சத்திரம்:

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரம் அனுஷம், புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், பூரட்டாதி 1, 2 மற்றும் 3-ஆம் பாதம் ஆகும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement