ஜோதிடம் பற்றி தெரிந்து கொள்வோம் | Tamil Jathagam

Tamil Jathagam

ஜாதகம் அறிவோம் | Tamil Jothidam

தமிழ் ஜாதகம் – Tamil Jathagam:- ஜோதிடம் பற்றி தெரிந்து கொள்வோமா..? ஒருவருடைய ஜாதகத்தில் பன்னிரண்டு கட்டங்கள் என்பது ஒவ்வொரு பாவம் (அ) ஸ்தானம் (அ) வீடு என்று சொல்லலாம். அந்த ஒவ்வொரு பாவமும் ஒவ்வொரு குணங்களால் அமைந்துள்ளது. அடிப்படை ஜோதிடத்தில் பொதுவாக பார்க்கப்படுவது பன்னிரண்டு ராசிகளை தான். அதாவது அந்த 12 ராசிக்கான அமைப்பு ஜாதகம் கட்டமாக (jathagam kattam) உள்ளது. ஒருவர் பிறந்த நேரத்தை கொண்டு அதற்கான நவகிரகங்களின் நிலையை கணக்கிட்டு எழுதப்படுவது தான் ஜாதகம். நவகிரகங்களின் நிலையைக் கொண்டு ஒருவரின் ராசியும், நட்சத்திரமும், லக்கனமும் குறிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட அந்த 12 ஜாதக கட்டங்களில்  உள்ள கிரகங்கள் என்ன வகையான பலன்களை (jathagam kattam palangal in tamil) தருகிறது என்று இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.

தமிழ் ஜோதிடம் | Jathagam in Tamil

ஜாதகத்தில் முதல் வீடு லக்னம்:

ஜாதகத்தில் உள்ள 12 வீடுகளும் வாழ்வின் பல்வேறு கூறுகளை விவரிக்கின்றன. இவற்றுள் முக்கிய வீடு, முதல் வீடு என்பது லக்னம் ஆகும். ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம் பலமாக அமைத்தால் அவருடைய வாழ்வில் குறையாத யோகமும், நீண்ட ஆயுளும் கிடைக்கும். இதற்கு லக்னம் பாவமும், லக்கினாதிபதியும் பலமாக அமைதல் வேண்டும். மேலும் இந்த முதல் வீடு என்னும் லக்னம் அந்த ஜாதகத்தில் பிறந்தவரின் உடல்வாகு, அழகு, அழகிய உள்பாகம், இரத்த தன்மை, நிறம், தலை அமைப்பு, வாழ்க்கையில் அனுபவிக்க இருக்கும் சுகங்கள் மற்றும் சுபகாரியங்களை கூறும். ஒருவருடைய ராசி கட்டத்தில் லக்னம் நன்றாக அமைந்தால் தான் அவர்களுடைய மற்ற கட்டம் நன்றாக இருக்கும்.

இரண்டாம் பாவம் வாக்கு ஸ்தானம்:-

ஒருவருடைய ஜாதகத்தில் இரண்டாம் பாவம் என்னும் வாக்கு ஸ்தானம் அவருடைய குடும்பம், தனம், கல்வி, பேச்சுத் திறன், கலைத் திறன், ஆர்வம், நடை உடை பாவனை, நிலையான கொள்கை, நவரத்தினங்கள், உணவு, நாக்கு, முகம் போன்றவரை கூருவதாகும். இதன் அடிப்படையிலேயே அவர் உண்மை பேசுதல், பொய் பேசுதல் மற்றும் கோவம் கொள்ளுதல் போன்ற குணாதிசயங்கள் வெளிப்படும். மேலும் அவருடைய வலது கண் நல்ல எண்ணம் கொண்டவரா, இல்லை கெட்ட எண்ணம் கொண்டவரா என்பதை தெரிந்துகொள்ளும் ஸ்தானம் வாக்கு ஸ்தானமாகும். மேலும் இந்த வாக்கு ஸ்தானம் சுவை அறிந்து உண்பதையும் குறிக்கிறது. அதேபோல் வீடு, மனை வாங்கக்கூடிய ஸ்தானமாகவும் கூறப்படுகிறது.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

மூன்றாம் பாவம் சகோதர ஸ்தானம்:-

ஒருவருடைய ஜாதகத்தில் மூன்றாம் பாவம் சகோதர ஸ்தானம் என்று கூறப்படுகிறது. இது ஒருவருடைய ஜாதகத்தில் எதிரிகளை எதிர்கொள்ளும் திறன், வெற்றி அடையும் திறமை, தொழில் அமைக்கக்கூடிய நிலை, இசையை ரசித்தல், இசை மீது உள்ள ஆர்வம், அவரின் ஆண்மை திறன் என்னும் தைரியம், துணிச்சல், பயமின்றி செயல்படும் மனப்பாங்கு போன்றவை குறிக்கும். இந்த மூன்றாம் பாவம் அந்த ஜாதகக்காரரின் காது சார்ந்த நோய், காது கேளாத தன்மை, ஆடை ஆபரணங்கள் அணியும் யோகம், வைரம், வைடூரியம், தங்கம், வெள்ளி போன்ற விலை மதிப்புள்ள பொருட்கள் சேரும் யோகத்தை கூறும்.

நான்காம் பாவம் மாதுர் ஸ்தானம்: 

இந்த நான்காம் பாவம் உயர் கல்வி, வாகனம் வாங்குதல், வீட்டில் சுப நிகழ்ச்சி நடத்தல், வசிக்கும் வீடு, தொழில், கொடுக்கல் வாங்கல், போக்குவரத்து, தாயின் உறவு, அவரின் நலம், உறவுகளின் நிலை, அதனால் ஏற்படும் பலன்களை பற்றி கூறும் பாவம் நான்காம் வீடான மாதுர் ஸ்தானமாகும். அதேபோல் ஒருவருடைய புகழ், புதையல் கிடைத்தல் போன்ற யோகம், சிறுதூர, வெளிநாட்டு பயணம், பால், பால் சார்ந்த பொருட்கள், ஆன்மிக பயணம் போன்ற விஷயங்கள் அடங்கும். இந்த ஸ்தானம் பொதுவாக வீட்டை பற்றிய சுகத்தை அடிப்படையான கொண்டது.

4 ஆம் பாவ சேர்க்கை:-

  1. ஒருவருடைய 4 ஆம் பாவத்தில் புதன் பலமாக இருந்தால் அவரின் கல்வி மிகவும் சிறப்பானதாக அமையும்.
  2. நான்காம் பாவத்தையும் அதில் சுக்கிரன் இருக்கும் பலத்தையும் பொறுத்து கார், பைக், வாகனம், ஆபரணம் சார்ந்த பொருட்கள் வாங்கும் நிலையை அறியலாம்.
  3. அதேபோல் ஒருவருடைய நான்காம் பாவத்தையும், அதில் செவ்வாய் இருக்கும் பலத்தையும் பொறுத்து, அவர்களின் அசையாத சொத்துகள் ஆன வீடு, நிலம், பண்ணை வீடுகள், தோட்டம் இவற்றின் நிலைகளை அறியலாம்.
  4. ஒருவருடைய நான்காம் பாவத்தையும் அதில் சந்திரன் இருக்கும் பலத்தையும் பொறுத்து, அவர்களின் தாயின் பாசம், ஆயுள் ஆகியவற்றை அறியலாம்.
  5. அதேபோல் நான்காம் பாவத்தையும் அதில் குருவின் பலத்தை பொறுத்து அவரின் வாழ்க்கையில் பெறும் அனைத்து வசதிகள், சுக போகங்கள், புகழ் பெறும் தகுதியையும் அறியலாம்.

ஐந்தாம் பாவம் புத்திர ஸ்தானம்:-

அதாவது பூர்வ புண்ணிய ஸ்தானம் என கூறப்படுவது ஐந்தாம் பாவம். தாய் வழி உறவு, மாமன்மார்களின் உறவு, செல்வம், பூர்வ புண்ணியங்கள் அதாவது சென்ற பிறவியில் செய்த நன்மை, தீமைகளை அடிப்படையாக கொண்ட பலன்கள், மொழியில் தேர்ச்சி, மந்திரங்கள், வேதங்கள் அறியும் திறமை, உயர் கல்வி பெறுதல், அறிவுத்திறன், அனுபவ அறிவு, பேச்சாற்றல், சொற்பொழிவு செய்தல், பெண்கள் கர்ப்பம் தரிக்கும் தகுதி, தாத்தாவின் நிலை ஆகியவற்றை கூர்வதாகும்.

ஒருவருடைய ஐந்தாம் வீட்டையும், அதில் குரு இருக்கும் பலத்தை பொருத்து குழந்தை செல்வத்தை அறியலாம்.

அதேபோல் ஒருவருடைய ஐந்தாம் பாவத்தையும், அதில் புதன் இருக்கும் பலத்தை பொருத்து கல்வி பெறும் தகுதி, சொற்பொலிவாற்றும் தகுதியை அறியலாம்.

ஆறாம் பாவம்:-

இந்த ஆறாம் பாவத்தை நோய் ஸ்தானம் என்று சொல்லப்படுகிறது. அதாவது இந்த ஆறாம் பாவம் ஒரு ஜாதகக்காரர் எந்த நோயால் பாதிக்கப்படுவார்கள், பகைவரால் ஏற்பட இருக்கும் பிரச்சனைகள், வலி, காயம், சண்டை, யுத்தம் செய்தல், வீண் வம்பிற்கு செல்லுதல், பொருட்கள் களவு போகுதல், தண்ணீர், நெருப்பால் ஆபத்து, ஏதேனும் விலங்குகளால் ஏற்பட இருக்கும் ஆபத்து, சோம்பேறித்தனம், சிறைப்படுதல், உயர் பதவி அடைதல், கால்நடை பற்றிய அறிவு ஏற்படுதல் போன்றவை கூறும் பாவமாகும்.

ஏழாம் பாவம்:

மாரக ஸ்தானம் / களத்திர ஸ்தானம் என கூறுகின்றனர். அதாவது திருமணத்தை குறிக்கும் பாவம் ஏழாம் பாவம் ஆகும். ஆண்களுக்கு அமையும் மனைவியை குறித்தும், பெண்களுக்கு அமையும் கணவரைக் குறித்தும் அறிவிக்கும் பாவம். அதேபோல் ஒருவருக்கு திருமணம் நடக்கும் காலம், கணவன் / மனைவியின் ஆயுள். திருமண சுகம், சிற்றின்பத்தைக் குறிப்பதாகும். மேலும் ஒருவரின் வியாபாரம், கெளரவும், பட்டம், பதவி பெறுதல், பொருளை வாங்கி விற்கும் கமிஷன் தொழில் (தரகர்), இது போன்று தொழிலை பற்றிய விஷயங்களை கூறும் பாவம் ஏழாம் பாவமாகும்.

எட்டாம் பாவம்:-

இந்த எட்டாம் பாவத்தை துஸ்தானம் என கூறுகின்றனர். இது ஒரு ஜாதகக்காரரின்  ஆயுளை கூறும் பாவமாகும். அதாவது யுத்தம், சண்டையில் ஆயுதங்களால் காயம் உண்டாகுதல், உயர்வான இடத்திலிருந்து விழுந்தால் ஏற்படும் ஆபத்து, தீராத வியாதியால் பாதிக்கப்படுதல், இடையூறு ஏற்படுதல், மனசஞ்சலம், நீங்காத பகை உண்டாகுதல், வீண் அலைச்சல் ஏற்படுதல், தகாத காரியங்களை செய்தல், அதன் காரணமாக பெருந்துயரத்தில் சிக்குதல், கருத்து மோதல், அதிக வீண் செலவுகள் மற்றும் மரணத்தை கூறும் பாவம்.

இது 10-ஆம் பாவத்திற்கு ஜீவன பாவம் என்றும், 11-ஆம் பாவத்திற்கு லாப ஸ்தானமாகவும் பார்க்கப்படுகின்றது. இதில் இருக்கும் கிரகங்களின் தசா புத்தி தொழில் முறை யோகத்தை கொடுக்கும் வல்லமை பெற்றது.

மேலும் இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் தெரிந்துகொள்வோம் நன்றி வணக்கம்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்