நீங்கள் பிறந்த மாதத்தை சொல்லுங்கள்..! உங்களை பற்றி சொல்கிறேன்

Advertisement

தமிழ் மாதங்கள் 12

வணக்கம் நண்பர்களை.! உங்களை பற்றி நீங்களே படிப்பதற்கு ஆர்வமாக இருக்கும். உங்களை பற்றி மற்றவர்கள் என்ன சொன்னாலும் அதை காதில் வாங்காமல் நான் எப்படி என்று எனக்கு தெரியும் நினைத்து கொள்வீர்கள். உங்களை பற்றி தெரிந்துகொள்வதற்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் பிறந்த தமிழ் மாதங்களை வைத்து உங்களின் குணங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.!

சித்திரை மாதம் பிறந்தவர்கள்:

சித்திரம் மாதம் பிறந்தவர்கள் மன வலிமை மிக்கவராக இருப்பார்கள். மற்றவர்கள் இவர்களின் உதவியை நாட வேண்டும் என்று நினைப்பார்கள். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இவர்களின் வாழ்க்கையில் சோம்பேறி என்ற வார்த்தைக்கே இடமில்லை.

இவர்கள் ஒரு செயல் செய்ய ஆரம்பித்து விட்டால் அதனை முடிக்காமல் அடுத்த வேலைக்கு செல்ல மாட்டார்கள். பயணம் சுற்றுவது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். தனிமையை விரும்புவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் நேரத்தை கழிப்பார்கள்.

இதையும் படியுங்கள் ⇒ திருநீறு, குங்குமம், சந்தனம் இதில் ஏதேனும் ஒன்றை உங்கள் மனதில் நினைத்து கொள்ளுங்கள் உங்களை பற்றி சொல்கிறேன்

வைகாசி மாதத்தில் பிறந்தவர்கள்:

இவர்கள் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதில் வல்லவராக இருப்பார்கள். இவர்களின் தோற்றம் வசீகர தோற்றம் உடையவராக இருப்பார்கள். இவர்கள் எந்த இடத்தில் எப்படி பேச வேண்டும் என்று அறிந்து பேசுவார்கள். சுருக்கமாக சொன்னால் இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுவார்கள்.மனதில் சந்தோசமாக இருந்தாலும் சரி, கவலையாக இருந்தாலும் சரி மற்றவர்களிடம் வெளிகாட்ட மாட்டார்கள். குடும்பத்தை சரியாக எடுத்து செல்வார்கள்.

உறவினர்கள் மற்றும் நண்பர்களை அனுசரித்து செல்வார்கள். இவர்களுக்கு வெளியூர் செல்வது பிடிக்கும். தனிமையில் இருக்க விரும்புவார்கள். ஞாபக சக்தி மிகுந்து காணப்படும். செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். ஒரு பிரச்சனை நடக்கிறது என்றால் அதில் எது சரி, எது தப்பு என்று தைரியமாக சொல்வார்கள். இவர்களுக்கு ஆரோக்கியத்தில் வயிற்று பிரச்சனை அடிக்கடி ஏற்படும்.

ஆனி மாதம் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்:

இவர்கள் பேச்சு திறன் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். சூழ்நிலைகளுக்கு தகுந்தது போல் நடந்து கொள்வார்கள். நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களிடம் அன்பாகவும், பாசமாகவும் பழகுவார்கள். எந்த செயலையும் தைரியமாக செய்வார்கள். மிகுந்த புத்தி கூர்மையுடன் நடந்து கொள்வார்கள்.

இதையும் படியுங்கள் ⇒  நீங்கள் பிறந்த கிழமை இதுவா? உங்கள் குணாதிசியங்களை தெரிந்துகொள்ளுங்கள்..!

ஆடி மாதம் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்:

ஆடி மாதம் பிறந்தவர்களிடம் கற்பனை திறன்  மிகுந்து காணப்படும். பிடிவாத குணம் உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் யார் மீது பாசம் வைத்தாலும் வெளிப்படுத்த மாட்டார்கள். எதையாவது ஒன்றை சிந்தித்து கொண்டே இருப்பார்கள். ஒரு செயலை  செய்தால் லாபம் கிடைக்கும் என்று தெரிந்தால் அதை துணிந்து செய்வார்கள்.

ஆவணி மாதம் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்:

ஆவணி பிறந்தவர்கள் அதிர்ஷ்டமானவர்களாக இருப்பார்கள். ஒரு செயலை செய்வதற்கு முன் அதை பற்றிய முழு தகவலையும் தெரிந்து கொண்ட பிறகு தான் அந்த செயலை செய்வார்கள். குடும்பத்தை பொறுப்பாக எடுத்து செல்வார்கள். ஆவணி மாதம் பிறந்தவர்கள் வைகாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்வது நல்லது என்று ஆன்மிகத்தில் சொல்கிறது.

ஆன்மிகத்தில் மீது  ஈடுபாடு உள்ளவராக இருப்பார்கள். இவர்கள் மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேச மாட்டார்கள். எதையும் வெளிப்படையாக பேசி விடுவார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்ய தயங்க மாட்டார்கள்.

புரட்டாசி மாதம் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்:

புரட்டாசி மாதம் பிறந்தவர்கள் எந்த செயலையும் ஈசியாக கற்று கொள்வார்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இவர்களின் இலக்குகளை மனதில் வைத்து கொண்டு அதற்காக கடினமாக உழைப்பார்கள். இவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். மேலும் செய்கின்ற செயல்களை திட்டமிட்டு பணியாற்றுவார்கள். பேச்சு திறனும், கற்பனை திறனும் மிகுந்து காணப்படும்.

இதையும் படியுங்கள் ⇒ ஜூன் மாதத்தில் பிறந்தவர்களா நீங்கள்.? அப்போ நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள்

ஐப்பசி மாதம் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்:

இவர்கள் இயற்கையாகவே மற்றவர்களின் ஈர்க்கும் அளவிற்கு இவர்களின் தோற்றம் காணப்படும். ஆடை  மற்றும் நகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். கஷ்டமான வேலையை கூட இவர்கள் அசால்ட்டா செய்து விடுவார்கள். மற்றவர்கள் இவர்களுக்கு செய்த உதவியை மறக்க மாட்டார்கள். அவர்களுக்கு ஏதாவது மறு உதவி செய்திட வேண்டும் என்று நினைப்பார்கள்.

கார்த்திகை மாதம் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்:

இவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். இரக்கம் குணம் உடையவர்களாக இருப்பார்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவராக இருப்பார்கள். மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசி விடுவார்கள். இந்த குணத்தினால் இவர்களுக்கு நட்பு வட்டாரம் குறுகியதாக இருக்கும். பழிக்கு பழி வாங்கும் குணம் உடையவர்களாக இருப்பார்கள். பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வார்கள்.

மார்கழி மாதத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்:

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தனித்துவமாக வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். கடவுளின் மீது நம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள். மேலும் எந்த செயலையும் நேர்மையாக செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். நண்பர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வீர்கள். கலை துறையில் ஆர்வம் காட்டுவார்கள். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதில் வல்லவராக இருப்பார்கள்.

தை மாதம் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்:

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் வெற்றி அடைவதை பற்றி சிந்தித்து கொண்டே இருப்பார்கள். கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். இவர்களிடம் ஒரு வேலை கொடுத்தால் சிறப்பாக செய்து முடிப்பார்கள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வார்கள். பயணம் செய்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைப்பார்கள்.

மாசி மாதத்தில் பிறந்தவர்கள்: 

மாசி மாதத்தில் பிறந்தவர்கள் பிடிவாத குணம் உடையவர்களாக இருக்கப்பார்கள். இவர்களை நம்பி எந்த வேலையையும் கொடுக்கலாம். அந்த அளவுக்கு நம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்த செயல் செய்தாலும் முறையாக திட்டமிட்டு பணியாற்றுவார்கள்.

இதையும் படியுங்கள் ⇒ கருடன்,குருவி, காகம் மூன்றில் ஒன்றை உங்கள் மனதில் நினைத்துக்கொள்ளுங்கள் உங்களை பற்றி கூறுகிறேன்

பங்குனி மாதம் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்:

இவர்களின் பேச்சாற்றல் மூலம் மற்றவர்களை கவர்ந்து விடுவார்கள். இவர்களிடம் கற்பனை திறன் மிகுந்து காணப்படும். பயணம் அடிக்கடி செய்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஒரு விஷயத்தை செய்தால் அதில் முழு கவனத்தையும் அந்த செயலில் தான் வைப்பார்கள். சூழ்நிலைகளுக்கு ஏற்றது போல் நடந்து கொள்வார்கள். இவர்களுடன் இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அதுவே போதும் என்று நினைக்க கூடியவர்கள். மற்றவர்கள் மீது அன்பாகவும், அக்கறையாகவும் இருப்பார்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement