தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2023 – Tamil New Year 2023 Rasi Palan

Advertisement

சித்திரை புத்தாண்டு 2023 ராசி பலன்கள் – Tamil New Year 2023 Rasi Palan

Tamil New Year 2023 Rasi Palan – 12 ராசிகளில் சூரியன் ஒவ்வொரு ராசிக்கும் பெயர்ச்சி ஆகக்கூடிய காலங்களை தமிழில் ஒவ்வொரு தமிழ் மாதமாகக் குறிப்பிடுகிறோம். சூரிய பகவான் உச்சம் பெறக்கூடிய ராசியான மேஷத்தில் சூரியன் நுழையக்கூடிய காலத்தை சித்திரை மாதம் என குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டான சித்திரை 1 பிறக்க இருக்கிறது. இது சோபகிருது தமிழ் புத்தாண்டு ஆகும். ஆக இந்த சித்திரை புத்தாண்டு 2023-ஆம் ஆண்டில் 12 ராசிகளுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

உங்கள் நண்பர்களுக்கு பகிந்துகொள்ளுங்கள் 👉👉 தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2023 – Tamil New Year 2023 Rasi Palan

மேஷம்:மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு தொழில் மாற்றம், இடம் மாற்றம், பணிமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அதேபோல் நிறைய பயணங்களையும் மேற்கொள்வீர்கள். தொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு கண்டிப்பாக புதிய தொழில் அமையக்கூடும். மேலும் இந்த புதிய ஆண்டில் இடம் வாங்குவது, வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது போன்ற நல்ல விஷயங்களை செய்வீர்கள். பெரிய மனிதர்களை சந்திப்பீர்கள், பணம் வரவு இந்த ஆண்டு உங்களுக்கு நன்றாக இருக்கும். மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதேபோல் திருமணம் வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் நடந்து முடியும்.

ரிஷபம்:ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த சோபகிருது வருடம் சாதகமான பலன்கள் நிறைய தந்ததும். உங்கள் முதுகு தண்டுவடத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும் உங்கள் தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ரிஷபம் ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமையில் ஏதாவது கோயிகளுக்கு சென்று தெய்வத்தை வழிபடுவது நல்ல பலன்களை கொடுக்கும். உங்கள் உத்தியோகம் சிறந்து விளங்கும். இருப்பினும் உங்கள் தாய் தந்தையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மேலும் நீங்கள் செயல்படுத்து அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள். ரிஷபம் ராசியில் கலை துறையில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
30 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் உருவாகும் சனிப்பெயர்ச்சி..! இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை டபுளாக கொட்டப்போகிறது..!

மிதுனம்:

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்கள் செவ்வாய்கிழமையில் கண்டிப்பாக ஏதாவது ஒரு கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட்டுவருவது மிகவும் சிறந்தது. மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு எல்லாவகையிலும் ஏற்றத்தை ஏற்படும். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள், தொழில் மற்றும் உத்தியோகத்தில் முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் உறுதியாக இருப்பீர்கள். கணவன் மனைவி உறவுக்குள் இருந்த வந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தை விட்டு நீண்ட தூரத்தில் இருந்தவர்கள் இப்போது தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சகிக்கப்படும். காதல் திருமணம் பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ள படலாம். தேக ஆரோக்கியம் சிறந்து விளங்கும்.

கடகம்:கடகம்

கடகம் ராசிக்காரர்கள் வியாழக்கிழமையன்று குருபகவானை வழிபடுவது நல்ல பலன்களை பெற்று கொடுக்கும். உங்கள் வார்த்தைக்கு மரியாதை அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் இடமாற்றங்கள் ஏற்படும். பதவி உயர்வுகள் ஏற்படும். தாய் வழி உறவு வழி உறவில் நல்ல ஆதாயம் கிடைக்கும். பூர்விக சொத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் வெற்றிகள் கிடைக்கக்கூடும்.

சிம்மம்:சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்கள் சனிக்கிழமையில் உங்களால் முடிந்த உணவை வாங்கி தானம் செய்வதும், சிவன் கோயில்களுக்கு சென்று வழிபடுவது நல்ல பலன்களை பெற்று தரும். இந்த காலத்தில் நீங்கள் செயல்படுத்தும் அனைத்து காரியங்களும் சிறந்து விளங்கும். தேகத்தில் பூர்த்தியை பொலிவினை பெறுவீர்கள். உங்கள் பெற்றோரும் புகழையும் பெற்று தருவீர்கள். மாணவ மாணவிகள் பெருமை சேர்ப்பார்கள். மனதில் இருந்து வந்த பாரங்கள் குறையும். எதையும் சமாளிக்கலாம் என்ற உணர்வு உங்களுக்கு தோன்றும். உங்கள்மீது அன்பு கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்மபகுடிய அமைப்பு ஏற்படும். இருப்பினும் கோபம் கொள்வதை மட்டும் முற்றிலும் தவிர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.

கன்னி:கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு நரசிம்மர் வழிபாடு சிறந்த பலன்களை தரும். நரசிம்மர் கோயில் இல்லை என்றால் பெருமாள் கோயிலுக்கு சென்று வருவதும் சிறந்த பலன்களை அளிக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் ஏற்றம் ஏற்படும். பூர்விக சொத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க கூடும். திருமணம் வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சகிக்கப்படும்.

துலாம்:துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த புதிய வருடத்தில் நிறைய காரியங்கள் நிகழும், அதாவது கல்யாணம் அமைப்பு, வீடு கட்டும் அமைப்பு, புத்திர பாக்கியம், வாகனம் வாங்கும் அமைப்பு, பெண்களுக்கு ஆடை ஆபரங்கள் சேரும் அமைப்புகள் இருக்கிறது. இருப்பினும் வயிறு, முதுகு வடகண்டம் போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும். தங்கள் பிள்ளைகள் மீது தேவை இல்லாமல் சந்தேகம்பட வேண்டாம். கணவன் மனைவி உறவுக்குள் அன்பு அதிகரிக்கும்.

விருச்சிகம்:

viruchigam

விருச்சிகம் ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை அன்று முருகனை வழிபடுவது மிகவும் சிறந்தது. இந்த கால கட்டத்தில் நீங்கள் செய்யக்கூடிய உத்தியோகத்தில் ஏற்றம் ஏற்படும், அரசியலில் பெரிய அளவில் எப்பரும் புகழையும் பெறுவீர்கள். வாகனத்தில் செல்லும் போது மட்டும் கவனமாக இருங்கள். இந்த கால கட்டத்தில் உங்களுக்கு சுபச்செலவுகள் அதிகமாக இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது இந்த 3 பொருட்களை மறக்காமல் எடுத்து செல்லுங்கள்..!

தனுசு:தனுசு

தனுசு ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை அன்று பார்வதி தேவி சன்னிதானத்தில் சிறிது நேரம் அமர்ந்து அன்னையை வழிபடுவது மிகவும் சிறந்தது. இந்த காலத்தில் நீங்கள் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும், மேலும் சுபசெய்திகள் மற்றும் சுப விஷயங்கள் உங்களுக்கு அனுகூலமான பலன்களை கொடுக்கும். பிள்ளைகளுக்கு நீங்கள் நினைத்த அனைத்து நல்ல காரியங்களும் கைகூடும். மேலும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க கூடும். பெற்றோர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி இப்பொழுது ஒற்றுமையாக இருப்பீர்கள்.

மகரம்:

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த புதிய வருடத்தில் தொழில் சார்ந்த விஷயங்களை ஏற்றம் ஏற்படும். பொறுப்புகள் அதிகரிக்கும். திருமணம் வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் நிச்சகிக்கப்படும். வேலை தேடுபவர்கள் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சமுதாயத்தில் மதிப்பு அதிகரிக்கும். இருப்பினும் வார்திகளில் கவனமாக இருப்பது நல்லது.

கும்பம்:

கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு தடைகள் நிவர்த்தியாகும். அவமானங்களில் இருந்து மீண்டு வருவீர்கள். குடும்பத்தில் சுபகாரிய தடைகள் நிவர்த்தி ஏற்படும். கணவன் மனைவி உறவுக்குள் இருந்து வந்த சண்டைகள் நீங்கும். மேலும் லாபம் மற்றும் அனுகூலங்கள் கிடைக்க கூடும். அசையும். ஆசையா சொத்துக்களை வாங்குவீர்கள். இழந்த பெருமைகளை மீண்டும் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் மற்றும் படிப்பில் ஏற்றம் காணப்படும். உத்தியோகத்திற்க நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் பலரால் பாராட்டப்படும்.

மீனம்:மீனம்

மீனம் ராசிக்காரர்கள் மற்றவர்களிடம் வாங்கிய கடனை திரும்ப குடுத்துவிடுவீர்கள்.  தொழில் கண்டிப்பாக மாற்றம் ஏற்படும். இடம் மாற்றம் ஏற்படும் உத்தியோகம் ஏற்படும்,  படிப்பில் மாற்றம் ஏற்படும், வேலை மாற்றம் ஏற்படும். கலை துறையில் இருப்பவர்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்க கூடும். குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்க கூடும். அரசு உத்தியோகம் எதிர்ப்பது காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு அரசு உத்தியோகம் கிடைக்க கூடும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement