Tamil New Year Benefits For Zodiac Signs In Tamil
நவகிரகங்களின் அதிபதியான சூரிய பகவான் மேஷ ராசியில் அதீத பலனைத் தரக்கூடியவர். ஒவ்வொரு முறை சூரிய பகவான் மேஷ ராசியில் நுழையும் போது, புதிய தமிழ் புத்தாண்டு பிறக்கும். அந்த வகையில் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வருகிறது. சூர்ய பகவான் மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போது சித்திரை 1, விசுவாசவ தமிழ் புத்தாண்டு தொடங்குகிறது.
புத்தாண்டு பிறந்து விட்டாலே அனைவரும் இந்த ஆண்டு நல்ல பலன்கள் பெற வேண்டும் என்று கோவில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்வார்கள். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட யோகம் வரப்போகிறது என்பதை பற்றி இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
Saturn Transit To Shukra Foot Good Luck To These Zodiac Signs In Tamil
2025 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு பலன்கள்:
ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு பல செயல்களில் உங்களுக்கு லாபம் கிடைக்க இருக்கிறது. இதனால் உங்கள் கடன்கள் தீரும். புதிய வருமானம் வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். மேலும் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவை பெறுவீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள செயல்களை திட்டமிட்டு சரியாக முடிப்பீர்கள்.
கடகம்:

கடக ராசிக்காரர்கள் இந்த ஆண்டு அஷ்டம சனியில் இருந்து விடுபடுவீர்கள். இந்த புத்தாண்டிற்கு பிறகு உங்களுடைய மதிப்பும் மரியாதையும் சமூகத்தில் அதிகரிக்கும். பணியில் எதிர்பார்த்த பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். கடந்த சில மாதங்களாக நீங்கள் கடுமையாக உழைத்ததற்கு நற்பலன்களை பெறுவீர்கள்.
துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு பெரிய அளவில் மாற்றத்தை தர இருக்கிறது. உங்களின் நீண்ட காலமான ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ நினைப்பீர்கள். திருமண வாழ்க்கையில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உங்கள் துணையின் அன்பும் ஆலோசனையும் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவும்.
மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டிற்கு பிறகு பொன், பொருள் சேரும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பல விதத்தில் நன்மைகள் கிடைக்கும். உங்கள் குடும்பத்துடனும் துணையுடனும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி மேலதிகாரியிடம் நற்பெயர் கிடைக்கும்.
கும்பம்:

கும்ப ராசிக்காரர்கள் இந்த புத்தாண்டிற்கு பிறகு அதிக பலன்களை பெறப்போகிறீர்கள். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். மேலும் தொழிலை விரிவு படுத்துவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவை பெறுவீர்கள். வேலையில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்களின் மன தைரியம் அதிகரிக்கும். வீடு, குடும்பம் மற்றும் பணியிடத்தில் மூத்தவர்களின் அன்பையும், ஆலோசனையும் பெறுவீர்கள்.
சனி பகவானால் சில ராசிக்காரர்களுக்கு 2025 படாத பாடா இருக்க போகுது
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |














