தமிழ் புத்தாண்டு 2024 தேதி மற்றும் நேரம்..

Advertisement

When is Tamil New Year 2024 | தமிழ் வருடப்பிறப்பு 2024

இந்துக்களில் நிறைய பண்டிகை வருகின்றது. அதில் தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு உடையதாக இருக்கிறது. எடுத்துக்காட்டிற்கு சொல்லப்போனால் ஆடி மாதம் என்றால் அம்மனுக்கு உரியதாக இருக்கும். ஆவணி மாதம் என்றால் கஞ்சி காய்ச்சு ஊற்றுவார்கள். புரட்டாசி மாதம் என்றால் பெருமாளுக்கு உரிய மாதமாக இருக்கிறது. பெருமாளுக்கு சனிக்கிழமை அன்று விரதம் இருந்து வழிபடுவார்கள்.

அனைவரும் கொண்டாட கூடியது ஆங்கில புத்தாண்டு, ஆனால் தமிழ் புத்தாண்டை இந்துக்கள் மட்டும் கொண்டாடுவார்கள். இந்த தமிழ் புத்தாண்டு எப்போது வருகிறது என்று தேடி கொண்டிருப்பார்கள். அவர்களுக்காக இந்த பதிவில் தமிழ் புத்தாண்டு தேதி மற்றும் நேரத்தை அறிந்து கொள்வோம் வாங்க..

தமிழ் புத்தாண்டு தேதி:

தமிழ் புத்தாண்டு ஆனது வருடந்தோறும் ஏப்ரல் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரைக்கும் வரும். இந்த ஆண்டு 2024-ல் ஏப்ரல் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகின்றது. இந்த தமிழ் புத்தாண்டு ஆனது தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இலங்கை, மலேசியா மற்றும் சிங்கப்பூர்  போன்ற நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

சூரியனை அடிப்படையாக வைத்து தங்களின் தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர் தமிழர்கள். பாரம்பரியம் மற்றும் தமிழ் சூரிய நாட்காட்டியின் படி, சங்கராந்தி சூரிய உதயத்திற்குப் பிறகு மற்றும் சூரிய அஸ்தமனத்திற்கு முன் நடந்தால், அந்த நாள் புத்தாண்டு தினமாகக் கருதப்படுகிறது. சூரியன் மறைந்த பிறகு சங்கராந்தி வந்தால் மறுநாள் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு வரலாறு

சித்திரை புத்தாண்டு 2024 பிறக்கும் நேரம்:

முதல்நாள் 13 ஆம் திகதி, சனிக்கிழமை இரவு புதுவருடம் பிறக்கும் நேரம் என பஞ்சாங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.  சித்திரை வருடப்பிறப்பானது 14.04.2024 ஞாயிற்றுக்கிழமை குரோதி எனும் பெயரில் மலர்கின்றது

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement