ஏப்ரல் 14-க்கு பிறகு இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகிறது..

Advertisement

ஏப்ரல் 14-க்கு பிறகு இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகிறது..

பொதுவாக தினமும் தங்களின் ராசிக்கான பலனை பார்ப்பார்கள். அதனை பார்த்து விட்டு தங்களின் ராசிக்கு என்ன உளதோ அதன்படி அன்றைய நாள் நடந்து கொள்வார்கள். சில பேர் தொலைக்காட்சியில் ஜோதிடர் கூறுவது, செய்தித்தாளில் உள்ள பலன்கள் போன்றவற்றை பார்ப்பார்கள். தமிழ் வருடங்கள் அறுபத்தில் முப்பத்தெட்டாவது வருடமான குரோதி வருடம் இந்த ஆண்டு பிறக்கிறது. இந்த வருடம் பிறக்கும் நேரத்தில் உள்ள கிரஹநிலை அமைப்பு, மேஷத்தில் சூரியன் குரு, கன்னியில் கேது, கும்பத்தில் செவ்வாய், சனி, மீனத்தில் புதன், சுக்ரன், ராகு எனக் காணப்படுகிறது.

இந்த தமிழ் வருடப்பிறப்பில் சில ராசிகளுக்கு அதிரஷ்டம் அடிக்க போகிறது. அது என்னென்ன ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

கும்பம்:

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் எந்த செயலையும் பொறுமையாக கையாள வேண்டும். பணியிடத்தில் எல்லாரிடமும் பணிந்து வேலை பார்க்க வேண்டும். உங்களின் கூட இருப்பவர்கள் பிரச்சனையில் நீங்கள் தலையிடுவதை தவிர்க்க வேண்டும்.பணியில் உங்களின் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களுடன் [பிரச்சனை ஏற்பட்டால் அவ்வப்போது விட்டு கொடுத்து செல்ல வேண்டும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உங்களின் வாழ்க்கை சிறப்பாக இருப்பதற்கு சிவன் மற்றும் பார்வதியை வணங்குங்கள்.

தனுசு:

தனுசு

பணியில் உங்களின் திறக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். நீங்கள் எந்த செயலையும் செய்யும் போது பொறுமையாக செய்ய வேண்டும். குடும்பத்தில் எ அமைதி நிலைப்பதற்கு எல்லாரிடமும் விட்டு கொடுத்து செல்ல வேண்டும். உங்களின் துணையிடம் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது வேறு யாரையும் அந்த பிரச்சனையில் தலையிடும் வரைக்கும் வைத்து கொள்ள கூடாது. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும்.

சிம்மம்:

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் நீங்கள் பணியிடத்தில் பொறுமையை கையாளுவது அவசியமானது. சில நபர்களுக்கு பணியில் பனி மாற்றம் கிடைக்கும். சொந்தமாக சுயதொழில் செய்பவர்கள் தொழிலில் கவனம் வேண்டும். வேலையாட்களை பொறுமையாக கையாள வேண்டும். சொத்துக்கள் வாங்குவீர்கள். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்கள் யாருக்கும் கடனை கொடுத்தாலும் சரி, கடனை பெற்றாலும் சரி கவனமாக இருக்க வேண்டும்.

தமிழ் புத்தாண்டு வரலாறு

கடகம்:

கடகம்

பணியில் உங்களின் திறமையை கண்டு சக பணியாளர்கள் பாராட்டுவார்கள். உங்களின் செயலுக்கு சக பணியாளர்கள் பக்க பலமாக இருப்பார்கள். இதுவரை வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு பிடித்த வேலை கிடைக்கும். உங்களின் துணையுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். நீங்கள் ஒரு செயல் செய்ய போகிறீர்கள் என்றால் பெற்றோர்களின் அறிவுரை படி செய்யுங்கள். சுப செலவுகள் அதிகமாக காணப்படும். இதனை சமாளிப்பதற்கு உங்களிடம் போதிய அளவிற்கு பணத்தொகை காணப்படும்.

மேஷம்:

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு பணியில் பதவி உயர்வும்,சம்பள உயர்வும் கிடைக்கும். பணியில் சக பணியாளர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உங்களின் துணையிடம் வெளிப்படையாக பேசுவீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். இதுவரை இருந்ததை விட பணவரவு அதிகரிக்கும். இதனால் வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவீர்கள். சொந்தமாக தொழில் செய்பவராக இருந்தால் தொழிலில் வளர்ச்சி காணப்படும். மேலும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இதனால் எதிர்கால பயன்பாட்டிற்காக பணத்தை சேமிப்பீர்கள்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 

 

 

Advertisement