தமிழ் புத்தாண்டு அன்று சொல்லவேண்டிய மந்திரம்

Advertisement

தமிழ் புத்தாண்டு அன்று சொல்லவேண்டிய மந்திரம்

புத்தாண்டு என்பது ஒரு ஆண்டினை இனிமையாக ஆரம்பிக்க வேண்டிய முதல் நாளாகும். புத்தாண்டு அன்று என்ன செயலை செய்கிறோமோ, அதன் பலன் அந்த ஆண்டு முழுவதும் தொடரும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. அதனால் தான் வருடப்பிறப்பு, மாத பிறப்பு போன்ற துவக்க நாட்களில் மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும். நல்ல காரியங்கள் செய்ய வேண்டும். தான தர்மங்கள் செய்ய வேண்டும். இறை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என நமது முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.

ஆங்கில புத்தாண்டு ஆக இருந்தாலும் சரி, தமிழ் புத்தாண்டு ஆக இருந்தாலும் சரி அன்றைய நாள் எதாவது ஒரு குறிகோளை வைத்திருப்போம். சிலருக்கு ஏதாவது தீய பழக்கம் இருந்தால் அதிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைப்போம்.  ஏதாவது ஒரு புதிய செயலை செய்ய வேண்டும் என்று நினைப்போம். அந்த செயலானது நல்லபடியாக முடிப்பதற்கு கடவுளின் அருள் முக்கியமாக இருக்கிறது. அதனால் தான் இன்றைய பதிவில் தமிழ் புத்தாண்டு அன்று சொல்ல வேண்டிய மந்திரத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

தமிழ் புத்தாண்டு வரலாறு

ஆதித்ய பைரவ மந்திரம்:

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஆதித்ய பைரவாய
செளபாக்கியம் ப்ரசீத ப்ரசீத
ஹ்ரீம் ஸ்ரீம் க்ரித்யாய ஸ்ரீம் ஹ்ரீம் ஓம்

இந்த மந்திரத்தை தமிழ் புத்தாண்டு அன்று ஆரம்பிக்க வேண்டும். இதனை தொடர்ந்து தினமும் சொல்லி வர வேண்டும். இப்படி தொடர்ந்து சொல்லி வருவதால் உங்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைவீர்கள். இதுவரை கிடைக்காத பணவரவு கிடைக்கும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

இந்த மந்திரத்தை இத்தனை முறை தான் சொல் வேண்டும் என்று கணக்கு கிடையாது. எத்தனை முறை உங்களால் சொல்ல முடியுமோ அத்தனை முறை சொல்லலாம்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement