வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மீன ராசியினருக்கு தமிழ் புத்தாண்டு நன்மையா! தீமையா.!

Updated On: April 10, 2025 6:45 PM
Follow Us:
tamil puthandu meenam rasi palan 2025
---Advertisement---
Advertisement

தமிழ் புத்தாண்டு மீன ராசி | தமிழ் புத்தாண்டு மீன ராசி பலன் 2025

ஆன்மீகத்தில் மீது நம்பிக்கை இருப்பவர்கள் ஒவ்வொரு நாளும் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்கு ஆர்வமாக இருப்பார்கள். சில பேர் செய்தித்தாளை பார்த்து அறிந்து கொள்வார்கள். சில பேர் தொலைக்காட்சி மற்றும் காலண்டரை பார்த்து அறிந்து கொள்வார்கள். இப்படி அறிந்து கொள்வதன் மூலம் அன்றைய நாள் ஜாக்கிரதையாக இருந்து கொள்வார்கள். அதுவே புத்தாண்டு போன்ற விஷேச நாட்கள் வரும் போது அன்றைய வருடம் எப்படி இருக்க போகுது என்று தெரிந்து கொள்வதற்கான ஆற்வம் அதிகமாக இருக்கும்.

அந்த வகையில் வருகின்ற திங்கட்கிழமை 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கின்றது. அறுபது தமிழ் வருடங்களில் 39-ம் ஆண்டான விசுவாவசு வருடம் பிறக்கிறது. இந்த தமிழ் வருடமாவது எப்படி இருக்க போகிறது என்று அறிந்து கோலம் வாங்க..

தமிழ் புத்தாண்டு மீன ராசி பலன்கள்:

மீனா ராசியினருக்கு தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கும்

பணியிடம்:

இந்த தமிழ் புத்தாண்டில் மீன ராசிக்காரர்கள் எந்த செயலையும் அமைதியாக செய்ய வேண்டும். அப்போது தான் உங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. அது போல நீங்கள் தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி, பணியிடத்தில் வேலை செய்பவர்களாக இருந்தாலும் சரி செய்யும் செயல்களில் மட்டும் கவனம் இருக்க வேண்டும்.

பணியில் கூட வேலைபார்ப்பவர்களிடம் ரொம்ப நெருங்கி பழக வேண்டாம். அது போல பணிகளில் உங்களுக்கென்று பொறுப்புகள் அதிகமாக இருக்கும். அதனால் அதனை திட்டமிட்டு பணியாற்றுவதன் மூலம் தவறுகள் ஏற்படாமலும், குறித்த நேரத்திற்கும் முடிக்கலாம்.

உங்களுக்கு மேல் உள்ளவர்களின் ஆலோசனையை கேளுங்கள். அதுபோல் உங்களுக்கு வேறு பணி கிடைக்கவும் வாய்ப்புள்ளது. பணி சம்மந்தப்பட்ட எந்த விஷயமாக இருந்தாலும் அதனை கவனமாக கையாளுவது நல்லது.

குடும்பம்:

குடும்பத்தில் உள்ளவர்களிடம் கோபத்தை குறைத்து கொள்ள வேண்டும். அது போல ஏதேனும் சண்டைகள் ஏற்பட்டாலும் அப்போது வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரேனும் சண்டை போட்டாலும் அதனை பெரிது படுத்தாமல் லேசாக எடுத்து கொள்வது நல்லது.

நீங்கள் தொழில் செய்பவர்களாக இருந்தால் உங்களுக்கு திடீரென்று லாபம் கிடைக்கும். நல்ல வளர்ச்சியும் கிடைக்கும். அதுவே வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தால் அந்த நாட்டிற்கு என்று விதிமுறைகள் இருக்கும், அதனை மீறாமல் இருப்பது நல்லது.

உங்களுக்கு நெருங்கியவராக இருந்தாலும் அவர்களிடம் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு பிரச்சனை ஏற்படக்கூடும். நீங்கள் மற்றவருக்கு கடன் கொடுப்பதாக இருந்தாலும் சரி, வாங்குவதாக இருந்தாலும் சரி கவனமாக இருக்க வேண்டும். அது போல் உங்களின் நண்பர்களுக்காக யாரிடமும் கடன் கேட்காதீர்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now