தமிழ் புத்தாண்டு பூஜை
நாம் இரவு தூங்கி எழுந்த பிறகு மறுநாள் காலையில் அன்றைய நாள் நல்ல பொழுதாக அமைய வேண்டும் என்று தான் நினைப்போம். அது போல் வருடத்தில் முதல் நாள் என்றால் அந்த வருடம் முழுவதும் நல்லதாக இருக்க வேண்டும் என்று நினைப்போம். ஆங்கில புத்தாண்டு என்பது அனைவரும் கொண்டாட கூடிய ஒன்றாக இருக்கிறது. ஆனால் இந்துக்கள் கொண்டாட கூடிய பண்டிகையாக சித்திரை வருடப்பிறப்பு இருக்கிறது.
சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாகும். இந்த நாளில் தான் பிரம்ம தேவர் உலக உயிர்களை படைக்க துவங்கியதாக சொல்லப்படுகிறது. சூரிய பகவான், மேஷம் துவங்கி மீனம் வரை 12 ராசிகளிலும் தனது பயணத்தை நிறைவு செய்வதை ஒரு ஆண்டு என்கிறோம். தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக நாம் கொண்டாடுகிறோம். இந்த பதிவில் தமிழ் புத்தாண்டு அன்று சாமி கும்பிடும் முறை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
தமிழ் புத்தாண்டு சாமி கும்பிடும் முறை:
தமிழர்களின் புத்தாண்டு பிறப்பாக கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டை பாரம்பரிய முறையில் கொண்டாட நம் முன்னோர்கள் சில வழி முறைகளை வகுத்து வைத்துள்ளனர்.அதனை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
தமிழ் வருடப்பிறப்பு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து விட்டு அலசி விட வேண்டும். அதன் பிறகு பூஜை அறையில் சாமி படத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் வைக்க வேண்டும்.
அதன் பிறகு பூஜை செய்வதற்கு முன்னால் தாம்பூலத்தில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை வைக்க வேண்டும். இவைகள் கண்டிப்பாக வைக்க வேண்டும். இது தவிர வேறு ஏதும் பழங்களும் வைக்கலாம். இதனோடு கட்டாயம் வைக்க வேண்டிய பழமாக இருப்பது எலுமிச்சை பழத்தை கட்டாயம் வைக்க வேண்டும்.
இதனோடு ரூபாய் நோட்டுகள் அல்லது சில்லறை காசுகளை வைக்க வேண்டும். இதன் முன்பக்கம் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்க வேண்டும். மறுநாள் காலையில் இந்த தாம்பூலத்தில் தான் கண் விழித்து பார்க்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் பூஜை செய்து கடவுளை வணங்கலாம். இப்படி வணங்குவதால் அன்றைய வருடம் முழுவதும் செல்வத்திற்கு பஞ்சம் இருக்காது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |