12 ராசிகளுக்கான தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024..!

Advertisement

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தமிழ் புத்தாண்டு ராசிபலன் பற்றி பார்க்கலாம். பொதுவாக, ஒவ்வொரு நாளும் நமக்கு என்ன மாதிரியான சூழல் இருக்கும் என்பதை அதாவது, இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்வோம். அதேபோல், இந்த ஆண்டுக்கான ராசிபலன்கள் பற்றியும் தெரிந்துகொள்ள நினைப்போம், எனவே, அந்த வகையில் இப்பதிவில் தமிழ் புத்தாண்டு அன்று 12 ராசிகளுக்கும் உரிய ராசிபலன் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.

தமிழ் வருடங்களில் முப்பத்தெட்டாவது வருடமான குரோதி வருடம் இந்த ஆண்டு பிறக்கிறது. எனவே, இந்த வருடம் அனைவருக்கும் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க.

Tamil Puthandu Rasi Palan 2024:

மேஷ ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்:

மேஷ ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் உயர்வான வருடமாக இருக்கிறது. அனைத்திலும், உங்களுக்கு முன்னேற்றம் காணப்படும். பணியிடத்தில் பதவி, இடமாற்றம், ஊதிய உயர்வுகள்  போன்ற சலுகைகள் கிடைக்கும். சில சமயங்களில் உடன் பிறந்தவர்களுடன் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். இதுவரை இருந்த குழப்பமும் அமைதியின்மையும் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். பணவரவு அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல், ஈடு, மனை போன்ற சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் வரும். விவசாயத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு ஏற்றமும் மாற்றமும் உருவாகும். ஆரோக்கியத்தில் அடிவயிறு, கழிவு உறுப்பு, முதுகுவலி, அஜீரணம் உபாதைகள் வரலாம். ஆகவே, இந்த வருடம் மேஷ ராசிகளுக்கு நன்மைகள் உண்டாகும் வருடமாக இருக்கிறது.

ரிஷப ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்:

ரிஷப ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு அதிக நன்மைகள் நடக்கும். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். இந்த வருடம் நீங்கள் அலட்சியமாக இருக்க கூடாது. எதிலும் பொறுப்புடன் இருக்க வேண்டும். முக்கியமான கோப்புகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். ஆடை, ஆபரணம் சேரும். எந்தத் தொழில் செய்தாலும் ஏற்றமும் வளர்ச்சியும் ஏற்படும். பழைய கடன்களை இந்த வருடத்தில் கொடுத்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் சர்க்கரை, மூட்டுத் தேய்மானம், கொழுப்பு அதிகரிப்பு, காது, மூக்கு, தொண்டை பிரச்னைகள் வரலாம்.

மிதுன ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்:

மிதுன ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் மாற்றங்கள் வரக்கூடிய வருடமாக இருக்கும். அவசரமும் அலட்சியமும் எந்தப் பணியிலும் வேண்டாம். பெரியவர்களின் அல்லது அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. சிலருக்கு வெளிநாடு, வெளியூர் செல்வதற்கான வாய்ப்பு வரும். இந்த வருடம் வீடு, வாகனம் மாற்ற, புதுப்பிக்க நேரம் நன்றாக அமையும். தொழிலில் திடீர் வளர்ச்சி ஏற்படும். பங்குவர்த்தகத்தில் பெரும் முதலீடு வேண்டாம். யாரிடமும் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள். ஆரோக்கியத்தில் கொழுப்புசத்து அதிகரிப்பு, ரத்தநாள அடைப்பு காது, மூக்கு, தொண்டை பிரச்னைகள் வரலாம். ஆகவே, இந்த வருடம் மிதுன ராசிகளுக்கு கொஞ்சம் சுமாரான வருடமாக இருக்கிறது.

கடக ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்:

கடக ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் பொறுப்புடன் இருக்க வேண்டிய வருடமாக இருக்கிறது. பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். ஆனால், காலம் தாமதமாக கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு நினைத்தபடி வேலை கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தொழிலில் லாபமும் விற்பனையும் அதிகரிக்கும். கடன் தரும்போதும் பெரும்போதும் நிதானம் முக்கியம். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு இந்த வருடம் சாதகமாக இருக்கும். நட்புகளிடம் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் தூக்கமின்மை, தோள்பட்டைவலி, அஜீரணம், நரம்பு, பற்களில் உபாதைகள் வரலாம். திருமணம் நடைபெறும் நேரம் இது.

சிம்ம ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்:

சிம்ம ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் அமைதியாக இருக்க வேண்டிய வருடமாக இருக்கிறது. அலுவலகத்தில் ஒருபோதும் அவசரம் அலட்சியமாக இருக்க கூடாது. மேலதிகாரியிடம் பேசும்போது வீண் கர்வத்தை தவிர்த்து கொள்ளுங்கள். அனுபவம் மிக்கவர்கலின் ஆலோசனையை கேட்டு செயல்படுங்கள். அசையும் அசையா பொருட்சேர்க்கை ஏற்படும். கடன் தரும்போதும் பெரும்போதும் கவனம் தேவை. தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். வங்கிக் கடன்களை தேவையின்றி வாங்குவதைத் தவிருங்கள். சஞ்சலமும் சபலமும் எட்டிப்பார்க்காமல் கவனமாக இருங்கள். பயணம் செய்யும்போது பொருட்களை கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் மூட்டுகள், நரம்புகள், பற்கள், கழுத்து, ஒற்றைத்தலைவலி, மன அழுத்த உபாதைகள் வரலாம்.

கன்னி ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்:

கன்னி ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் ஏற்றமும், மாற்றமும் ஏற்படக்கூடிய வருடமாக இருக்கிறது. பணியிடத்தில் உயர்வு உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த பதவியும், ஊதியமும் கிடைக்கும். சிலருக்கு அயல்நாட்டு பயணவாய்ப்பு வரும். புதிய பணி மாறும் முன் நன்கு யோசித்து முடிவெடுத்தல் வேண்டும். வாழ்க்கை துணையால் நன்மைகள் நடக்கும். அசையும், அசையா பொருட்சேர்க்கை ஏற்படும். பணவரவு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும்.. தொழிலில் வளர்ச்சி உண்டாகும். ஆரோக்கியத்தில் குதிங்கால், கண்கள், வயிறு உபாதைகள் வரலாம்.

துலாம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்:

துலாம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் வார்த்தைகளில் நிதானம் இருந்தால், வாழ்க்கையில் வளம் வரும் வருடமாக இருக்கும். அதாவது, இந்த வருடம் நிதானமாக செயல்படுதல் வேண்டும். சிலருக்கு பணி சார்ந்த அயல்நாட்டுப் பயண வாய்ப்பும் உண்டு. பதவியில் மாற்றம் வரலாம். குடும்பத்துப் பெரியவர்கள் ஆலோசனை கேட்டால் சுபகாரியங்கள் கைகூடும்ஆடை, ஆபரணம் சேரும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். பெரியவர்களிடம் பேசும்போது பணிவாக பேச வேண்டும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும். ஆரோக்கியத்தில் அடிவயிறு, முதுகு, நரம்பு, கண் உபாதைகள் வரலாம்.

விருச்சிக ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்:

விருச்சிக ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்  வருடமாக இருக்கிறது. பணியிடத்தில் நீங்கள் எதிர்பார்த்த பதவி, பொறுப்பு, ஊதியம் ஆகியவை கிடைக்கும். சிலருக்கு வேலை தொடர்பான பயணம் ஏற்படும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். விலகி இருந்த உறவுகள் சேருவார்கள். பூர்வீக சொத்து சேரும். தொழிலில் வளர்ச்சி நன்றாக இருக்கும். உடனிருக்கும் யாரையும் உதாசீனப்படுத்த வேண்டாம். புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டாம். ஆரோக்கியத்தில் ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை, அஜீரணம், அடிவயிறு, கால்வலி உபாதைகள் வரலாம்.

தனுசு ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்:

தனுசு ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் கவனமாகச் செயல்பட்டால் கணிசமான நன்மைகள் கிடைக்கும் வருடமாக இருக்கிறது. எந்த சமயத்திலும் அலட்சியமும் அவசரமும் கூடாது. பணியிடத்தில் உங்கள் திறமைகள் உயர்வை பெறுவீர்கள். மேலதிகாரிகளிடம் பேசும்போது வீண் ரோஷம் வேண்டாம். அனைத்திலும் பொறுமையாக இருக்க வேண்டும். சுபகாரியங்களில் ஆடம்பர செலவை தவிர்த்து கொள்ளுங்கள். நகைகளை பத்திரமாக வைத்து கொள்ளுங்கள். தொழிலில் முறையான உழைப்பு இருந்தால் நிலையான முன்னேற்றம் ஏற்படும். புதிய முதலீடு செய்யும்போது அவசரம் வேண்டும். நன்கு யோசித்து முதலீடு செய்ய வேண்டும். வாகத்தில் செல்லும்போது கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அடிவயிறு, கழிவு உறுப்பு, முக உறுப்பு, ரத்த நாள உபாதைகள் வரலாம்.

மகர ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்:

மகர ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் எண்ணங்கள் அதிகரிக்கும் வருடமாக இருக்கிறது. நிஃனால் எதிர்பார்த்த ஏற்றமும் மாற்றமும் கிடைக்கும். உடனிருப்போரின் விசயங்களில் நீங்கள் தலையிட வேண்டாம். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.  இதனை தவிர்த்து விடாதீர்கள். ஆன்மிகப் பயணங்கள்  செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வீடு, வாகனம், ஆபரணம் வாங்குவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கழுத்து, அடிவயிறு, பற்கள், நரம்பு உபாதைகள் வரலாம். இந்த நேரம் உங்கள் திருமணம் நடந்து முடியும்.

கும்ப ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்:

கும்ப ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் அடக்கமாகச் செயல்பட்டால், அனைத்திலும் நன்மை கிட்டும் வருடமாக இருக்கும். பணியிடத்தில் பணிவாக நடந்துகொள்ள வேண்டும். கூட இருப்பவர்களின் தனிப்பட்ட விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். உங்கள் திறமையகனா உயர்வு கிடைக்கும். வாழ்க்கைத்துணை உடல்நலத்தில் கவனம் வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வையுங்கள். தொழிலில் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் தூக்கமின்மை, மன அழுத்தம், நரம்பு உபாதை, படபடப்பு உபாதைகள் வரலாம். தினமும் மன, உடற்பயிற்சி செய்வது நல்லது.

மீன ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்:

மீன ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்

மீன ராசிக்காரர்களுக்கு தலைகனம் தவிர்த்தால், தலை உயர்ந்து நடக்கும் வருடமாக இருக்கிறது. பணியிடத்தில் பொறுப்பாக செயல்பட வேண்டும். சிலருக்குப் புதிய பணிவாய்ப்பு கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் செய்வதை தவிருங்கள். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் ஒருமுறைக்கு இருமுறை படியுங்கள்.  புதிய முதலீடுகள்  செய்யுமோது நிதானமாக கவனித்து செய்யுங்கள். வாகனத்தில் செல்லும்போது வேகம் வேண்டாம். ஆரோக்கியத்தில் அலர்ஜி, அல்சர், காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம்.

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement