தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது எப்படி.?

Advertisement

Tamil Puthandu Valipadu Murai

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தமிழ் புத்தாண்டு எப்படி கொண்டாட வேண்டும் என்று தெரிந்துகொள்வோம் வாங்க. பொதுவாக, புத்தாண்டு பிறக்கிறது என்றால் அன்றைக்கு என்னென்ன நல்ல விஷயங்களை செய்கிறோம் என்பதை பொறுத்தே அன்றைய வருடம் நமக்கு அமையும். ஆகையால், புத்தாண்டு அன்று நாம் கடவுளை வழிபடுவது மிகவும் அவசியம். அதனை பற்றி இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம்.

தமிழ் புத்தாண்டு, தமிழ் வருடப்பிறப்பு, சித்திரை பிறப்பு, சித்திரை விஷூ, சித்திரைக் கனி, சங்கராந்தி என பல பெயர்களால் தென்னிந்தியாவில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். இப்போது, தமிழ் புத்தாண்டு வரப்போகிறது. எனவே, தமிழ் புத்தாண்டு அன்று எப்படி வழிபட வேண்டும்.? சித்திரை முதல் நாள் எப்படி கொண்டாட வேண்டும் என்பதை இப்பதிவில் விவரித்துள்ளோம்.

தமிழ் புத்தாண்டு வரலாறு

தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது எப்படி.?

தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது எப்படி

 • தமிழ் புத்தாண்டில் சோபகிருது வருடம் முடிந்து குரோதி ஆண்டு பிறக்க இருக்கிறது. தமிழர்கள் தமிழ் புத்தாண்டை முறையாக வழிப்பட வேண்டும் என்பதற்காக பல வழி முறைகளை வகுத்துள்ளார்கள்.
 • தமிழ் புத்தாண்டிற்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்தல், பூஜை அறையில் உள்ள பொருட்கள், தெய்வங்களின் படங்களை சுத்தம் செய்து மஞ்சள் கும்பம் இட்டு அலங்கரித்து வைக்க வேண்டும்.
 • இதனுடன், முதல் நாள் இரவு, பூஜை அறையில் முக்கனியான மா, பலா, வாழை பழங்களை வைக்க வேண்டும். இதனை தவிர்த்து வேறு பழங்களையும் வைக்கலாம். முக்கியமாக ஒரு எலுமிச்சைபழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும்.
 • மேலும், பூஜை அறையில் ஒரு கண்ணாடி, ரூபாய் நோட்டுகள் போன்றவற்றை வைக்க வேண்டும். புத்தாண்டு அன்று எழுந்து பூஜை அறையில் உள்ள கண்ணாடியில் முகத்தை பார்த்து விட்டு பூஜை அறையில் உள்ள பொருட்களை தொட்டு வணங்கிவிட்டு அன்றாட வேலைகளை செய்ய வேண்டும்.
 • வீட்டு வாசலில் கோலம் இட்டு அலங்கரித்து கதவுகளில், மஞ்சள் குங்குமம் இட்டு அலங்கரிக்கவேண்டும். புத்தாண்டு அன்று காலையில் எழுந்து நீரில் நீராடவேண்டும்.
 • மருந்து நீர் என்பது, தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திப்பிலி மற்றும் சுக்கு போன்றவை சேர்த்த தண்ணீர் ஆகும்.
 • தமிழ் புத்தாண்டு அன்று இந்த நீரில் நீராடுவதன் மூலம் நற்பலன்களை பெறலாம். குளித்ததும் பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும்.  அதன் பிறகு, சர்க்கரைப் பொங்கல் சமைத்து கடவுளுக்கு நெய்வேத்தியம் படைக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், பாசிப்பருப்பு பாயசம்,வெல்ல அவல் போன்ற இனிப்பு வகைகளும் செய்து படைக்கலாம்.
 • ​மதிய உணவில் அறுசுவையும் சேர்த்து கொள்ள வேண்டும். இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய அறுசுவைகளைக் குறிக்கும் சர்க்கரை பொங்கல், மாங்காய் பச்சடி, வேப்பம்பூ ரசம், நீர்மோர், வாழைப்பூ வடை, காரக் குழம்பு ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும்.
 • இன்பம், துன்பம், மகிழ்ச்சி, கவலை, வியப்பு என்று பலதரப்பட்ட அனுபவங்கள் கொண்டதுதான் வாழ்க்கை என்பதை உணர்த்துவதுபோல் அன்று நாம் உண்ணும் உணவு பல சுவைகளில் இருக்கும்.
 • அறுசுவை உணவுகளை சமைத்து கடவுளுக்கு படைக்க வேண்டும். அதன் பிறகு, வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும்.
 • தமிழ் புத்தாண்டு அன்று புதிய ஆடை அணிந்து கொள்ளலாம். அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று வரலாம்.
 • தமிழ் புத்தாண்டு அன்று அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.

தமிழ் புத்தாண்டு கட்டுரை

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement