தை அமாவாசை தேதி மற்றும் நேரம் 2025.!

Advertisement

தை அமாவாசை 2025 | Thai Amavasai 2025 Date and Time in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் 2025 ஆம் ஆண்டில் தை அமாவாசை எப்போது வருகிறது என்பதை கொடுத்துள்ளோம். சந்திரன் முழுமையாக மறைந்திருக்கும் நாளை அமாவாசை என்று கூறுவார்கள். சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வரும் நாளே அமாவாசை ஆகும். அமாவாசையை புதுநிலவு, மறைமதி என்று அழைப்பார்கள். அமாவாசை நாளில், முன்னோர்களை நினைத்து விரதம் இருந்து வழிபாடுவார்கள்.

அமாவாசையில் புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை, தை அமாவாசை உள்ளது. இவை அணைத்தும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்நாளில், ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்த ஆண்டு 2025 தை அமாவசை எப்போது வருகிறது என்பதை இப்பதிவின் வாயிலாக அறிந்து கொள்ளுங்கள்.

அமாவாசை அன்று ஏன் வாசலில் கோலம் போடக்கூடாது..? என்று தெரியுமா..?

Thai Amavasai Date and Time 2025 in Tamil:

தை அமாவாசை 2025 தேதி

 2025 ஆம் ஆண்டில் தை அமாவாசை ஆனது, ஜனவரி 29 ஆம் தேதி, தை 16 ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. அமாவாசை திதி ஆனது, . ஜனவரி 28 ஆம் தேதி இரவு 08.10 மணி தொடங்கி, ஜனவரி 29 ஆம் தேதி அன்று இரவு 07.21 மணிக்கு முடிவடைகிறது. அன்றைய தினம் ராகு காலம் மற்றும் எமகண்டம் நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடலாம்.  

நல்ல நேரம் – காலை 09.30 AM முதல் 10.30 AM மற்றும் மாலை 04.30 PM முதல் 05.30 PM மணி

கெளரி நல்ல நேரம் – காலை 10.30 AM முதல் 11.30 AM மற்றும் மாலை 06.30 PM முதல் 07.30 PM மணி

குளிகை – காலை 10.30 AM முதல் 12.00 PM

தர்ப்பணம் கொடுப்பவர்கள் உச்சி காலத்திற்கு முன்பாக கொடுத்து விட வேண்டும் என்பது வழக்கம்.

தை அமாவாசையில், மொத்தம் 3 விதமாக வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. தர்ப்பணம், திலா ஹோமம், பிண்ட தர்ப்பணம் போன்ற மூன்று வழிபாடு செய்யப்படுகிறது. அன்றைய தினம் முன்னோர்களின் பெயரால் தானம் அளித்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

தை அமாவாசை, நம் முன்னோர்களை வழிப்பட உகந்த நாள் ஆகும். மகாளய அமாவாசை நாளில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்க பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவார்கள். அப்படி வரும் நம் முன்னோர்கள் மீண்டும் தை அமாவாசை அன்று தான் பித்ருலோகத்திற்கு செல்வார்கள். எனவே, தை அமாவாசை நாளில்,நம் முன்னோர்களுக்கு பிடித்த விஷயங்களை மட்டுமே செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும். தை அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்யக்கூடாது என்பதை பின்வருமாறு கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement