Thai Amavasai Nalla Neram 2026 In Tamil
இப்பதிவில் 2026 ஆம் ஆண்டில் தை அமாவாசை எப்போது வருகிறது என்பதை கொடுத்துள்ளோம். சந்திரன் முழுமையாக மறைந்திருக்கும் நாளை அமாவாசை என்று கூறுவார்கள். சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வரும் நாளே அமாவாசை ஆகும். அமாவாசையை புதுநிலவு, மறைமதி என்று அழைப்பார்கள். அமாவாசை நாளில், முன்னோர்களை நினைத்து விரதம் இருந்து வழிபாடுவார்கள்.
அமாவாசையில் புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை, தை அமாவாசை உள்ளது. இவை அணைத்தும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்நாளில், ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்த ஆண்டு 2026 தை அமாவசை எப்போது வருகிறது என்பதை இப்பதிவின் வாயிலாக அறிந்து கொள்ளுங்கள்.
திதி கொடுக்க உகந்த நேரம் :
தை அமாவாசை 2026 ஜனவரி மாதம் 18 ம் தேதி வருகிறது . குறிப்பாக தை அமாவாசை ஞாயிற்றுக்கிழமை அன்று வருவது மிகவும் விஷேசமானது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 01:20 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 02:31 வரை தை அமாவாசை திதி இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புண்ணிய நதிகளில் நீராடி நண்பகல் 12 மணிக்குள் தர்ப்பணம் செய்து கொடுக்கலாம். சூரிய உதயத்திற்கு முன்பு பிரம்ம முகூர்த்தம் இருப்பதால்.சூரியன் உதையம் ஆன பிறகு கொடுக்க வேண்டும் என்று கிடையாது. பிரம்ம முகூர்த்தத்தில் செய்வது புண்ணியம் ஆகும்.
நல்ல நேரம் – காலை 07.30 AM முதல் 08.30 AM மற்றும் மாலை 03.30 PM முதல் 04.30 PM மணி
கெளரி நல்ல நேரம் – காலை 10.30 AM முதல் 11.30 AM மற்றும் மதியம் 01.30 PM முதல் 02.30 PM மணி
குளிகை – காலை 04.30 AM முதல் 06.00 PM
தை அமாவாசை வழிபடும் முறை 2026.! | Thai Amavasai Valipadu in Tamil
தை அமாவாசை:
ஒவ்வொரு அமாவாசை வரும் தினமும் மிகவும் முக்கியமானது. அதிலும் ஆடி,புரட்டாசி மற்றும் தை மாதம் வரும் அமாவாசை மிகவும் விஷேசமானது. ஆடி அமாவாசை அன்று பித்ருக்கள் பித்ரு லோகத்திலிருந்து பூலோகத்திற்கு கிளம்புவதாக ஐதீகம்.மகாளய அமாவாசை அன்று அழைக்கப்படும் புரட்டாசி அமாவாசை பித்ருக்கள் பூலோகம் வந்தடைந்து. மகாளய பட்ச காலத்தில் தங்கியிருந்து அருள் புரிவார்கள். தை அமாவாசை அன்று பித்ருக்கள் தர்ப்பணம் கொடுக்கும் தன் சந்ததிகளுக்கு நல்லுருள் வழங்கி பிதுர் லோகம் திரும்புவதாக ஐதீகம்.
அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இரைத்து செய்யும் வழிபாடும் தர்ப்பணம் ஆகும். இது ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்யலாம். தர்ப்பணம் செய்த பிறகு முன்னோர்களுக்கு இலை போட்டு முன்னோர்களுக்கு படைத்துவிட்டு சாப்பிடுவது பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவை அளிப்பது உள்ளிட்டவை தர்பணத்தில் அடங்கும்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |













